"பார்வைக் குறைபாடு என்றாலே... கண்ணாடி கட்டாயமா ?"
"என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அதற்குள்ளாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை. பார்வைக் குறைபாடு என்றாலே... கண்ணாடி, அறுவை சிகிச்சை போன்றவை தான் தீர்வுகளா..? வேறு வழிகளில் அந்தக் குறைபாட்டை சரிசெய்ய இயலுமா?''
டாக்டர் சிவராமன், சித்தமருத்துவர், சென்னை
"பொதுவாக, பார்வைத் திறன் குறைபாடு ஏற்படுவதற்கு சத்துக் குறைச்சல், பரம்பரை ஆகியவை காரணமாக இருக்கலாம். பன்னிரண்டு வயதுக்குள் ஏற்படுகிற பார்வைத் திறன் குறைபாட்டை (ஆரம்ப கட்ட நிலையாக இருந்தால்), கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே உணவுப் பழக்கம் மற்றும் சிலவகை யோகாசன பயிற்சிகள் மூலம் சரி செய்ய இயலும்! அதாவது, ஆறு வயதுக்குள் கண்டறியப்படும் குறைபாடுகளை ஏழு வயதுக்குள் சரி செய்ய முடியும். அதைத் தாண்டி பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதைத் தவிர்க்க முடியாது. அதேசமயம், உண வுப் பழக்கத்தை கடைபிடிப் பதன் மூலம் மேற்கொண்டு பவர் கூடுவதைக் கட்டுப்படுத் தலாம். பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், மேலே சொன்ன சாப்பாடு மற்றும் யோகாசன முறைகளை பின்பற்றுவதன் மூலம், 'பவர் கூடுதல்' போன்ற அடுத்தகட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்!
கண்களுக்கு மிகவும் தேவையான 'பீட்டா கரோட்டின்' சத்துகள் நம்முடைய உணவில் குறைவதாலேயே இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. 'பாலிஷ்டு ரைஸ்' எனப்படும் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இந்தச் சத்து மிகவும் குறைவு. ஆனால், அதைத்தான் இப்போது நாம் தினசரி உபயோகிக்கிறோம். எனவே, 'பீட்டா கரோடின்' அதிகமுள்ள தினை அரிசியை சாதமாகத் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். இதேபோல் கேரட்டிலும் அதிகமாக 'பீட்டா கரோட்டின்' சத்து உள்ளது. அடுத்தபடியாக முருங்கைக்கீரையை வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 'கலர்டு ஃபுட்ஸ்' என்று சொல்லக் கூடிய நிறமுள்ள உணவுகளான பப்பாளி, தக்காளி, அன்னாசி போன்றவற்றைத் தொடர்ச்சியாக சாப்பிடலாம்.
பெரும்பாலும் தற்போது குழந்தைகளை தினசரி தலை குளிக்க வைப்பதே இல்லை. அதேபோல எண்ணெய்க் குளியலும் செய்வதில்லை. இது போன்ற காரணங்களால் உடல் சூடு ஏற்பட்டு, அது பித்தமாக மாறிவிடுகிறது. இதனாலும் பார்வைத் திறன் குறைபாடு ஏற்படலாம். எனவே, தினசரி தலைக்கு குளிக்க வைப்பது முக்கியம், அதேபோல, வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதைச் சொன்னதுமே 'சளி பிடிக்குமே' என்று சொல்வார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. குளித்துவிட்டு சரிவர துடைக்காததாலும், வியர்வையோடு குளிப்பதாலும், வேறு சில காரணங்களாலும்தான் சளி பிடிக்கும்
பார்வைத் திறன் பிரச்னைகளை உணவின் மூலம் தீர்ப்பதுபோல, 'த்ராடகம்' எனப்படும் கண் களுக்கான யோகாசன பயிற்சிகளின் மூலமும் குண மாக்கலாம். சூரியனைப் பார்ப்பது, திறந்தவெளியைப் பார்ப்பது, விழிகளை உருட்டிப் பார்ப்பது என்று யோகாசனம் சார்ந்த பலவித பயிற்சிகள் இருக்கின்றன. 'சீதளி பிரணாயாமம்' (நாவினை சுருட்டி கொண்டு, மூச்சை வேகமாக வாய் வழியே உள் இழுத்து, மெதுவாக நாசித் துவாரங்கள் வழியாக வெளியிடும் பயிற்சி. இதனை உணவுக்கு முன்பு காலை மற்றும் மாலை வேளைகளில் தலா இருபது முறை செய்ய வேண்டும்) என்ற யோகாசன முறையும் இருக்கிறது. இவையெல்லாம்கூட பார்வைத் திறனை இயல்பு நிலைக்கு கொண்டு வரைக்கூடியவைதான். ஆறு வயதுக்குள் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டு விட்டால், இதையெல்லாம் பின்பற்றினாலே கண்ணாடி போடவேண்டிய அவசியம் இருக்காது.''
சிநேகிதிக்கு்....சிநேகிதிக்கு...
குப்புறத் தள்ளி குழி பறித்த குதிரை !
|
|