Published:Updated:

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

Published:Updated:

26-03-2010
செய்திகள் யோசிப்பது..!
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஊடக நண்பர்களே...
உங்களுக்கும் வேண்டும் அக்கறை!"
செய்திகள் யோசிப்பது.... !

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அது தொடர்பான படங்கள் பத்திரிகைகளில் வெளியானது. இவை மக்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கின- செய்தி

"நித்தியானந்தா அந்த நடிகையுடன் இருந்த காட்சிகளை, புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்களின் நோக்கம்... அதைப்பற்றிய செய்தி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுடன், அந்த ஆபாச காட்சிகளால் தங்களின் வியாபாரத்தையும் பெருக்க வேண்டும் என்பதுதான்.

அம்மா, அப்பா, குழந்தைகள் என மகிழ்ந்திருந்த வரவேற்பறைக்கு டி.வி. பெட்டியில் தவழ்ந்து வந்த அந்தக் காட்சி மூலம் அவர்கள் தந்தது சாமியார்கள் பற்றிய விழிப்பு உணர்வு அல்ல... கலாசார பேரதிர்ச்சி! ஏனெனில், 'இந்தச் சாமியார் தப்பானவர்' என்பதைக்கூற, கிடைத்த ஆதாரத்தை நாகரிகமாக, தணிக்கை செய்து வெளியிட்டிருந்தாலே போதுமானது. இப்படி 'படம்' ஓட்டிஇருக்கத் தேவையில்லை. இதுபோன்ற சம்பவங்களால் ஊடகத் துறை மீதான நம்பிக்கைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், சமீபத்தில் ஒளிபரப்பான சாமியாரின் வீடியோ காட்சி மட்டுமே 'அடல்ட்ஸ் ஒன்லி' ரகம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். கிட்டத்தட்ட பல தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பல நிகழ்ச்சிகளிலும் ஆபாசம்தான் அள்ளித் தெளிக்கப்படுகிறது. குறிப்பாக, தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், போட்டியாளர்கள், என்று பலரும் உள்ளாடைகளை பிரதிபலிப்பது போன்ற ஆடைகளில் வரவேண்டும் என்பது மரபுபோல! கூடவே, மோசமான பாடல்கள், மிகமோசமான நடன அசைவுகள் என நகரும் இந்தக் கண்றாவிகள் எல்லாம் ஆபாசம் இல்லாமல் வேறென்ன?!

இன்னும், சினிமா நட்சத்திரங்கள் சில காரணங்களுக்காக ஒன்றுகூடி, நம்மைப் பதற வைக்கும் உடைகள் அணிந்து நடத்தும் மேடை நிகழ்ச்சிகளுக்கு உரிமை வாங்கி, அதை ஒளிபரப்பும் தலையாய கடமையிலும் இங்கு எல்லா பல தனியார் தொலைக்காட்சிகளும் தீவிரம் காட்டுகின்றன. இது ஒருபுறம் என்றால், சமயங்களில் காட்டப்படும் கொலைச் சம்பவ காட்சிகள் எல்லாம் கொடூர வன்முறை ரகமாக இருக்கின்றன.

இதையெல்லாம் தடுக்கும் விதமாகத்தான், 'மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையிடம் 'தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை கொண்டுவர வேண்டும்' என்று நெடுநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் கேட்பாரற்று கிடக்கிறது. காரணம், வடக்கில் இருந்து தெற்கு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசத்தையும் ஒரு அங்கமாக்கிவிட்ட முதலாளிகளை எதிர்கொள்ளும் தைரியம் இங்கு எவருக்கும் இல்லை!

பத்திரிகைகள்... அவர்களில் பலரும் இந்த ஆபாச புதை குழிக்குள் மக்களை அமிழ்த்தத்தான் உழைக்கிறார்கள். குறிப்பாக, சிலர் வெளியிடும் கண் கூசும் படங்கள் சகிப்பதில்லை!

இவற்றுக்கெல்லாம், 'மக்கள் அதைத்தானே ரசிக்கறாங்க. அதனாலதான் நாங்களும்...' என்று பதில் தருபவை, பொறுப்பான ஊடகங்கள் அல்ல! ஒரு வியாபாரமென்றாலும்கூட, மற்ற வியாபாரங்களைவிட மிக அதிக மதிப்பும் வீச்சும் அவை பெற்றிருப்பதற்கான காரணம், அவற்றுக்கான சமூக அக்கறைதான்!

அக்கறைப்படுங்கள் ஊடக நண்பர்களே!

'பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகை பெண்ணே' என்று பத்திரிகைகளைப் பற்றி உயர்வாகப் போற்றியிருக்கிறார் பாரதிதாசன். அதை வழிமொழிபவள்தான் இந்த அருள்மொழி."

செய்திகள் யோசிப்பது.... !
-அருள்மொழி, வழக்குரைஞர்,
சென்னை உயர் நீதிமன்றம்
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism