Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

Published:Updated:

26-03-2010
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எதிர்காலத்தைப் பாதிக்கும் 'டட்டூ' தப்பிக்க என்ன வழி ?"

"காதலிக்கும்போது ஒரு வேகத்தில் காதலனின் பேரை பச்சை குத்திக் கொண்டேன் (டட்டூ). இப்போது பிரிந்துவிட்டோம். வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் சூழலில் இந்த 'டட்டூ' என் எதிர்காலத்தைப் பாதித்துவிடும் என்பதால், அதை அழிக்க வழி கூறுங்களேன்..?" என்று கேட்டிருக்கும் கோவை வாசகிக்கு, வழி சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த 'பியூட்டிஷியன்' மலர்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

" டட்டூவை அழிப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது, C+Co2 முறை. இதில், லேசர் கதிர்கள் மூலம் டட்டூ அழிக்கப்படும். இந்த லேசர் கதிர்கள் சருமத்தின் இரண்டு, மூன்று லேயர் வரை மட்டுமே ஊடுருவுவதால், பக்கவிளைவுகள் எதுவும் இருக்காது. ஆனால், இந்த முறையில் தழும்பு தவிர்க்க முடியாதது. கூடவே, இந்த ட்ரீட்மென்ட்டை எடுத்துக் கொள்வதற்கு முன், உங்கள் சருமத்தின் தன்மையை சரும நோய் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வதும் அவசியம். மேலும், இரண்டு இன்ச் டட்டூவை அழிப்பதற்கே முப்பத்தி ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பார்லர்களில் இந்த வசதி இல்லை.

இரண்டாவது முறை, க்யூ-ஸ்டிச்டு லேசர் மெத்தெட். ஏற்கெனவே வரைந்திருக்கும் டட்டூவை லேசர் மூலம் மெதுவாக அழித்துவிட்டு, அதன் மீது வேறொரு டட்டூ வரையும் முறை. பொதுவாக டட்டூ என்பது தோலின் மேலில் இருந்து மூன்று லேயர் வரை அடிசெல்லும் என்பதால் அதனை நீக்கும் போது அவரவர் தோலின் நிறத்தைப் பொறுத்து தழும்புகள் நிச்சயம் ஏற்படும். அந்த தழும்புகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியும் என்பதால் அந்த இடத்தில் மற்றுமொறு டட்டூவை மென்மையாக தழும்பு தெரியாதவாறு வரைந்து விடுவோம்.

டட்டூ குத்தும்போது ஏற்படும் வலியைவிட, அதை அழிக்கும்போது ஏற்படும் வலி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆசையில், அவசரத்தில் டட்டூ குத்துபவர்கள் நூறு முறை யோசிக்கவும்!"


"ஃபாஸ்ட்ஃபுட் வாழ்க்கையால் வறண்டு போகும் தோல் தீர்வு உண்டா ?

"நான், 23 வயது சாஃப்ட்வேர் இன்ஜினீயர். வேலைச் சூழல் காரணமாக ஏ.சி. ரூம், கோக், பர்கர் என்று நகர்கிறது என் வாழ்க்கை. சில நாட்களாகவே என் தோல் மிகவும் வறட்சியாக இருப்பதுடன், அடிக்கடி நீர்க்கடுப்பும் ஏற்படுகிறது. வேலையில் சேர்ந்த இந்த மூன்று மாதங்களில்தான் இந்தப் பிரச்னைகள் தலைகாட்டியுள்ளதால், 'ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரம்தான் காரணம்..' என்கின்றனர் பெற்றோர். பிரச்னைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்களேன்..."

- சென்னையைச் சேர்ந்த சுஷ்மாவின் கேள்விக்கு பதில் அளிக்கிறார், மதுரை அப்போலோ மருத்துவமனையின் டயட்டீஷியன் சுகன்யா.

"இன்றைய தலைமுறையினர் ஏ.சி. ரூமிலேயே இருந்து பழகுவதால், அவர்கள் உட்கொள்ளும் தண்ணீரின் சதவிகிதம் வெகுவாகக் குறைகிறது. மேலும், அவ்வப்போது ஒரு அரைக்குவளை 'கோக்'கை பருகிக்கொள்வதும், லஞ்சுக்கு ஒரு பீட்ஸா கொறித்துக் கொள்வதும் இப்போது டிரெண்டாகி உள்ளது. இதனால் உடலுக்குத் தேவையில்லாத கொழுப்புகள் சேருமே தவிர, உருப்படியாக எதுவும் கிடைப்பதில்லை. எனவே, உங்களின் சாப்பாட்டு முறையைக் கொஞ்சம் மாற்றலாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை ரெகுலராக சாப்பிடப் பழக வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைப்பதுடன், தோலும் வறட்சியில் இருந்து காக்கப்படும். எனவே, கோடைக்காலம் ஆரம்பமாவதால் இப்போது கிடைக்கும் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி போன்றவற்றைத் தினமும் உட்கொள்ளலாம். சமையலில் காரம், புளியை கோடைக்காலத்தில் குறைக்கலாம்.

அலுவலகம் செல்லும்போது கையோடு வாட்டர் பாட்டிலில் இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். மதிய உணவுக்கு ஈரப்பதம் அதிகமுள்ள பூசணி, சுரைக்காய் போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். இவற்றுடன் 'ரெய்தா' எனப்படும் தயிர் பச்சடியும் மதிய உணவில் இடம்பெற்றால், தோல் வறட்சிக்கு 'குட் பை'தான்!

மேற்கொண்ட ஆலோசனைகளை பின்பற்றினால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து நிறைவாக கிடைத்து, உங்களின் பிரச்னைகள் ஓடிவிடும். ஆனால், 'ஆபீஸ்ல நான் பாத்ரூம் எல்லாம் போகமாட்டேன்... வீட்டுக்கு வந்துதான்..!' என்று முட்டாள்தனமான சபதம் எடுத்தால், நீர்க்கடுப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன் போன்றவை தவிர்க்க முடியாதவை ஆகிவிடும்!"

 

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
-
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism