"தூர்தர்ஷன்ல 'அம்மாவுக்கு கல்யாணம்', சன்ல 'நிஷாகந்தி', 'புதிய வாசல்கள்', நடிகை ரேவதி தயாரிச்ச 'நிறங்கள் - நிஜங்கள்', ராஜ். டி.வி-யில 'தாம்பத்யம்', 'பைரவி', ஏவி.எம். தயாரிப்புல ஜெயா டி.வி-யில வந்த 'ரோஜா'னு... இந்த ஹிட் சீரியல்கள் எல்லாம் என்னோட டைரக்ஷன்தான்!''னு பெருமையா சொன்னவர்கிட்ட, 'ஓவியா' பத்தி கேட்டேன்!
"இது ஒரு த்ரில்லர் சீரியல் ரீட்டா. அமானுஷ்யம்தான் இதோட அடிப்படை. 'ஓவியா'வா அம்மு நடிக்கறாங்க. அவங்களுக்குள்ள நடக்கிற அமானுஷ்யங்கள், அதனால் ஏற்படற மாற்றங்கள், விளைவுகள்னு... இதுதான் கதை. நோட் பண்ணிக்க வேண்டிய விஷயம், 'த்ரில்லர்'ங்கறதுக்காக வன்முறையை காட்ட மாட்டோம்!''னு சர்டிஃபிகேட் தந்ததுடன், "இந்த சீரியலோட முடிவை ஜட்ஜ் பண்ணப்போறது ரசிகர்களும்தான்!''னு டெயில் பீஸ் சொன்னார் அருந்தவராய்!
"ரீட்டா... சூப்பரா ஒரு ஸ்கூப் நியூஸ் சொல்லேன்...''னு உரிமையா கேட்ட பழனி வாசகி ரம்யாவுக்கு இந்த ஸ்கூப் டெடிக்கேட்டட்! அதாகப்பட்டது... நடிகர், டான்ஸர், நிகழ்சித் தொகுப்பாளர்னு கலக்கிட்டு இருக்கற பப்லு என்கிற ப்ரித்திவிராஜ், இப்போ சீரியல் தயாரிப்பாளர் 'அவதார்' எடுத்திருக்கார். 'எஸ்.எம்.எஸ் (சவாலை முடிந்தால் சமாளி)' மற்றும் 'டிரிபிள் செவன்'... இந்த ரெண்டு சீரியலும் அவரோட தயாரிப்புல கூடிய சீக்கிரம் பாலிமர் டி.வி-யில வரப்போகுதுது! இந்த சீரியல்களுக்கு கதாசிரியரும், அவரே!
களைச்சு சளைச்சு வீட்டுக்குப் போனா, ஸ்வீட் நியூஸ் சொன்னாங்க இந்த ரீட்டாவோட அம்மா!
"இனி உன் பேவரைட் சீரியல் 'திருமதி செல்வம்', 'தென்றல்' ரெண்டையும் அப்பப்ப பார்க்காம விட்டுட்டு, வீட்டுக்கு வந்து எங்கிட்ட கதை கேட்கக் கூடாது. முக்கியமா, போன் பண்ணி, 'அம்மா செல்போனை டி.வி. முன்னாடி வையேன்... கதை கேட்டுக்கறேன்'னு எல்லாம் சொல்லக்கூடாது''னு ஆர்டர் போட்டுட்டாங்க அம்மா!
'இதுல என்ன ஸ்வீட் நியூஸ்?'னு கேட்கறீங்களா?
அதாவது, உங்க மொபைல்ல இருந்து 52222ங்கிற நம்பருக்கு போன் பண்ணினா, இந்த ரெண்டு சீரியலோட கடைசி ரெண்டு நாள் எபிசோடின் கதைச் சுருக்கத்தை கேட்கலாம். பட், ஒரு சின்ன கண்டிஷன். வோடஃபோன் மொபைல்ல இருந்துதான் அழைக்க முடியும்!
என்ன... ஸ்வீட் நியூஸ்தானே?!
கீப்
"ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஃபிரியா விடு' என்ற நிகழ்ச்சியில் சிரிப்புக்காக இவர்கள் செய்யும் சேட்டைகள் அநாகரீகத்தின் உச்சம். மார்ச் ஒன்றாம் தேதியன்று ஒளிபரப்பான காட்சியில், பெரிய சூட்கேஸை தலையில் சுமந்து செல்பவரின் பேன்ட் அவிழ்வது போல நடித்து, அவருக்கு உதவ வருபவர்களை |