மிதுனம் 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பதை அறிந்த நீங்கள், யாரையும் புறக்கணிக்க மாட்டீர்கள்.
சூரியன் 10-ல் நிற்பதால் எதிலும் வெற்றி கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கணவரின் கோபம் குறையும். தந்தைக்கு உடல் நலம் சீராகும். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 4-ல் சனி இருப்பதால் வேலைச்சுமை, டென்ஷன், வாகனச் செலவுகள் ஏற்படக்கூடும். 2-ல் செவ்வாய் நிற்பதால் பேச்சில் காரம் வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து நீங்கும். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் நிற்பதால் பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.
|