Published:Updated:

' உங்களின் வசதி்யான வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

' உங்களின் வசதி்யான வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

' உங்களின் வசதி்யான வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

' உங்களின் வசதி்யான வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

Published:Updated:

26-03-2010
யா.நபீசா, இரா.கோகுல் ரமணன்
' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !
' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருமானத்துக்கு ஒரு புது ரூட்...

பேயிங் கெஸ்ட்... பணத்தை யும் பாசத்தையும் இணைக்கும் கும் வார்த்தை இது!

அலுவல், படிப்பு நிமித்தமாக வெளியூர் செல்லும்போதோ, சுற்றுலா சென்ற இடத்திலோ ஒருவர் வீட்டில் நாம் தங்குவதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு, கூடவே அவர்களிடமிருந்து விருந்தோம்பலை எக்ஸ்ட்ராவாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த முறை இது!

' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

வெளிநாட்டிலிருந்து வந்து, அப்படி இங்கே தங்கியிருக்கும் ஒரு 'பேயிங் கெஸ்ட்டை சந்திப்போமா...!

ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் இருக்கும் வைத்தியலிங்கம் ஐயர் வீட்டில், வாசல்வரை கேட்கிறது தெய்வத் துதி பாடல்! உள்ளே சென்றால், வைத்தியலிங்கம் ஐயர், அவர் மகள்... இவர்களுடன் பக்திமயமாக அமர்ந்து தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தார் சேயா... அமெரிக்காவில் இருந்து வந்து இப்போது இவர்களின் இல்லத்தில் தங்கியிருக்கும் பேயிங் கெஸ்ட்!

''நான் கலிஃபோர்னியால இருந்து வந்துருக்கேன். சின்னப்பிள்ளையா இருக்கும்போதே எங்க அப்பா-அம்மாவும் விவாகரத்து பண்ணிட்டு ஒவ்வொரு திசையில போயிட, என் தங்கையும் நானும்தான் வளர்ந்தோம். அவளும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் போயிடுவாங்கறதால, தனிமை வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம இருந்தேன். வயசு முப்பத்தி எட்டு ஆனாலும் திருமணம் பண்ணிக்கவும் இஷ்டமில்ல. ஒருகட்டத்துல எனக்கு ஆன்மிகத்துல நாட்டம் வர, அதுல முழுசா என்னை ஒப்படைச்சேன். திருவண்ணாமலையில இருக்கற ரமணாஷ்ரமம், அருணாசலேஸ்வரர் மலை, இங்கயிருக்கற சித்தர்கள்னு எல்லாத்தை பத்தியும் கேள்விப்பட்டப்போ, இங்க வரணும்னு ரொம்பவே ஆசையாயிடுச்சு. கிளம்பி வந்துட்டேன்!'' என்ற சேயா,

' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

''ஹோட்டல்ல தங்கறதைவிட, பாசமான இந்திய மக்களோட பழகுறதுக்கு ஒரு வாய்ப்பா, அவங்ககூடயே தங்கலாமேனுதான் 'பேயிங் கெஸ்ட்'டா தங்க இடம் கேட்டேன். இந்த வீட்டை கை காட்டினாங்க. வந்து ரெண்டு, மூணு நாள்ல 'கெஸ்ட்'டாதான் இருந்தேன். நாலாவது நாள், மலையேறும்போது தடுக்கி விழுந்து கால்ல அடிபட்டுட, வைத்தியலிங்கம் அப்பாவும் (அப்படித்தான் அழைக்கிறார்!) அவரு பொண்ணு விஜயலஷ்மியும் என்னை அவ்ளோ அன்பா கவனிச்சுக்கிட்டாங்க. அதிலிருந்து நானும் இந்த வீட்டுல ஒருத்தி ஆயிட்டேன்!'' என்றார் சேயா சந்தோஷமாக.

தொடர்ந்தவர், ''நான் தினமும் ஆசிரமம், மலை, கோயில்னு சுத்திட்டு சாயங்காலம் வீட்டுக்குள்ள வரும்போதே, விஜயலஷ்மி எனக்காக செய்ற மசால் தோசை வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனா, கொஞ்சம் லேட்டா வந்தாலும், அப்பாகிட்ட இருந்து திட்டு கிடைக்கும்! தெரியுமா... பக்கத்து வீட்டு சோனா ஆன்ட்டிலயிருந்து விஜயலஷ்மியோட ஃப்ரெண்ட்ஸ் வரை எனக்கு இங்க நிறைய பேர் 'பெட்'. நானும் அவங்களுக்கு 'பெட்'! இத்தனை வருஷமா தனிமையில இருந்த எனக்கு, இவ்வளவு மனிதர்களைப் பரிசா கொடுக்கத்தான் இறைவன் என்னை திருவண்ணாமலை வரவெச்சுருக்கான்!'' என்று சேயா நெகிழ, தொடர்ந்தார் விஜயலஷ்மி...

''பத்து பேர் தங்க விசாலமான எங்க வீட்டுல, இப்போ நானும் எங்கப்பாவும் மட்டும்தான் இருக்கோம்ங்கறதால, வீட்டோட ஒரு பகுதிய 'பேயிங் கெஸ்ட்'க்கு ஒதுக்கியிருக்கோம். இதுவரை நூத்துக்கணக்கான வெளிநாட்டுக்காரங்க தங்கிட்டுப் போயிருக்காங்க. ஆனா, சேயா ரொம்ப ஸ்பெஷல். அவங்க அப்பா, அம்மா கூடவே இல்லாட்டி என்ன... நாங்க இருக்கோம் அவங்களுக்கு!'' என்று அன்பு பேசுகிறார் விஜயலஷ்மி!

' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !

வைத்தியலிங்க ஐயர் போல பலர், தங்கள் வீடுகளை 'பேயிங் கெஸ்டு'களுக்கு தாங்களாகவே கொடுத்துக் கொண்டிருக்க... 'தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மேம்பாட்டுத்துறை 'பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட்' என்ற பெயரில் இதேபோன்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உங்களிடம் ஓரளவுக்கு வசதியான வீடு இருக்கிறதா? ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், இன்டர்நெட், பஸ் வசதியெல்லாம் இருக்கக்கூடிய பிரதானமான இடமாக இருந்தால் இன்னும் சிறப்பு. வெளிநாட்டிலிருந்து படிப்பு, சுற்றுலா என்று நம் நாட்டுக்கு வருபவர்களை, உரிய தொகையை வாங்கிக்கொண்டு உபசரிக்க மனம் இருக்கிறதா? அப்படியானால், உங்கள் ஊரில் அல்லது அருகிலிருக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்ததுறையை அணுகுங்கள். 'பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட்' திட்ட ஒப்பந்தப்படி, உங்கள் வீட்டுக்கு வெளிநாட்டுப் பயணிகளை அனுப்பி வைப்பார்கள்.

இந்தத் திட்டத்தின்படி கடந்த ஆறு வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தன் வீட்டில் தங்க வைத்து உபசரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த அனிதா லஷ்மணன்.

''சுற்றுலாத்துறை மூலமா எங்க வீட்டுக்கு இந்த ஆறு வருஷமா அமெரிக்கா, யூ.கே., யூரோப்னு பல நாடுகள்ல இருந்தும் டூரிட்ஸ், ஸ்டூடன்ட்ஸ் வர்றாங்க. ஆண்கள் தவிர்த்து வயதான தம்பதிகளையும், பெண்களையும் எங்க வீட்டுல தங்க வைக்கறோம். அவங்களுக்கு சாப்பாடுல திருப்தியான உபசரிப்பு கொடுக்கறதோட, அவங்க வெளிய கிளம்பும்போது போற இடத்துல சுத்திப் பார்க்க என்னவெல்லாம் இருக்கும், டிராவலுக்கு எவ்வளவு செலவாகும்ங்கற விவரத்தையெல்லாம் சொல்லி அனுப்புவோம்.

பொதுவா, ஃபாரினர்ஸ் நம்மகிட்ட எதையும் டிமாண்ட் பண்ண மாட்டாங்க. நாங்க தரையில படுத்து டி.வி. பார்த்தா, இங்க தங்கியிருக்கற பொண்ணுங்களும் எங்ககூட சேர்ந்து தரையில படுத்து டி.வி பார்ப்பாங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்ன இங்க வந்து தங்கிட்டுப்போன ஒரு ஃபாரின் லேடிக்கு, என் தம்பியோட மேரேஜ் இன்விடேஷனை ஃபார்மாலிட்டிக்காக அனுப்பினோம். பார்த்தா... ஹஸ்பண்டோட வந்துட்டாங்க. எல்லாம் நாம பழகுற விதம்தான்!'' என்ற அனிதாவைத் தொடர்ந்தார், அவர் வீட்டில் இப்போது தங்கியிருக்கும் அயர்லாந்தைச் சேர்ந்த லிடியா...

''ஹோட்டல்ல தங்கறதும், சிட்டி லைஃப்பை என்ஜாய் பண்றதும் எங்க நாட்டுலயே எங்களுக்கு கிடைக்கும். அதனாலதான் இப்படி ஃபேமிலிஸ்கூட தங்க விரும்பறோம். எங்க நாட்டுல அனிதா ரொம்ப பிரபலம்! அங்கயிருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்புற வங்களையெல்லாம் 'மதுரையில அனிதா வீட்டுக்கு போங்க'னுதான் சொல்லி அனுப்பறாங்கனா பார்த்துக்கோங்க!'' என்றார் சிரிப்போடு!

வீடு என்பது அன்பால் வேயப்பட்ட கூடு... பேயிங் கெஸ்டுக்கும்கூட!

' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !
படங்கள் ஜெ.தான்யராஜு
' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !
' உங்களின் வசதி்யான  வீடு்....சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடு !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism