Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

Published:Updated:

 
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளியில் 'ப்யூபர்டி'... ஆனாலும் பதற்றமில்லை!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

'பெரியவளாகி'விட்ட எங்கள் உறவினரின் ஏழாம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்க்கச் சென்றிருந்தோம். பள்ளி வேளையில்தான் அது நடந்திருக்கிறது. ஆனால், சற்றும் பதற்றப்படாமல் ஸ்டாஃப் ஒருவரின் துணையோடு வீடு வந்து சேர்ந்திருக்கிறாள் அந்தப் பெண். பூப்பெய்துவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடனேயே, பதமாக அவளிடம் 'ப்யூபர்டி' பற்றியும், 'அப்படி' நிகழ்ந்துவிட்டால் செய்ய வேண்டியது பற்றியும் தெளிவாக அவளுடைய அம்மா முன்கூட்டியே விளக்கியிருக்க... அந்தப் பெண்ணும் சரியாக அதைப் புரிந்து கொண்டு நடந்திருக்கிறாள்.

இதையெல்லாம் அவளுடைய அம்மா சொன்னபோது... என் வகுப்புத் தோழி ஒருத்தி பள்ளியிலேயே பெரியவளானபோது, அழுத அழுகையும், யாரையும் அருகில் வரவிடாமல் செய்த ஆர்ப்பாட்டமும், பின் எங்கள் ஆசிரியை அவளை சிரமப்பட்டு தேற்றி, என்னோடு வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் நினைவுக்கு வந்தது.

இன்றைய காலத்தில் 10 வயதிலேயே நிறைய சிறுமிகள் 'ப்யூபெர்டி' அடைந்துவிடுவதால், மனதளவில் முன்கூட்டியே தயார் செய்து, தான் குமரியாகும் தருணத்தை மகிழ்ச்சியுடன் அந்தச் சிறுமியை கடக்க வைக்கலாம்தானே?!

எஸ்.கோடீஸ்வரி மீனா, வேலூர்

பில்லில் எகிறிய 400 ரூபாய்!

சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது, நானும் என் தோழியும் புடவை எடுக்க பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்றோம். கடலில் முத்து எடுப்பதுபோல தேடிப் பிடித்து எங்கள் பட்ஜெட்டுக்குள் ஒரு புடவையை செலக்ட் செய்துவிட்ட திருப்தியுடன் பில்லிங் கவுன்ட்டருக்குச் சென்றோம். அங்கிருந்த பெண் ஊழியர் கணினியில்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

டைப் செய்துவிட்டு, "1,550 ரூபாய் கொடுங்க..." என்றார். எங்களுக்கோ தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில், நாங்கள் புடவையில் பார்த்த விலை 1,150 ரூபாய்தான். 'ஒருவேளை சரியா பார்க்காம விட்டுட்டோமே...' என்று குழம்பியவாறே, "விலையை சரியாப் பாருங்க..." என்றோம். "ஸாரி..." என்று அந்தப் பெண் சரியான விலையை டைப் செய்து, பணம் பெற்றுக் கொண்டார்.

அன்று நாங்கள் சுதாரித்ததால் 400 ரூபாய் பறிபோகாமல் தப்பியது. பலசமயங்களில் ஜவுளிகளை இஷ்டம்போல எடுத்துக் குவித்துவிட்டு, பில்லிங் கவுன்டரில் கேட்கும் காசை கண்மூடிக் கொடுத்துவிட்டு, பையைப் பெற்றுக்கொண்டு நகருபவர்களுக்கு இது ஒரு அலர்ட் அனுபவம்!

நளினி ராமச்சந்திரன், கோயம்புத்தூர்

'வசூல்ராஜா'க்களை புறக்கணியுங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

என் மகனுக்கு ஜுரம் வந்ததால், சமீபத்தில் ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டோக்கன் போட பெயர் எழுதிக்கொண்டார்கள். நம்பரை பெற்றுக் கொண்டு வரிசையில் அமர்ந்தேன். அரை மணி நேரமாகியும் வரிசை நகரவே இல்லை. ஆனால், எனக்குப் பின் டோக்கன் போட்ட சிலர் உடனடியாக அழைக்கப்பட்டு, டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றுத் திரும்புவதைக் கவனித்தேன். "அவங்க எனக்குப் பின்னாடிதானே வந்தாங்க..?" என்று நான் புரியாமல் புலம்ப ஆரம்பிக்க, பக்கத்தில் இருந்தவர்தான் விவரம் சொன்னார். "நீங்க இந்த ஹாஸ்பிட்டலுக்கு புதுசா வர்றீங்களா? இங்க அப்படித்தான். சீக்கிரமா டாக்டரை பார்க்கணும்னா, அதுக்கு 'ஸ்பெஷல் ஃபீஸ்'ங்கற பேருல கூடுதலா கொடுக் கணும். நிதானமா பார்க்கறவங்களுக்கு வழக்கமான ஃபீஸ்" என்று சாதாரணமாகச் சொன்னார், அங்கே நீண்டநாள் கஸ்டமராக இருக்கும் அந்த நபர்.

ஆனால், எனக்குத்தான் அந்த அநியாயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. டாக்டர்களை கடவுளுக்குச் சமமானவர்கள் என்று மதிப்பார்கள். ஆனால், அதை பயன்படுத்தியே வசூல் ராஜாக்களாக மாறிவிட்டார்களே! மருத்துவ உத்தியோகத்தையும் வியாபாரமாக்கிவிட்ட இதுபோன்ற டாக்டர்களை புறக்கணித்தால்தான் அவர்களுக்கெல்லாம் புத்தி வரும்!

பிரேமா சாந்தாராம், சென்னை-110

உயிர் பணயம் வேண்டாமே!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

சமீபத்தில் கடக்க நேரிட்ட பெருஞ்சோகத்தை இங்கே எச்சரிக்கை அனுபவமாக்குகிறேன்... கண்ணீருடன்! என்னுடன் பணிபுரிந்த தோழிக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகிவிட்டன. ஆனால், அலுவல் காரணமாக கணவர் சென்னையில் இருக்க, பிரிந்திருந்த இவள் பெரும்பாடுபட்டு சமீபத்தில்தான் சென் னைக்கு 'டிரான்ஸ் ஃபர்' வாங்கிக்கொண்டு, ஒரு வயது குழந்தையுடன் சென்றாள். அன்று காலை வேலைக்குச் செல்லும் அவசரத்தில், டிரெயின் தண்டவாளத்தை குறுக்கே கடக்க முயன்று, இன்று இல்லாமலே போய்விட்டாள். வைத்து அழகூட உடல் கிடைக்காமல் சிதைந்த சோகத்தை என்னவென்று சொல்ல? சேர்ந்து வாழக் காத்திருந்த அவள் கணவரையும், குழந்தையையும் எப்படித் தேற்ற? மனம் ஆறவில்லை எனக்கு. நிரம்பி வழியும் பஸ்ஸில், படிக்கட்டில் காலேஜ் பையன் களுடன் 50 வயது மதிக்கத்தக்க சகோதரிகள் கையில் லஞ்ச் பேக்குடன் முண்டியடித்து நிற்பதைப் பார்க்கையில், மனம் பதைபதைக்கிறது. சிறுவர்களா நாம்... பின் விளைவுகள் பற்றி அறியாமல் பிழை செய்வதற்கு? ஏன் சகோதரிகளே இந்த அவசரம்... பரபரப்பு? நேரத்துக்காக பணயம் வைப்பது உங்கள் உயிர் என்பது நினைவிருக்கட்டும்!

- எஸ்.ராஜலஷ்மி கிருஷ்ணன், மருதகுளம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
 
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism