Published:Updated:

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

Published:Updated:

26-03-2010
கோவிந்த் பழனிச்சாமி
கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !
கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலங்க வைத்த கைத்தறி...கை கொடுத்த கணிப்பொறி !

பாதை காட்டிய பஸ் பயணம்

'நட்பு' என்பது எதிர்பாராத தருணங்களில் மலரும் பூ! அதிலும், ஏதோ ஒரு பயணத்தில், சக பயணி சில மணி நேரங்களில் நண்பராவது... குறிஞ்சிப் பூ! அப்படி ஒரு பேருந்து நட்'பூ'தான் நாம் சந்திக்கப்போவது!

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

கோயம்புத்தூர் மாவட்டம், நெகமம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி குடும்பத்துக்கும், சிறுமுகையைச் சேர்ந்த காரப்பன் குடும்பத்துக்கும் இடையே நட்பு மலர்ந்த இடம்... கோவை அரசுப் பேருந்து ஒன்றில்! இந்த அறிமுகம் பூங்கொடிக்கு ஒரு நட்பை மட்டும் தரவில்லை... வாழ்க்கைக்கான விடியலையும்தான்! தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த நாளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் பூங்கொடி...

"எங்களுக்கு நெசவுதான் தொழில். என் வீட்டுக்காரர் தறி ஓட்ட, நான் கைத்தறி சேலைக்கான டிசைன்களை கையால கிராஃப் ஷீட்ல வரைஞ்சு, அதுக்கு அடியில அட்டை வச்சு துளை போட்டு, அதை தறிகளுக்கு கொடுக்கற வேலையை செஞ்சுட்டு இருந்தேன். ரொம்ப குறைவான வருமானம்தான்.

அப்போதான் ஒரு முறை கோயிலுக்குப் போயிட்டு பஸ்ல திரும்பிட்டு இருக்கும்போது, எங்க கைத்தறி பிழைப்பை பத்தி நானும் என் வீட்டுக்காரரும் புலம்பிட்டு இருந்ததைக் கேட்ட பக்கத்து ஸீட்டுக்காரர், 'நானும் கைத்தறிப்பட்டு உற்பத்தியாளர்-தான்'னு சொல்லி எங்க பேச்சுல இணைஞ்சாரு. அவருதான் காரப்பன் அண்ணா. குடும்பத்தோட ஆழியார் அணைக்கு போயிட்டு இருந்தவரு, எங்களோட தொழில் நிலவரத்தை அக்கறையா கேட்டுக் தெரிஞ்சுக்கிட்டாரு.

அந்த பஸ் இரைச்சலையும் மீறி, கம்ப்யூட்டர்ல கைத்தறி டிசைன் போடறதைப் பத்தி எங்கிட்ட பொறுமையா விளக்கினாரு. 'அய்யோ அண்ணா... நான் ஏழாவதுதான் படிச்சிருக்கேன்...'னு பதற, அவரோட மனைவி மணியம்மை, 'அதனால என்னம்மா...? தெரிஞ்சுட்டா போச்சு'னு எனக்கு நம்பிக்கையா பேச, அவரோட பசங்க கம்ப்யூட்டர் சென்டர் பத்தின விவரங்களை-எல்லாம் சொல்லி, சோமனூர்ல இருக்கற கைத்தறி டிசைனிங் சொல்லித்தர்ற ஒரு கம்ப்யூட்டர் சென்ட்டரோட அட்ரஸ§ம் கொடுத்தாங்க. இதுக்கு நடுவுல, எங்க புள்ளைங்களும் அவங்க குடும்பத்தோட நல்லாவே ஒட்டிக்கிட்டாங்க.

நாங்க இறங்கறதுக்கான இடம் நெருங்க, 'பூங்-கொடி... எங்கள இதோட மறந்துடக்கூடாது. இனி நாம குடும்ப நண்பர்கள். அடிக்கடி போன்ல பேசு...'னு காரப்பன் அண்ணா சொல்ல, 'புள்ளைங்கள கூட்டிட்டு வீட்டுக்கு வாம்மா...'னு மணியம்மை அம்மா சொல்ல... பஸ்லயிருந்து இறங்கும்போது எனக்கும் என் வீட்டுக்காரருக்கு ஒரு நல்ல நட்பு கிடைச்ச திருப்தி!'' என்று பரவசப்பட்ட பூங்கொடி, அந்த நட்பு தன் வாழ்க்கைக்கு ஒரு ஏணியானதை பகிர்ந்து-கொண்டார்.

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !

"ஒரு வாரம் கழிச்சு, காரப்பன் அண்ணாகிட்ட இருந்து போன். 'கம்ப்யூட்டர் சென்டர்ல சேர்ந்துட்டி-யாமா..?'னு கேட்க, 'இல்லண்ணா...'னு இழுத்தேன் நான். உடனே அவர், 'தம்பிகிட்ட போனைக் கொடு...'னு சொல்லி எங்க வீட்டுக்காரர்கிட்ட பேசினாரு. 'பூங்கொடிய எப்படியாச்சும் கம்ப்யூட்டர் சென்டர்ல சேர்த்துவிட்டுருங்க தம்பி'னு அவருகிட்டயும் சொல்ல, 'அவர் நமக்காக இவ்ளோ அக்கறைபட்டு சொல்றாரே... அதுக்காகவாச்சும் நீ படிக்கணும்'னு சொன்ன என் வீட்டுக்காரர், என்னை அந்த கம்ப்யூட்டர் சென்டர்ல உடனடியா சேர்த்துவிட... மூணு மாசம் கிளாஸ் போனேன்'' என்று பூங்கொடி நிறுத்த, தொடர்ந்தார் கணவர் கிருஷ்ணசாமி...

"அடிக்கடி காரப்பன் அண்ணாவும், மணியம்மை அம்மாவும் போன் பண்ணி எங்களையும் எங்க புள்ளைங்களையும் விசாரிச்சுக்குவாங்க. பூங்கொடி கிளாஸ் முடிச்சப்போ, 'எப்படியாச்சும் கடன ஒடன வாங்கி ஒரு கம்ப்யூட்டர் வாங்கிடுங்க. அதுக்கு அப்பறமும் நான் உங்களுக்கு வழி காட்டறேன்'னு சொன்ன காரப்பன் அண்ணாவுக்கு இந்தத் தொழில்ல நிறைய அனுபவங்கறதால, நாங்களும் அப்படியே செஞ்சோம்!

மழைக்குகூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத அவரு, 'கைத்தறி களஞ்சியம்'ங்கற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கறதோட, இந்தத் தொழில்ல பலருக்கும் வழிகாட்டியா இருக்கறவரு. காலேஜுலயெல்லாம்கூட கிளாஸ் எடுக்கப் போவாரு. பூங்கொடி கம்ப்யூட்டர்ல பண்ணின டிசைனை எடுத்துட்டுப்போய், காரப்பன் அண்ணா சொன்ன மாதிரி பட்டுப் புடவை உற்பத்தி-யாளர்கள்கிட்ட ஆர்டர் கேட்க, நிறைய ஆர்டர்கள் கிடைச்சது'' என்று கிருஷ்ணசாமி நிறுத்த,

"என்னோட கற்பனைத் திறனும் கடின உழைப்பும் கைகொடுக்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நூல் பிடிச்சு வளர்ந்து, இப்போ மாசம் இருபதாயிரம் வரை வருமானம் வருது. எல்லாத்துக்கும் காரணம் காரப்பன் அண்ணாவோட நட்புதான்! ரெண்டு வருஷத்துக்கு முன்னால பஸ்ல பக்கத்து ஸீட்டுக்காரர்கிட்ட நாங்க பேசாம போயிருந்தா, இந்நேரம் எங்க குடும்பம் அதே சிரமத்துலதான் இருந்திருக்கும்!'' என்று பூங்கொடி, தன் வாழ்க்கைக்கு வெளிச்சம் பாய்ச்சிய அந்த நட்புக்கு நன்றி பேச... அவர்கள் நட்பின் பக்கங்களை புரட்டினார் காரப்பன்...

"எனக்கு வயது அறுபத்தி ஒண்ணு. பூங்கொடிக்கு வயசு முப்பது! என் மக வயசுல எனக்கு ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கறது, ரொம்ப அபூர்வமான விஷயம்தான். என்னோட மனைவி, ரெண்டு பொண்ணு, ரெண்டு பசங்களுக்கும் பூங்கொடி குடும்பம்னா தனி பாசம். பூங்கொடி கம்ப்யூட்டர் வாங்கினப்போ, அவங்க ஆபீஸ் திறப்பு விழாவுக்கு முதல் பத்திரிகை என் குடும்பத்துக்குதான் வெச்சாங்க. என் கடைசி பொண்ணோட கல்யாணத்துக்கு பூங்கொடியும், கிருஷ்ணசாமியும் அவங்களோட பசங்களையும் கூட்டிட்டு, பொறந்த வீட்டுக்கு வந்துட்டு போற மாதிரி நிறைவான மனசோட வந்துட்டுப் போனாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போறப்போயெல்லாம், அவங்க சாப்பாடு போடற வரைக்கும் எல்லாம் காத்திருக்க மாட்டேன். நேரா அடுப்படிக்கு போய், தட்டடெடுத்து, சாப்பாடு போட்டு சாப்பிடுவேன்.

அந்தளவுக்கு உரிமையை, உறவை அந்த நாப்பத்தி அஞ்சு நிமிஷ பேருந்து நட்பு எங்க குடும்பங்களுக்கு கொடுத்திருக்கு!'' என்றார் பெருமையுடன்!

இனி பயணத்தில் புத்தகங்களுக்குள் முகத்தைப் புதைத்து, சக பயணிகளைப் புறக்கணிக்காதீர்கள்! அவர்-களுள் உங்களுக்கு ஒரு நண்பர் காத்திருக்கலாம்!

கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !
 
கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !
கலங்க வைத்த கைத்தறி கை கொடுத்த கணிப்பொறி !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism