Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:

 
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு!

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'காதல் கோட்டை' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். அஜீத்தை தன் காதலன் என்று உணர்ந்து கொள்ளும் தேவயானி, புகைவண்டியில் இருந்தவாறு 'சூர்யா, சூர்யா' என்று கூப்பிட, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான்கு வயது மகள் சிந்துரா பேசிய சிறு வசனம், க்ளைமாக்ஸ் பரபரப்பையும் மீறி எங்களை சிரிப்பலையில் தள்ளியது. "அய்ய... தப்பு. இது அஜீத். சூர்யா இல்ல. இது அஜீத்தானம்மா..?!" என்று என்னிடம் அவள் பெருமிதமாகக் கேட்க, பீறிட்ட எங்கள் சிரிப்பில் அவளும் பங்கு கொண்டாள். ஆனால், காரணம்தான் அவளுக்குப் புரியவில்லை!

எஸ்.பி.சிரோன்மணி, சென்னை-94

'பால் கணேஷ்' சி.டி... பலே பலே காமெடி!

குட்டீஸ் குறும்பு!

சொல்பேச்சு கேட்காமல் எப்போதும் ஏதாவது குறும்பு செய்துகொண்டே இருப்பான் என் மகன் சூர்யா. அன்று சி.டியில் 'பால் கணேஷ்' கதை பார்த்துக் கொண்டிருந்தான். அதில், பார்வதி தேவி தன் குழந்தை கணேசனை "இங்கேயே அமர்ந்திரு..." என்று காவலுக்கு நிறுத்திவிட்டு குளிக்கச் செல்லும் காட்சி வந்தது. உடனே நான், "பாரு... பால் கணேஷ் அவங்க அம்மா சொல்றதை எவ்ளோ சமர்த்தா கேட்குது..." என்றேன். உடனே அந்த ஐந்து வயதுச் சுட்டி, "பாரு பாரு... இப்போ அதோட அப்பா சிவன் சாமி வந்து அது தலைய வெட்டுவாங்க பாரு..." என்றான் கேலியாக.

வெடித்த சிரிப்பில் 'பால் காணேஷ்' சி.டி., அன்று எங்கள் வீட்டில் காமெடி சி.டியாகிப்போனது!

சி.புவனேஸ்வரி, கோவை

முருகன் வாங்கிய புல்லாங்குழல்!

குட்டீஸ் குறும்பு!

என் பேத்திக்கு படம் வரைவதில் அவ்வளவு இஷ்டம். அன்றும் அதேபோல் ஏதோ சுவாரஸ்யமாக வரைந்து கொண்டிருந்தவளின் டிராயிங் நோட்டை நான் எட்டிப் பார்க்க, புல்லாங்குழலுடன் இருந்தார் முருகன்!

"படம் நல்லாயிருக்குடா. ஆனா, முருகன் புல்லாங்குழல் வெச்சுருக்க மாட்டார்... கிருஷ்ணர்தான் வச்சுருப்பார்" என்றேன் அவளிடம்.

உடனே அவள் சற்றும் யோசிக்காமல், "பாட்டி... கிருஷ்ணரைப் பார்த்து என் முருகனும் அதேமாதிரி புல்லாங்குழல் வாங்கிட்டாரு!" என்றாள் படபட பட்டாசாக!

அந்த 'புல்லாங்குழல் முருகன்' அவள் பேச்சால் இன்னும் அழகாகிப் போனார் அந்தக் காகிதத்தில்!

எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி 'குட்டீஸ் குறும்பு,'
அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002

குட்டீஸ் குறும்பு!
 
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism