Published:Updated:

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

Published:Updated:

26-03-2010
பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!
பகுதி 13
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களை, உங்களுக்கே உணர்த்தும் தொடர்!

'ஓட்டுக்குள் சுருங்க... நீ நத்தையல்ல!'

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

கிடைக்கப்போகிறது பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு! நாம் அனைவரும் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறோம். சந்தோஷம். ஆனால், இந்தக் கணத்தை பெண்கள் தங்களைப் பற்றிய சுயமதிப்பீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பொதுவாக, பெண்ணாக இருப்பதே ஒரு ஊனம் என்றுதான் இந்தச் சமுதாயம் இன்னமும் கருதுகிறது. அதிலும், ஒரு சில பெண்களே அப்படிக் கருதுகிறார்கள் என்பதுதான் வேதனை. காரணம், 'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று பெண் இனத்துக்கு இங்கு வகுக்கப்பட்டுள்ள, பிழைகள் நிரம்பிய இலக்கணங்கள் தான்!

ஒரு பாடம் புரியவில்லை என்றால், கல்லூரி முடிந்த பிறகு சக மாணவர்களோடு நூலகத்தில் அமர்ந்தோ... அல்லது பேராசிரியரோடு வகுப்பில் உட்கார்ந்தோ அதைத் தீர்த்துக் கொண்ட பிறகு, ஒரு மாணவனால் தாமதமாக வீட்டுக்குச் செல்ல முடியும். அதேபோல, ஒரு அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்கவும், முக்கியத்துவம் பெறவும் ஒரு ஆணால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய முடியும். டிரெயினிங், டூர், டிரான்ஸ்ஃபர் என்றால் எந்த ஆணாலும் வெளியூருக்கு எவ்விதத் தயக்கமும் இன்றி செல்ல முடியும்.

ஆனால், பெண்களுக்கு? பள்ளியிலிருந்து தாமதமாக வந்தாலோ, அலுவலகத்தில் அதிகமாக ஒரு மணி நேரம் வேலையில் மூழ்கினாலோ, வெளியூர் 'டிரெயினிங்' செல்ல வேண்டி வந்தாலோ, அதை முன்னிறுத்தி அவள் முன் எழும் கேள்விகளும் விமர்சனங்களும் அதிகம்.

ஒருவேளை அந்தக் கேள்விகளில் இருந்து அவள் மீண்டு வந்தால்கூட, காலையில் எழுந்து காபி, டிபன், லஞ்ச் என சுழன்று, குழந்தைகளுக்கு கேரியரில் வைத்து, அலுவலகம் அலைந்து, இரவு அவதியாக வீடு திரும்பி, அவதி அவதியாக டின்னர் செய்து என... இந்தக் கடமைகளில் இருந்து அவள் மீளமுடியாமல் போகிறது. ஒரு ஆணைப்போல, வீட்டில் ஓய்வு, அலுவலகத்தில் வேலை என்ற நிலை அவளுக்கு இல்லை! மாறாக, அலுவலகத்தில் வேலை, வீட்டிலும் வேலை என இரட்டைப் பொதி சுமக்கிறாள் பெண்.

சமூகத்திலும், அலுவலகத்திலும் அவளின் முன்னேற்றத்துக்கு குறுக்கே கிடக்கும் இந்தத் தடைகள் ஒருபுறம் எனில், 'நத்தை என்றால் ஓட்டுக்குள் இருப்பதுதான் பாதுகாப்பு' என்று, அவளே சுருக்கிக்கொள்ளும் மனப்பாங்கு, இங்கு பெரும்பாலான பெண்களின் டி.என்.ஏ-விலும் அவர்களுக்கே தெரியாமல் செலுத்தப்பட்டிருப்பது, இன்னும் கொடுமை. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், பேருந்தில் ஒரு காமாந்தகன் உரசித் தொல்லை கொடுத்தால்கூட, குரலை உயர்த்தி அவனைக் கண்டிக்கத் திராணியில்லாமல் எத்தனைப் பெண்கள் மௌனிகளாக இருந்துவிடுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதேபோல, என்னதான் தடை பல தாண்டி படித்துப் பட்டம் பெற்றுவிட்டாலும்கூட, அலுவலகச் சூழல்களில் ஆண்களோடு அஃபீஷியல் விஷயங்களைக் கலைந்துரையாடவும், விவாதிக்கவும் தயங்கும் பெண்களின் சதவிகிதமும் இங்கு அதிகம்.

சொல்லப்போனால்... செய்வது வங்கி வேலையாக இருந்தாலும் சரி, ஐ.டி. வேலையாக இருந்தாலும் சரி, சித்தாள் வேலையாக இருந்தாலும் சரி, சேல்ஸ் கேர்ள் வேலையாக இருந்தாலும்... 'கூச்சம்' என்ற கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வர, ஒரு பெண் தன்னை எதிர்த்தே ஒரு கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

சரி... போராடுங்கள். போராட்டங்கள் என்றால் வலிகள் நிறைந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம்இல்லை. அவை ஆனந்தம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம்.

'அறிமுகமில்லாத ஒரு ஆணைப் பார்த்து பேசவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, ஒரு பருவப் பெண் ஏன் நாணி கோணுகிறாள்... ஏன் தேவையில்லாமல் வெட்கப்படுகிறாள்' என்று யோசித்துப் பாருங்கள். அவளுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததில்லை. அல்லது நேர்ந்த சந்தர்ப்பங்களில் அவள் இவ்வாறு நடந்துகொள்ளக் கற்பிக்கப்பட்டிருக்கிறாள்.

யோசித்துப் பார்த்தால்... ஒரு பெண், தன் தோழிகளோடு மகிழ்ச்சியாக தனித்திருக்கும்போதுகூட, பாடுவதற்கும், ஆடுவதற்கும் வெட்கப்படுகிறாள். 'இந்த சமூகம் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது' என்ற எண்ணத்தின் துரத்தலில் இருந்து அவளால் எந்தச் சூழ்நிலையிலும் விடுபடமுடியவில்லை. ஆனாலும், பாட, ஆட, கட்டுப்பாடுகள் இன்றி தன்னை வெளிப்படுத்த அவளுக்கு உள் மனதில் விருப்பம் இருக்கும் என்பதுதான் உண்மை. அதனால்தான் எனது வாழ்வியல் பயிலரகங்களில் ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் நான் அனைவரையும் பாட, நடனமாட உற்சாகப்படுத்துகிறேன். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண் நடனமாடும்போது கிடைக்கும் ஆனந்தம் எத்தகையது என்பதை அவர்களின் மலர்ந்த முகங்கள் எனக்கு வெளிப்படுத்திஇருக்கின்றன.

'லுக்கிங் குட்', 'ஃபீலிங் குட்' என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அடுத்தவர்களின் கண்களுக்கு 'நன்றாக' தெரிவதற்காக (Looking Good), தங்களின் சந்தோஷத்தை (Feeling Good) பின்னுக்குத் தள்ளி காலால் மிதிக்கும் வேலையை இனி பெண்கள் செய்யக்கூடாது என்பதே என் போன்றவர்களின் விருப்பம்!

- அமைதி தவழும்...

சிந்தனை செய் மனமே !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

"பொம்பளைப் புள்ளைங்க கொஞ்சம் வளர்ந்துட்டாலே வீட்டு ஆம்பளைங்ககிட்டகூட தள்ளியேதான் இருக்கணும்..." என்று பல வீடுகளிலும் போதனைகள் நடப்பதுண்டு. இதனால், சொந்த அப்பாவிடமும் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளோடும்கூட 'அளவாக' நிறுத்திக்கொள்ளும் பெண்களின் கணக்கு உங்களுக்கே தெரியும்.

என் நண்பரின் வாழ்கையில் சமீபத்தில் நடந்த விஷயம் இது... மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் என் நண்பருடன், ப்ளஸ் டூ படிக்கும் அவருடைய மகளும் இருக்கிறாள். அவள் தினமும் பள்ளிக்கூடத்துக்கு வேனில்தான் போய் வருவாள். இவள் வாயில்லாத பூச்சியாக இருப்பதைப் புரிந்த கொண்ட வேன் டிரைவர், இந்தப் பெண்ணிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டுத் தொட்டுப் பேசியிருக்கிறான். 'குட் டச்' (good touch), 'பேட் டச்' (Bad touch) பற்றி எல்லாம் தெரிந்த பெண்தான் என்றாலும் குரலை உயர்த்தி, 'முதல்ல கையை எடு' என்று வேன் டிரைவரைப் பார்த்து கோபப்படாததால், இந்தப் பெண்ணின் மௌனத்தை 'க்ரீன் சிக்னலாக' எடுத்துக் கொண்ட டிரைவர் அத்துமீறியிருக்கிறான். இதை தன் அப்பாவிடம் வெளிப்படையாகப் பேசுவதற்கு கூச்சப்பட்ட அந்த பெண், பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வேதனையில் குழம்பியிருக்கிறாள். இதனால் படிப்பிலும் கவனம் சிதற, 'இன்ஜினீயரிங்கா, மெடிக்கலா' என்றிருந்தவள், தேர்வில் இரண்டு பாடங்களில் ஃபெயில்!

இந்தப் பெண்ணின் சோகத்துக்கு வேன் டிரைவர் மட்டும்தான் காரணமா?!

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
 
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism