Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

26-03-2010
நமக்குள்ளே !
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே ....

ராக்கெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இந்தியாவில் செயல்படுத்திக் காட்டிய பிறகு, நிருபர்களைச் சந்தித்தார் அப்துல் கலாம். அப்போது, 'உங்களுக்கு எப்போது விமானங்கள், ராக்கெட்டுகள் மீது ஈர்ப்பு வந்தது?' என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல் கலாம் சொன்ன பதில் - 'என்னுடைய பள்ளி வயதில் பறவைகளின் இயக்கம் பற்றிய பாடத்தை நடத்திய ஆசிரியர், வகுப்பறைக்கு உள்ளேயே அதை முடித்துவிடாமல், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பறவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, கண்கூடாக அவற்றின் இயக்கம் பற்றி விளக்கினார். அதையெல்லாம் பார்க்கவும், கேட்கவும் பிரமிப்பாக இருந்தது. அதிலிருந்தே ஒரு விமானியாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழ, அதைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தேன். கடைசி வரை அது கைவரப் பெறவில்லை. ஆனால், ராக்கெட் தொடர்பான தொழில்நுட்பங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். எல்லாவற்றுக்கும் முதல் விதை விழுந்தது... அன்று எங்கள் ஆசிரியர் நேரடியாக பறவைகளைக் காட்டி பாடம் எடுத்ததுதான்.'

எல்லாவற்றையுமே புத்தகங்களிலும் இணையதளங்களிலும் படித்துவிட முடியும். ஆனால், முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால்... நேரடி அனுபவத்தால் மட்டும்தான் முடியும். அதை அன்றைக்கு அவருக்கு தந்தது... வகுப்பறையை விட்டு வெளியில் வந்ததுதான்.

அத்தகைய அனுபவம் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே அவசியம்தான். அதைத்தான் தருகிறது சுற்றுலா! புதிதாக ஒரு ஊரில் போய் இறங்கிய நொடியே... பலவற்றைப் பற்றியும் அத்தனை நாட்களாக நாம் கட்டி வைத்திருந்த 'கோட்டை' பொலபொலவென இடிந்து விழுவதை நாம் உணர முடியும் - ஈகோ முதற்கொண்டு! அதுதான் சுற்றுலா சொல்லித்தரும் பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

அதற்காக சுற்றுலா என்றதுமே, 'பக்கத்து வீட்டுக்காரங்க இந்த வருஷம் குலு-மணாலி போயிட்டு வந்திருக்காங்க. கொடுத்து வெச்சவங்க. நமக்கெல்லாம் அந்த அளவுக்கு வசதியில்லையே' என்று அலுத்துக் கொண்டு முடங்கிப் போகத் தேவையில்லை. குலு-மணாலி போனால்தான் சுற்றுலா என்பதில்லை. வசதிக்கு ஏற்றபடி, பக்கத்திலிருக்கும் கும்பகோணம்-மன்னார்குடி போனாலும் அங்கேயும் நீங்கள் தெரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். சுற்றுலா என்பதுதான் முக்கியமே தவிர... எந்த இடம், எவ்வளவு பணம் என்பதெல்லாம் முக்கியமே அல்ல.

'குனியும்போது புத்தகம் படி... நிமிரும்போது உலகம் படி' என்பார் கவிஞர் வைரமுத்து. அப்படி உலகத்தைப் படிக்க அநேக விஷயங்களை உங்களுக்காகத் திரட்டி வைத்திருக்கிறோம் உள்ளே. உற்சாகமாக புத்தகத்துக்குள் உலாவுங்கள்... நேரம் ஒதுக்கி நிஜத்திலும் தரிசியுங்கள்!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....


ஆசிரியர்

நமக்குள்ளே ....
 
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism