Published:Updated:

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

Published:Updated:

26-03-2010
33% இடஒதுக்கீடு...
சரோஜ் கண்பத்
பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி
பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !"

பிருந்தா கரத் பெருமித பேட்டி

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

'பாரத் மாதா' என்று இந்திய நாட்டையே பெண்ணாகப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டில்... நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் பதினான்கு ஆண்டுகளாக இழுபட்டுக் கொண்டே இருக்கிறது.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா... ஏகரகளைக்கு நடுவே மறுநாள் நிறைவேறியிருக்கிறது. ஆனால், தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் அரசியல் காய் நகர்த்தல்கள்... இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

'பெண்களுக்கு முக்கியத்துவம் வந்துவிட்டால், நம் பதவி பறிபோய்விடுமே' என்கிற குறுகிய நோக்கத்தில் சிலரும்... 33% இட ஒதுக்கீட்டிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற நல்ல நோக்கில் சிலரும் போடும் முட்டுக்கட்டைகள்தான் காரணம்.

என்றாலும் பாதி கிணறு தாண்டிவிட்டதையே வெற்றியாக பலரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா கரத் முன்பாக சில கேள்விகளை நாம் வைத்தோம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் மனைவியான இவர், இப்படியரு மசோதா நிறைவேற வேண்டும் என ஆரம்பம் முதல் முனைப்புக் காட்டி வருபவர்.

''இந்த 33% ஒதுக்கீடு பெண் சமூகத்துக்கு என்ன பலனைத் தரும்?''

''இப்போதைய நிலைமையில், அரசியலில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்போதுள்ள மக்கள்தொகையைக் கணக்கிட்டால் 11% சதவிகிதம் பெண்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 50% இருக்கும் பெண்களுக்கு இப்படி குறைவான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது அநியாயம். அதை இந்தச் சட்டம் நிவர்த்தி செய்யும்.

பெண்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் மற்றும் உரிமையை இது பெற்றுத் தரும். பெண்கள், தற்போது ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் பணியாற்றி பெற்றுவரும் அனுபவங்களைப் பார்க்கும் போது, அவர்களின் பங்களிப்புகள் சிறப்பாகவும் பெருமையளிப்பதாகவும் உள்ளன. அரசியலில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் ஒரு நாட்டைச் சிறப்பாக மாற்றி அமைக்க முடியும் என்பதற்கு இவை முன் உதாரணங்கள். அதேசமயத்தில், இந்தச் சட்டம் சமூக பொருளாதாரத்தை உடனடியாக மாற்றிவிடும் என்று சொல்லிவிட முடியாது. இந்த இடஒதுக்கீடு, அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, அது சமூக பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும்.’’

''உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் படித்த, உயர்குடி பெண்கள்தான் பயன் அடைவார்கள் என்கிறார்களே?''

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி

''இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள நிலைமையை ஒப்பிட்டு பார்த்தால், மிக பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இவர்கள், ஏகபோகமாக பதவிகளை அனுபவித்து வந்த உயர்ஜாதி இனத்தைச் சேர்ந்தவர்களை, தனிப்பட்ட முயற்சிகளால் முறியடித்து அந்த இடங்களைப் பிடித்துள்ளனர். ஆனால், இதில் ஆண்கள் அளவுக்கு, அந்த இனப் பெண்கள் பயனடையவில்லை. இந்த மசோதா அத்தகைய பலனை நிச்சயமாக கிடைக்கச் செய்யும். மைனாரிட்டி இனத்தவர்களைப் பொறுத்தவரை போதிய வாய்ப்பு இல்லாமலிருப்பது உண்மைதான். அனைத்து அரசியல்கட்சிகளும் இதுகுறித்து பேசி முடிவெடுக்க வேண்டும்.''

''அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு பத்து சதவிகிதம் வரைதானே... அதுமட்டுமல்ல, இந்திய பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகமாயிற்றே... என்றெல்லாம் வரும் கருத்துக்கள் பற்றி?''

''உலக அளவில் பார்த்தோமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பைப் பொறுத்தவரை இந்தியா நூற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சில நாடுகளில் ஐம்பது சதவிகிதம் வரையில்கூட இடஒதுக்கீடு அமல்படுத்தியுள்ளனர். அப்படிஇருக்க, எதற்காக அமெரிக்காவை முன்னுதாரணமாக எடுக்க வேண்டும்? பெண்கள்தான் வீட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்பது போன்ற கலாசார தடைகள்தான் நம் நாட்டுக்கே பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. அதையெல்லாம் உடைத்தெறிய வேண்டும். குடும்பம் என்பதில் ஆண்களுக்கும் சரிபாதி பொறுப்பு உண்டு. அதையறிந்து அவர்கள் செயல்படும்போது, பெண்களுக்கான குடும்பச் சுமைகள் குறைந்து, பெண்களின் திறமை வெளிப்படும். அது, இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சிக்கே உறுதுணையாக இருக்கும்.''

''இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது, காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கிடைத்த வெற்றியா?''

‘’காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. ஆகிய இரு தேசியக் கட்சிகளுமே இதில் உரிமை கோர முடியாது. மாநில, மற்றும் தேசிய கட்சிகள் இணைந்து, தேவ கௌடாவை பிரதமராக வைத்து கூட்டணி ஆட்சி நடத்திய காலகட்டத்தில்தான் முதன் முதலில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பலமாக நின்றன. அத்தகைய மசோதா சாகடிக்கப்படாமல், இன்று மாநிலங்களவையில் நிறைவேறியதற்கு முக்கிய காரணம்... பெண்கள் இயக்கங்கள் பலவும் தொடர்ந்து போராடியதுதான். உண்மையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு ஆர்வம் இருந்தால், இந்தக் கூட்டத் தொடரிலேயே மக்களவையில் இதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி -யைப் பொறுத்தவரை, அவர்கள் போடும் போலிச் சண்டைக்கு இந்த மசோதாவைப் பயன்படுத்துவதால்தான் 14 ஆண்டு காலமாக இது நிறைவேறாமல் இருந்தது. பெண்கள் இயக்கங்களின் தொடர் போராட்டம், இந்த அரசாங்கத்துக்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்தச் சட்டத்தை அமல்படுத்த வைக்கும்.'

பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி
-படங்கள் சஜத் சௌகான்
பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி
பெண்கள் வளர்ந்தால்தான்...இந்தியாவே வளரும் !ி
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism