Published:Updated:

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

Published:Updated:

26-03-2010
அலை... அருவி... ஆறு...
அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !
அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகாக விரியும் வலை...

அதுவே உயிருக்கு உலை!

சுற்றுலாஎன்றாலே தன்னையும் மறந்து குதூகலத்தில் கும்மாளம் போடும் மனது! ஆனால், 'தடை செய்யப்பட்ட பகுதி'க்குள் குறுகுறுப்புடன் பிரவேசிப்பது, 'ரோப் கார் ஓட ஆரம்பித்துவிட்ட பிறகு எழக்கூடாது' என்றால், 'எழுந்துதான் பார்ப்போமே' என்று குறும்பு செய்வது, மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் இருக்கும் விலங்குகளைச் சீண்டுவது என அளவு கடந்த அந்த உற்சாகமே உயிருக்கு ஆபத்தை அழைத்துவிடக் கூடாதுஅல்லவா?!

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

எதிர்பாராத தருணங்களில் நடந்தால் அது விபத்து. அறிந்தும் நடந்தால் அது விபத்து இல்லை... நம் மெத்தனம். அப்படி மெத்தனத்தால், அளவுக்கு மீறிய ஆர்வத்தால் சுற்றுலாத் தலங்களில் இருக்கும் அபாய எச்சரிக்கை போர்டுகளை உதாசீனப்படுத்தி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்பதே உண்மை. சுற்றுலாவுக்குச் சுறுசுறுப்பாக ரெடியாகிக் கொண்டிருக்கும் உங்களுக்கெல்லாம் எச்சரிக்கை 'கம்' வேண்டுகோளாக இந்தக் கட்டுரை சமர்ப்பணம் ஆகிறது!

மெரீனாவின் மடியில்..!

உலகின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றாக இருக்கும் சென்னை மெரீனாவில், கடந்த 2007-ம் ஆண்டு மட்டும் 1,613 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள் (அடுத்தடுத்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை). இவர்களில் 1,382 பேர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்! வெளியூரிலிருந்து டூரிஸ்டாக வந்தவர்களின் எண்ணிக்கை 494. 'நமக்குத் தெரியாத கடலா...' என்று 'தில்'லாக இறங்கி தண்ணீரோடு போன சென்னைவாசிகளின் எண்ணிக்கை 1,119. கிலோ மீட்டர் கணக்கில் நீண்டு கிடக்கும் இந்த பீச்சில், நாளன்றுக்கு சராசரியாக 4 பேர் மூழ்கி இறக்கின்றனர்.

'கடலில் பாதுகாப்பாகக் குளிக்க என்ன செய்ய வேண்டும்?' என்று மெரீனா கடற்கரை யில் இருக்கும் அண்ணாசதுக்கம் காவல் நிலைய துணை ஆய்வா ளர் பரமசிவத்திடம் நாம் கேட்க, ''குளிக்கிறதா... கால் நனைக்கற தோட நிறுத்திக்கணும்!'' என்று குரலில் அழுத்தத்தைக் கூட்டி னார்.

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

'' 'ஆழமான பகுதிகள்ல கவனமா இருக்கணும்'னு முன்னயெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தோம். ஆனா, 'ஆழம் வரை இறங்கித்தான் பார்த்துடுவோமே..?'னு ஹ§ரோயிஸத்தோட போற இளைஞர்களைக் கட்டுப் படுத்த முடியாம, 'இந்த பீச்ல எந்தப் பகுதியிலயும் இறங்கிக் குளிக்காதீங்க'னு இப்ப அறிவுறுத்துறோம்; எச்சரிக்கை போர்டு வைக்கறோம்; ரோந்து போறோம். ஆனாலும், உள்ளங்கால்ல தண்ணி பட்டதுமே உற்சாகத்துல மிதக்கற மக்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாம போய் தண்ணியில பலியாகறாங்க'' என்று வேதனையுடன் கூறிய பரமசிவம்,

''பொதுவா நீச்சல் தெரியாதவன் முழுக கழுத்தளவு நீரே போதும். இங்க கடலளவு நீர் இருக்குது! உஷார்...!'' என்றார் பொருத்தமான வார்த்தைகளில்!

அருவி... அழகு... ஆபத்து!

'குளிச்சா குத்தாலம்...' - கோடை வெயில் உச்சி மண்டையைப் பிளக்கும்போது, நம் மக்களுக்கு குற்றாலம் போய் ஒரு குளியல் போடுவதென்பது அவ்வளவு இஷ்டம்! அரிய மூலிகைகளைத் தழுவி சில்லென்று கொட்டும் குற்றால அருவி... உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அருமருந்து என்பது இதன் ஸ்பெஷல்.

குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே மலை மீது உள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அருவி, ஆபத்துக்கள் நிறைந்தது. எனவே, 'ஆபத்தான இடம். இங்கு குளிக்கக்கூடாது' என்று போலீஸார் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்திருக்கின்றனர். ஆனால், சுற்றுலா பயணிகளில் பலரும் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. விளைவு... ஆண்டுக்கு சில, பல உயிர்கள் அங்கே பரலோகம் போய்க் கொண்டிருக்கின்றன!

குற்றாலம் மட்டுமல்ல... அதையட்டி இருக்கும் பாபநாசத்தின் பாணதீர்த்த அருவி உள்ளிட்ட சில அருவிகளில் இப்படி உயிரிழப்பவர்களின் சடலங்களை மீட்பதையே ஒரு சேவையாக செய்து வருபவர் கண்ணன். கடந்த இருபத்தி எட்டு வருடங்களாக கிட்டத்தட்ட 2,000 உடல்களை மீட்டுள்ள இவர் நம்மிடம், ''செண்பகாதேவி அருவியைப் பொறுத்தவரைக்கும், தங்களோட 'தண்ணி' பார்ட்டிக்கு இந்த அருவிக்குப் பக்கத்துல இருக்கற காட்டைத் தேர்ந்தெடுக்கற சிலர், குடிச்ச களைப்பு தீர இங்க வந்து கும்மாளம் போடுறப்ப கால் நழுவியோ, நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் தள்ளிவிட்டு விளையாடும்போதோ, வீரத்தை காண்பிக்கிறேன்னு 'டைவ்' அடிக்கும்போதோ அருவிக்குள்ள விழுந்துடறாங்க. உள்ளுக்குள்ள கூர்மையா நீட்டிட்டு இருக்கற பாறைகள்ல தலை மோதி, பாறை இடுக்குகள்ல உடல் சிக்கினு பரிதாபமா பலியாகறாங்க. போன வருஷம்கூட இங்க குளிச்சு செத்துப்போனவங்களோட எண்ணிக்கை நாலு'' என்றார் சலனமில்லாமல்.

இவர் சொல்லும் கணக்கு... சமீபகாலமாக போலீஸார் மற்றும் வனத்துறையினரின் கடும் கண்காணிப்பு காரணமாக குறைந்துவிட்ட கணக்கு. இல்லையென்றால்..?

பலிகொள்ளும் புதைமணல்!

காவிரி, கொள்ளிடம் ஆறுகள் பாயும் அற்புதமான சுற்றுலாத் தலம்... முக்கொம்பு! ஆனால், இங்கிருக்கும் புதைமணலில் சிக்கி வருடத்துக்கு குறைந்தது 15 பேராவது இறந்து விடுகிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல். எச்சரிக்கை போர்டு, தடுப்பு கம்பிகளை எல்லாம் மீறி குளித்து கும்மாளம் போடுவதற்காகச் சென்று, கடைசியில் சிலர் உயிரை விடுவதுதான் சோகம்.

இந்தப் பகுதி மீனவர்கள் நம்மிடம், ''இந்த ஆத்துல ஒரு விதமான பள்ளங்கள் இருக்கு. தண்ணீர் பெருக்கெடுத்து வர்ற காலங்கள்ல அந்தப் பள்ளங்களை மணல் மூடி, ஏதோ மணல் திட்டு மாதிரி தெரியுது. ஆத்துத் தண்ணியில ஆழம்வரை போய் ஆட்டம் போடறவங்க அதுல காலை வைக்க, அந்தப் பள்ளம் காலை உள்ளே பிடிச்சு இழுத்து, அடுத்தடுத்து பொங்கி வர்ற மணலும் அப்படியே ஆளைப் போட்டு அமுக்கிடுது. என்னதான் நீச்சல் தெரிஞ்சவரா இருந்தாலும், தண்ணிக்குள்ள புரட்டிப் போட்டு மூச்சு முட்ட வச்சு, கடைசியில பொணமாத்தான் வெளிய விடும்.

ரெண்டு, மூணு மாசத்துக்கு முன்னகூட மெட்ராஸ§ல இருந்து வந்த ரெண்டு காலேஜ் பசங்க அப்படிதான் செத்துப் போனாங்க. டூர் வர்றவங்கள பார்த்து நடக்கச் சொல்லி எழுதுங்க சார்...'' என்றார்கள் அக்கறை பொங்க!

சுற்றுலா என்பது சந்தோஷத்துக்காகத்தான், சாகசத்துக்காக அல்ல என்பது எப்போதும் நினைவில்இருக்கட்டும்!

அழகர்கோவில் அட்டூழியம்!

தமிழகத்தின் பல டூரிஸ்ட், பிக்னிக் ஸ்பாட்களிலும் தனிமை தேடி பறக்கும் காதல் ஜோடிகள், புதுமணத் தம்பதிகளில், பையனை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை, மொபைல் போனை, பர்ஸை, நகையையெல்லாம் குறிவைக்கும் அட்டூழியங்களும் நடந்து கொண்டிருப்பது சகஜம்! அந்த வகையில், அழகர்கோவிலில் நடந்த இந்தக் கதையைக் கேட்டால் நடுநடுங்கிப் போய்விடுவீர்கள்.

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !

மதுரை அருகே காடு, மலை, குரங்கு, அருவி, கோயில் என வித்தியாச அனுபவம் தரும் டூரிஸ்ட் ஸ்பாட்... அழகர்கோவில்! இங்கு வரும் டூரிஸ்ட்களில் கணிசமான எண்ணிக்கையில், சுற்றுப் புற ஊர்களில் இருந்து வரும் 'காதல் ஜோடி'களும் இருப்பார்கள்! கோயிலை நோக்கி மலையேறும் அந்தக் காட்டுக்குள், அகன்று பெருத்த ஒரு மரத்தின் தூரில், தனிமையில் கதைத்துக் கொண்டுஇருப்பவர்களை சமீப காலமாக குறி வைத்துக் கிளம்பியிருக்கிறது ஒரு கும்பல்!

"பேரையெல்லாம் போட்டுடாதீங்க சார்..." என்றபடியே ஆரம்பித்தார் ஒரு கல்லூரி மாணவர்.

''பக்கத்து ஊர்ல ஒரு இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கற என் ஃப்ரெண்டும் அவனோட லவ்வரும் பைக்ல கிளம்பி அழகர்கோவிலுக்குப் போனாங்க. மலையில இருந்து இறங்கி வந்தப்போ, அந்தக் காட்டுக்குள்ள ஒரு ஒதுக்குப்புறமான எடமாப் பார்த்து உட்கார்ந்து சிரிச்சு பேசிட்டு இருந்துருக்காங்க. அப்போ தீடீர்னு அங்க வந்த நாலு பேரு, 'என்ன லவ்வா..?'னு கேட்டு அவங்கள சுத்தி நின்னுருக்காங்க. இவங்க சுதாரிச்சு எழுந்திரிக்கறதுக்குள்ள ஒருத்தன் என் ஃப்ரெண்டோட தலையப் பிடிச்சு மரத்துல மோத, அவன் மயக்கமாயிட்டான். அப்பறம் அவங்க அந்தப் பொண்ணை..."

- வார்த்தைகள் உடைந்துவிட்டது அவருக்கு.

ஆகவே... ஜோடியாக செல்பவர்கள், தனிமை தேடிச் சென்று சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல், ஆள் நடமாட்டமுள்ள இடங்களிலேயே 'கதையுங்கள்'!

அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !
-இரா.மன்னர்மன்னன், சண்.சரவணக்குமார்,இரா.பரணீதரன்
அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !
அழகாக விரியும் வலை ...அதுவே உயிருககு உலை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism