Published:Updated:

டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !

டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !

டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !

டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !

Published:Updated:

26-03-2010
 
ஆர்.ஷஃபி முன்னா
டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !
டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லிக்குப் போறீங்களா... இதைப் படிங்க!

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சுற்றுலாவாசிகளுக்கு கிடைக்கும் குதூகல அனுபவங்கள் ஏராளம். ஆனால், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஏமாற்றும் கும்பல்களும் இங்கு தராளம்! எனவே, அவர்களிடமிருந்து உஷாராக இங்கு வழி சொல்கிறார்கள் கடந்த பதினான்கு ஆண்டுகளாக இங்கு 'குமார் டிராவல்ஸ்' என்ற டூரிஸ்ட் ஏஜென்ஸி நடத்திவரும் ஆசைத்தம்பி மற்றும் நல்லையன்!

டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !
ஆசைத்தம்பி - நல்லையன்!

"டெல்லி வந்து இறங்கியதும், நீங்கள் ஏற்கெனவே 'புக்' செய்திருக்கும் ஹோட்டலுக்கு போன் செய்து கன்ஃபர்ம் செய்யவோ, வழி கேட்கவோ... பப்ளிக் போன் பூத்களுக்கு செல்லாதீர்கள். ஏனெனில், அந்த பூத் நபர், வேறு எண்களை டயல் செய்து உங்களிடம் கொடுத்து விடுவார். அதில் பேசுபவர், 'இப்போ ரூம் வேக்கன்ட்டா இல்ல. எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு ஹோட்டல் ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கு. அங்க ரூம் புக் செஞ்சு தர்றோம்' என்பார். விஷயம் என்னவென்றால், அப்படி அவர் சொல்லும் ஹோட்டலில் நீங்கள் தங்கும்பொருட்டு, அதற்கான கமிஷன் பூத் நபருக்கு கிடைக்கும்.

அடுத்து ஆட்டோ, டாக்ஸிவாலாக்கள். உங்களிடம் பேச்சுக் கொடுக்கும் ஓட்டுனர், 'சார், நீங்க புக் செஞ்சிருக்க ரூமுக்கு என்ன வாடகை... அவ்ளோவா? அதைவிடக் குறைவா ஒரு ஹோட்டல் இருக்கு!' என்பார். அல்லது, 'சாரி சார், போற வழியில மெட்ரோ ரயில் பாதை போட்டிட்டிருக்காங்க. ரெண்டு கிலோ மீட்டர் நடந்து போகணும்' என்றெல்லாம் கதை விடுவார் தனக்கு ரெகுலராக கமிஷன் தரும் ஹோட்டலில் உங்களை அடகு வைக்க!

ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது, சில பிரபலமில்லாத கோயில்களிலும் நீங்கள் செல்லும் டூரிஸ்ட் வண்டிகள் நிறுத்தப்படும். அதன் உள்ளே செல்லும் உங்களிடம் கோயிலின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிக் கொண்டு, நன்கொடை வசூல் செய்ய முயல்வார்கள். உங்களை அங்கு 'சேர்த்த' வாகன டிரைவர் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை இந்த 'நன்கொடை' கமிஷன் போய்விடும்.

'வெயிட்டிங் லிஸ்ட்' அல்லது 'ஆர்.ஏ.சி.' நிலையில்இருக்கும் உங்கள் டிக்கெட்டுகளை 'கன்ஃபர்ம்' செய்ய நீங் கள் துடிக்கையில், ரயில் நிலையங்களின் அருகில் உள்ள 'டிராவல்ஸ்' போர்டுகளைப் பார்த்துவிட்டு அவர்களை அணுகுவீர்கள். 'எமர்ஜென்ஸி கோட்டா போட்டு கன்ஃபர்ம் செஞ்சு தர்றோம்' என்பார்கள். உண்மையில் தானாக கிளியரா கும் உங்களின் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு உங்களிடம் ஒரு விலை வாங்கி விடுவார்கள்!" என்றவர்கள்,"இது டெல்லிக்கு மட்டுமல்ல... பெரும்பாலும் எல்லா ஊர்களுக்குமே பொருந்தும்" என்றும் சொன்னார்கள் அக்கறையோடு!

டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !
-படங்கள் எஸ்.சபா
டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !
டெல்லிக்குப் போறீங்களா...இதைப் படிங்க !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism