Published:Updated:

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

Published:Updated:

26-03-2010
 
நாச்சியாள்
சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....
சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு....

கோடிகளைக் கொட்டும் மெடிக்கல் டூரிஸம் !

"கிட்னி டிரான்ஸ்பிளான்டேஷனா... கோ டு அமெரிக்கா...''

"பெயர் தெரியாத வியாதியா...? ஃப்ளைட்ட பிடி... ஐரோப்பா, அமெரிக்காவுக்கு! அங்கதான் அட்வான்ஸ்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட் கிடைக்கும்...''

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

10, 15 வருடங்களுக்கு முன் நம் இந்திய மக்கள், பெரிய பெரிய நோய்களுக்குப் பயந்து, பதறி பேசிய வார்த்தைகள் இவை.

ஆனால், அறிவியலின் அதீத வளர்ச்சியும் இந்திய மருத்துவத் துறையினரின் தேடல் முயற்சியும் இன்று நிலைமையைத் தலைகீழாக மாற்றிஇருக்கிறது. இன்று, வெளிநாட்டினர் மருத்துவத்துக்காக இந்தியாவுக்கு வருகின்றனர்! மருத்துவத்துக்காக வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவதால் இந்திய சுற்றுலாத் துறையும் வளர்ச்சிஅடைகிறது. அதனை அழகாக 'மெடிக்கல் டூரிஸம்' என்கிறார்கள்.

இந்த 'மெடிக்கல் டூரிஸத்'தின் கூறுகள் பற்றி பேசினார், இத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், தனியார் மெடிக்கல் டூர் ஏஜென்ஸி ஒன்றின் இயக்குநருமான சென்னை யைச் சேர்ந்த சதீஷ்.

" 'மெடிக்கல் டூரிஸம்'ங்கற இந்த வார்த்தை, நமக்குப் புதுசா இருக்கலாம். ஆனா, ரோமாபுரி ராஜ்யம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்னு அரசர்கள் காலத்திலேயே மருத்துவத்துக்காக நாடு விட்டு நாடு போன சம்பவங்கள் வரலாற்றுல உண்டு. இன்னிக்கு, அதுவே கொஞ்சம் மாடர்னா வளர்ந்திருக்கு. இப்போ உலக அளவுல மெடிக்கல் டூரிஸத்துல இரண்டாம் இடத்துல இந்தியா இருக்கறது... நமக்கான பெருமை! இதுல மும்பை, டெல்லிக்கு அடுத்து மூணாவது இடத்துல சென்னை இருக்கு'' என்று நம் புருவங்களை உயர்த்த வைத்த சதீஷ், தொடர்ந்து அதன் வீச்சை விளக்கினார்!

"சென்னையில உலகத் தரம் வாய்ந்த ஸ்டார் ஹாஸ்பிட்டல்ஸ் நிறைய இருக்கு. அதுல தங்கி சிகிச்சை எடுத்துகறதுக்காக இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, ஃபிஜி தீவு, நைஜீரியா, அரபு நாடுகள்ல இருந்து அதிகம் பேர் வர்றாங்க'' என்றவர், இவர்களெல்லாம் நம்பிக்கையுடன் இங்கே பயணப்படுவதற்கான காரணங்கள் பற்றி பேசினார்.

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....

"உலக நாடுகளோட ஒப்பிட்டா, குவாலிட்டியான ஹாஸ்பிட்டல்ஸ், அந்தந்தத் துறையில பயிற்சியும் அனுபவமும் பெற்ற டாக்டர்கள், நர்ஸ்கள் நம்மகிட்ட அதிகம். மத்த நாடுகள் மாதிரி டாக்டர்களோட அப்பாயின்ட்மென்ட்டுக்காக நிறைய நேரம், நாள் காத்திருக்க வேண்டியதில்ல. எல்லாத்தையும்விட ரொம்ப ஈர்ப்பான ஒரு விஷயம்... குறைந்த விலையில தரமா கிடைக்கற மருத்துவம். மத்த நாடுகள்ல ஒரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சைக்கு 10 ரூபாய் செலவு பண்ணணும்னா, இங்க 3 ரூபாயிலயே திருப்தியான ட்ரீட்மென்ட் கிடைக்குது! இதை வச்சே... வெளிநாட்டு நோயாளிகளுக்கும் இங்க இருக்குற மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தித் தர, நிறைய 'மெடிக்கல் டூரிஸம் ஏஜென்டு'கள் இருக்காங்க'' என்றவர், இதற்குள் இயங்கும் அந்த 'கார்ப்பரேட் பிஸினஸை'யும் விளக்கினார்...

"ஏஜென்டுகள், இங்க வர்ற வெளிநாட்டு நோயாளிகளோட முழு விவரத்தையும் சேகரிச்சு, அவங்களுக்கு என்ன நோய், எந்தச் சிறப்பு மருத்துவரைப் பார்க்கணும், சிகிச்சைக்கு எத்தனை நாட்கள் ஆகும், எங்க தங்கலாம்... இதுபோன்ற விஷயங்களைத் திரட்டிக்குவாங்க. அவங்கவங்க பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி ஏ, பி, சி பேக்கேஜுகள் இருக்கு. அப்புறம், ஏர்போர்ட்ல அந்த ஃபாரின் ஃபேஷன்ட்ஸ்ஸை பிக்-அப் பண்றதுல இருந்து ட்ரீட்மென்ட் முடிச்சு அவங்கள அவங்க நாட்டுக்கு அனுப்பி வைக்கற வரைக்கும் ஏஜென்ட்டுகளோட வேலைதான்.

உதாரணமா, ஒரு பேஷன்ட்டோட ட்ரீட்மென்ட்க்கு ரெண்டு மாசம் ஆகும்னா, அவங்க விருப்பப்படி ஹோட்டல்லயோ, சர்வீஸ் அபார்ட்மென்ட்லயோ தங்க வைப்பாங்க. ட்ரீட்மென்ட்க்கு வந்திருந்தாலும், உலகத்தோட மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் வரிசையில நம்ம நாட்டுல இருக்கற இடங்களைப் பார்க்க விருப்படுவாங்க இல்லையா? அதனால, சென்னை மட்டுமில்லாம... காஞ்சிபுரம், மாமல்லபுரம், திருவண்ணாமலை, மதுரை, ஊட்டி, கொடைக்கானல்னு டூர் அழைச்சுட்டுப் போவாங்க. பல சமயங்கள்ல இப்படி கண் குளிர சுத்திப் பார்த்துட்டு புத்துணர்வா வர்றதே அவங்களுக்கு ஒரு ட்ரீட்மென்டா இருக்கும்!'' என்றவர் கொஞ்சம் நெகிழ்ந்து,

"படுத்த படுக்கையா ஸ்ட்ரெச்சர்ல வந்தவங்க, போகும்போது முகம் நிறைய சிரிப்போட, மனசு முழுக்க சந்தோஷத்தோட போகும்போது, நமக்கும் ஆத்ம திருப்தியா இருக்கும். இந்தத் தொழிலைத் தாண்டிய ஒரு நிறைவு மனசுக்கு கிடைக்கும்!'' என்றார் மனப்பூர்வமாக.

தொடர்ந்தவர், "மெடிக்கல் டூரிஸத்துக்காக, 'இந்தியன் மெடிக்கல் டூர் அசோஸியேஷன்'ங்கற அமைப்பு செயல்பட்டுட்டு இருக்கு. அரசாங்கமும் ரொம்ப உதவியா இருக்கு. இப்படி வர்றவங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறைகூட 10% தள்ளுபடி தர்றாங்க! இந்திய அரசுக்கு 2015-ம் வருஷதுக்குள்ள 9 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை மெடிக்கல் டூரிஸம் அள்ளித்தரப் போகுதுனா, அதன் வளர்ச்சிக்காக நாம பெருமைப்படலாம்தானே?!'' என்றார் முத்தாய்ப்பாக.

சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....
 
சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....
சிகிச்சை உடலுக்கு...சிலிர்ப்பு உள்ளத்துக்கு .....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism