வெற்றிலை, சித்தரத்தை, துளசி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி, காற்றாழை, கீழாநெல்லி, வேம்பு, இஞ்சி, வசம்பு, நெல்லி என்று அனைத்து மூலிகைகளையும் தொட்டியில் வளர்த்து அசத்துகிறார்.
"டாக்டருக்கே காய்ச்சல் வர்றமாதிரி, இந்த மூலிகை செடிகளுக்கும் பூச்சித் தாக்குதல் வரும்!" என்று சிரிக்கும் அகிலா, செடிகளை அதிலிருந்து மீட்பதற்கு அசத்தலாக ஒரு குறிப்பு வழங்கினார். அது
"கட்டப் புகையிலைய ஒரு இரவு தண்ணியில ஊற வச்சு, அந்தத் தண்ணிய செடிகள்ல தெளிச்சா, எப்படிப்பட்ட பூச்சியும் ஓடிடும்!"
அடுத்து, காய்கறி செக்ஷன்... பூசணி, பரங்கி, சௌசௌ, தக்காளி, வாழை, மிளகாய், முள்ளங்கி, மணத்தக்காளி, சுண்டைக்காய், வெங்காயத்தாள், புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு, பாகற்காய், கொத்தவரை என்று அது ஒரு 'மினி கோயம்பேடு'! இவற்றுக்கெல்லாம் அகிலா பயன்படுத்துவது... ஒன்லி 'ஹோம் மேட் உரம்'! தயாரிப்பு முறையை அவரே விளக்கினார்.
"மண்பாண்டங்கள்ல வீட்டுல சேர்ற மக்கும் குப்பையை சேகரிக்கணும். அது மக்கினவொடன, அதோட வேப்பம் இலை சேர்த்து காயவிட்டு, அதை உரமா |