மாதவிடாய்க் கோளாறால நிறைய பொண்ணுங்க கஷ்டப்படுறாங்க. அதுலயும் சிலபேரு அதிகமான ரத்தப் போக்கு, கர்ப்பப்பை கட்டினு ரொம்பவே அவதிப்படுவாங்க. இந்த மாதிரி தொந்தரவுகள் இருந்தா... இப்ப நாஞ்சொல்ற வைத்தியத்தை செஞ்சு சொகப்படுத்திக்கோங்க..!
அருகம்புல் அம்பது கிராம், மாதுளை இலை அம்பது கிராம் எடுத்து, அதில 4 டம்ளர் தண்ணிய விட்டு, ஒரு டம்ளரா ஆகுற வரைக்கும் நல்லா காய்ச்சணும். அதுல பாதியை காலையிலயும், மீதியை சாயங்காலமும் குடிச்சா... அதிகமா ரத்தம் போறது நிக்கும். ரெண்டு, இல்லைனா மூணு நாள் வரை இப்படி குடிச்சாலே குணம் கிடைக்கும்.
சதக்குப்பை, கருஞ்சீரகம் இது ரெண்டையும் சம அளவு எடுத்து, பொன்வறுவலா வறுத்து இடிச்சி சூரணமாக்கி வச்சிக்கோங்க. அதோட சம அளவு பனைவெல்லம் சேர்த்து காலையில, சாயங்காலம்னு ரெண்டு வேளையும் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டா... ரத்தப்போக்கு நிக்குறதோட கருப்பை பலமடையும்.
கீழாநெல்லி சமூலம் (முழு செடி), கரிசலாங்கண்ணி சமூலம் ரெண்டையும் சம அளவுக்கு எடுத்துக்கோங்க. தண்ணியில நல்லா அலசிட்டு, மையா அரைச்சுக்கோங்க. அதுல ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பச்சை பசும்பால்ல கலந்து குடிக்கணும். மூணு மணி நேரம் கழிச்சுதான் வேற எதையுமே சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள்ல இருந்து, மூணு நாள் வரை இப்படி செய்துட்டு வந்தா... மேலே சொன்ன எல்லா நோயும் குணமாகும்.
காட்டு அவுரி இலையை மையா அரைச்சி, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பச்சை பசும்பால்ல கலந்து குடிக்கணும். இந்த வைத்தியத்தை செய்றப்ப... சாப்பாட்டுல உப்பைக் குறைச்சுக்கணும், புளியை நீக்கிடணும். மாதவிடாய் வந்த மூணாவது நாள்ல இருந்து, மூணு நாள் இப்படி சாப்பிடணும்.
|