Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

Published:Updated:

 
தா.நெடுஞ்செழியன்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு.....

வெற்றிக்கு பாஸ்வேர்ட் !

பதற்றங்கள் மைனஸ்.... மார்க்குகள் ப்ளஸ் !

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றன. 'மேத்ஸ், சயின்ஸ் சப்ஜெக்ட்ஸ்ல 'சென்டம்' வாங்கணும்...', 'ஐ.ஐ.டி-யில சேரணும்' என்றெல்லாம் உங்களின் கனவுகள் வானம் தொடுபவையாக இருக்கலாம். தீவிர உழைப்பு, வானத்தை வசப்படுத்தும்! உங்களின் உழைப்புக்கு கைகொடுக்க, தேர்வுக்கு தயாராவதற்கான சில ஆலோசனைகளை இங்கே வழங்குகிறேன்... வாழ்த்துக்களுடன்!

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

தேர்வு நெருங்கும் நேரத்தில் ஏதாவது கைடோ, கணக்கு நோட்களில் ஒன்றோ காணாமல் போய்விட்டால், பதற்றம் படிப்பை காலி செய்துவிடும். எனவே, வழக்கமாக உட்கார்ந்து படிக்கும் அறை அல்லது இடத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள், ரெக்கார்டுகள், கைடுகள், ஸ்டேஷனரிகள் என்று அனைத்தையும் பிரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தேர்வு நாட்களில் திடீரென கரன்ட் கட்டாகி விட்டால், கஷ்டம். எனவே, வீட்டிலிருக்கும் எமர்ஜென்ஸி லைட்டை எப்போதும் தேவையான சார்ஜுடன் வைத்திருங்கள்.

படிக்கும் இடம் வெளிச்சம், காற்றோட்டம் உள்ளதாக இருக்கட்டும். ஒரேயடியாக படிப்பில் மூழ்கிவிடாமல் அடிக்கடி உங்கள் கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள். அதற்காக, படுத்துத் தூங்க வேண்டும் என்பதில்லை. ஜன்னல் அருகில் இருக்கும் மரத்தையோ அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களையோ அவ்வப்போது பார்த்து, உங்கள் கண்களை புத்துணர்வாக்கிக் கொள்ளுங்கள்.

என்னால பாஸ் பண்ண முடியுமா?', 'நல்ல மார்க் வாங்க முடியுமா?', 'மெடிக்கல் ஸீட் கிடைக்குமா?' போன்ற மன உளைச்சல், மற்றும் பதற்றங்களை எல்லாம் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். மார்க் தானாக வரும்.

உங்கள் கவனத்தை சிதறடிக்கும் உபகரணங்களில் இருந்து விலகியே இருங்கள். டி.வி, செல்போன், ஆர்குட், ஃபேஸ் புக், நெட் சாட்டிங், கேம்ஸ், எஸ்.எம்.எஸ். போன்ற விஷயங்களை எல்லாம் சற்று தள்ளி வையுங்கள். மனம் டி.வி-யையே சுற்றுவது போல் உணர்ந்தால், 'எக்ஸாம் வரைக்கும் கேபிள் கனெக்ஷனை கட் பண்ணிடுங்க' என்று வீட்டில் சொல்லிவிடுங்கள்.

நீங்கள் படிக்கின்ற சப்ஜெக்ட் போர் அடிப்பது போல தோன்றுகிறதா? அந்த சப்ஜெக்ட்டின் தியரியை விட்டுவிட்டு, ஈக்வேஷனை சிறிது நேரம் புரட்டுங்கள், படங்களை வரைந்து பாருங்கள். தகராறு தரும் கேள்வியை நம் நடைமுறை வாழ்க்கையின் பயன்பாட்டோடு ஒப்பிட்டு படியுங்கள். பரீட்சையில் கை கொடுக்கும்.

டைம் மேனேஜ்மென்ட் முக்கியம். ஒரு வாரத்தில் இந்த நாள் இந்தப் பாடம் ரிவிஷன், இந்த நாள் இந்தப் பாடம் ரிவிஷன் என்று டைம்டேபிள் போட்டுப் படியுங்கள். போட்ட டைம்டேபிளை வெற்றிகரமாக முடித்துவிடுங்கள்.

அதிகாலை, நள்ளிரவு என்று உங்களுக்கு எந்த நேரத்தில் படித்தால் உற்சாகமாகத் தோன்றுகிறதோ, பாடங்கள் சரசரவென மனதில் ஏறுகிறதோ அந்த நேரத்திலேயே படியுங்கள்.

இனி பெற்றோர்களுக்கு சில வரிகள்...

'பக்கத்து வீட்டுப் பையனை பாரு... எவ்வளவு நேரம் படிக்கிறான். நீ எட்டு மணிக்கெல்லாம் படுக்கப் போற...' என்று உங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு குறை சொல்லாமல், 'ஒன்பது மணி வரைக்கும் படிக்கலாம்லப்பா...' என்று இதமாகக் கூறுங்கள்.

அவர்கள் எக்ஸாம் சென்ட்டருக்கு கிளம்புவதற்கு முன்பே, நீங்கள் சில ஆப்ஷன்களை யோசித்து விடுங்கள். பஸ் லேட்டாகிவிட்டால் எப்படி கொண்டு போய் விடலாம், வண்டியில் பெட்ரோல் இருக்கிறதா, பிள்ளைக்குத் தேவையான ஸ்டேஷனரிஸ் எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டதா, சென்டர் எங்கே, எந்த ஹால் என்றெல்லாம் முதல் நாளே சென்று பார்த்து விட்டு வருவது போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டால், உங்கள் பிள்ளைகளின் கடைசி நேர டென்ஷன் குறையும்.

தேர்வு நாட்களில் எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளையே கொடுங்கள்.

ஒருவேளை, முதல் நாள் தேர்வை திருப்தியாக எழுதவில்லை என்பது போல உங்கள் பிள்ளை சோர்ந்து போனால், 'பத்து மார்க் கொஸ்டினைப் போய் விட்டுட்டியே... அய்யய்யோ' என்று நீங்களும் பதற வேண்டாம். அதை அப்படியே விட்டுத் தள்ளிவிட்டு, அடுத்த நாள் தேர்வுக்கு உற்சாகத்துடன் படிக்கச் சொல்லுங்கள்.

பிள்ளைகள் தீவிரமாக படித்து கொண்டிருக்கும்போது அவர்களின் கவனத்தைக் கலைப்பது போல சத்தமாகப் பேசுவது, சீரியல் பார்ப்பது, சண்டை போடுவது போன்றவற்றையெல்லாம் செய்யாதீர்கள்.

சாதாரண நாட்களிலேயே பெற்றோர்கள் திட்டினால், பிள்ளைகளுக்கு அந்த நாள் முழுதும் அதுவே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அதிலும் தேர்வு நாட்களில் திட்டினால், அது பரீட்சை பேப்பரிலும் எதிரொலிக்கும். எனவே, தேர்வு தருணத்தில் அவர்கள் மனதுக்கு நிம்மதியை மட்டுமே தரப்பாருங்கள்.

ஆல் த வெரி பெஸ்ட் ஸ்டூடன்ட்ஸ்!

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
- மீண்டும் சந்திப்போம்...
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism