இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், தன் நண்பன் ஞானசேகரனுடன் இணைந்து, உலகத்தில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற வேண்டி 65 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து, உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து தன் பதற்றத்தை பதிவு செய்தவர் சீனிவாச ராவ். 1987-ம் வருடம், அக்டோபர் ஐந்தாம் தேதியை, சீனிவாசராவ் மற்றும் ஞானசேகருடைய தினமாக பிரகடனம் செய்தது அமெரிக்கா! அந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர்கள் இவர்கள்தான்.
இத்தனை வருடங்களாக தேக்கமின்றி தொடரும் சீனிவாச ராவின் பயணத்தில், தன்னையும் தன் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டுள்ளவர்தான் தாமரை! இவர், பிரபல அரசியல்வாதியான பேராசிரியர் தீரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது! சுற்றுலா சிறப்பிதழுக்காக நாம் தொடர்பு கொண்டபோது பயண வழியில் லண்டனில் இருந்தார். இனி ஓவர் டு தாமரை.
"எங்களின் இத்தனை வருட சுற்றுப் பயணத்தில், சமீபத்தில் கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம், 'இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது' என்ற தெளிவை, பதற்றத்தை, பயத்தை தந்தது!'' என்று ஆரம்பித்தவர், அந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
"அந்த மாநாட்டு அரங்குக்கு அருகிலேயே, எங்களைப் போல உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்ட சமூக நல அமைப்புகள், ஆர்வலர்கள் நடத்திய 'மக்கள் மாநாடு (The People Summit) நடந்தது. சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை வலியுறுத்திய அந்த நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நம் பூமியை பாதுகாக்க வேண்டிய மிகமுக்கிய தருணத்தில் நாம் இருப்பதை அந்த மாநாட்டின் மூலம் உணர்ந்தேன்!
நடந்து முடிந்த மாநாட்டை 'வெற்றி' என்று வகைப்படுத்துவது சரியாக இருக்காது. அதற்கு காரணம், அமெரிக்காவைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான திட்டவட்ட தீர்வும் இல்லாததே. அதுமட்டுமன்றி, இந்த கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 26 முக்கிய நாடுகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்களான பல மூன்றாம் உலக நாடுகள் புறந்தள்ளப்பட்டு விட்டன.
கூடவே, 'இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவிதமான சட்டதிட்டத்தையும் உருவாக்காத வகையில் இந்த மாநாட்டை தங்களுக்கு சாதகமாக திருப்பி குழப்பம் செய்து விட்டன' என்று வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அவசியமான கட்டுப்பாட்டைக்கூட நம் அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்த பிளாஸ்டிக் பைகள்தான் கழிவுநீர் வாய்க்காலில் சென்று நீர் செல்வதை தடுத்து விடுகிறது. தேங்கிய சாக்கடை நீரின் வாயிலாகத்தான் பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் பரவுகின்றன என்பதை நாம் சரிவர இன்னும் உணராமல் இருக்கின்றோம். கழிவு வாய்க்கால்கள் அடைத்துக் கொள்வதால், மழைக் காலங்களில் நமது நகரங்கள் அனைத்தும் வெள்ளப் பெருக்காகி விடுவதை பார்த்து வருகின்றோம். இந்த சிறுசிறு விஷயங்களில்கூட கட்டுப்பாடு பழகாத நாமும், நமது அரசும், அணு உலைகளால் ஆபத்து, கரியமிலவாயு கட்டுப்பாடு, பருவநிலை மாறுபாடு, புவிவெப்பநிலை உயருதல் என்கிற அதிபயங்கர ஆபத்துகளையெல்லாம் எப்படி சரிவர புரிந்துகொள்ளப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியவர்,
|