Published:Updated:

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

Published:Updated:
'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!
'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !'

'டெக்கோ ஃபெஸ்ட் 2010' - சென்னை, அண்ணா யுனிவர்சிட்டியில நாலு நாள் நடந்த கலர்ஃபுல் கேம்பஸ் திருவிழா!

ஆல் ஓவர் தமிழ்நாட்டுல இருந்து அத்தனை கல்லூரிகள் கலந்துகிட்ட இந்த விழாவுல, ரங்கோலி, பூக்கோலம், சமையல், மெஹந்தி, ஹேர் டூ, வெஜ் கார்விங், ஜுவல்லரி டிசைன், ஃப்ளவர் அரேஞ்ச்மென்ட், அந்தாக்ஷரி... அப்புறம் பலருக்கும் பிடிக்காத கட்டுரை, கதை, கவிதை போட்டினு எக்க்கச்ச்சக்க்க ஈவன்ட்ஸ்!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

 

எத்தனை ஈவன்ட்ஸ் இருந்தாலும் நமக்கு முக்கியம் ஒரு சாண் வயிறுதானே? ஸோ, ஃபர்ஸ்ட் விசிட்... குங்கிங் காம்பெடிஷன் வென்யூ.

போயி பார்த்தா... 'ஃபயர்லெஸ் குக்கிங்'னு ஃபியர் கொடுத்தாங்க ஸ்டூடன்ட்ஸ். நெருப்பில்லாம சமைச்சு ஆதிவாசிக்கு அடுத்த வாரிசாக ட்ரை பண்ணிட்டிருந்த அந்த பயபுள்ளைகளோட ரெசிபிகள ஒரு ரவுண்ட் வந்தோம். அன்ஸியோட டேபிள் செம கலர்ஃபுல்லா இருக்க, அங்க ஹால்ட் ஆனோம்!

''இது 'சுதேசி சாலட்'. இந்தியாவுல இருக்கற எல்லா மாநிலங்கள்லயும் பிரபலமா இருக்கற பழங்களை வச்சு இந்த சாலட் செஞ்சுருக்கோம். எங்க மெனுவோட ஸ்பெஷாலிட்டி... இதுல முழு அளவு அன்பு, முழு அளவு அமைதி, முழு அளவு சந்தோஷம், முழு அளவு புரிந்துணர்வு சேர்த்து, அதுல கருணைய மெள்ள தூவி, நிறைய நம்பிக்கையை சேர்த்து, நல்லா கலக்கி, சரியான நேரத்துக்குள்ள எல்லோருக்கும் அன்பா பரிமாறப்படறதுதான்!''னு அவங்க லெக்சரை முடிச்சாங்க. நம்ம காது ரெண்டுலயும் 'குபுக்... குபுக்'!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!
'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

இந்த குக்கிங்ல அட்ராக்டிவ் அண்ட் ஆக்டிவ் டீம்... முருகவேல், பார்த்திபன், நல்லமணி டீம்தான்! 'பசங்க என்னய்யா சமைக்கறீங்க..?'னு எட்டிப் பார்த்தா, காஜு அவுல், ஃப்ரூட் சாலட், தாய் பெசல், ஆரஞ்சு எக்ஸ்டஸினு என்னென்னமோ பண்ணியிருந்தாங்கப்பா! 'பிற்காலத்துல'... அதாவது கல்யாணத்துக்குப் பிறகு, நல்லாவே பொழச்சுக்குவீங்க!

ஜுவல்லரி டிசைனிங்ல ஆர்த்தி அண்ட் கோ... கூவி கூவி அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டு இருந்தாங்க. ''இதெல்லாம் நாங்களே டிசைன் செஞ்சது. இதுக்கு செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல. சாதா கற்களுக்கு விலையும் இல்ல''னு அவங்க குயில் மாதிரி கூவிக் கூட்டதைக் கூப்பிட்டிட்டே இருந்தாங்க. 'பாசி வாங்கலியோ பாசி... ஊசிமணி சாமியோவ்.'

நிகழ்சிக்கு ஸ்பான்ஸரான 'ஏர்டெல்' நிறுவனம் தன் பங்குக்கு ஒரு ஸ்டேஜைப் போட்டு கூட்டின கூட்டம், ஜாலியோ ஜாலி! 'அருக்காணி தலையில எத்தனை ஸ்ட்ரா' - அவங்களோட போட்டிகள்ல மோஸ்ட் இம்ப்பார்ட்டன்ட் இதுதான்! ரெண்டு போட்டியாளர்கள்ல ஒருத்தர் கண்ணைக் கட்டிக்கிட்டு, கீழ கிடக்கற ஸ்ட்ராவை எடுத்து நிற்கறவரோட தலையில செருகணும். யாரு அதிகம் ஸ்ட்ரா செருகறாங்களோ... அவங்களுக்கு 'அருக்காணி அவார்ட்'! இப்படி பல அவர்ட்களோட ஏகப்பட்ட போட்டிங்க!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!
'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

ரங்கோலி ஏரியா முழுக்க ஒரே 'வாவ்' வண்ணஜாலம்! 'தாஜ்மஹால் எங்க இருக்கு?'னு ஷண்மதி கேட்க, 'ஆக்ரா'னு சொன்னோம் நாம அப்பாவியா!

'அப்டேட்ஸ் தெரியாம பேசக்கூடது. தாஜ்மஹால் இப்போ எங்க ரங்கோலியில இருக்கு!'னு சொல்லி, ஹார்ட் ஷேப்ல தாஜ்மஹாலை வரைஞ்சிருந்த அவங்க பூக்கோலத்தைக் காட்டி, மொக்கை போட்ட ஷண்மதி அண்ட் கோ கிட்டயிருந்து, கிரேட் எஸ்கேப்!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!

அடுத்து, ஹேர் ஸ்டைல் காம்படிஷன். அங்க 'தாரே சமீன் பர்' அமீர் கான் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணிக்கிட்டிருந்த கோஷ்டியை க்ளோஸ் அப்ல போய் பார்த்தா, நம்ம 'குங்கிக் கிங்' முருகவேல் அண்ட் கேங்! எல்லா போட்டிகள்லயும் கலந்துகிட்டு, 'ஆல்ரவுண்டர் ஆறுமுகம் அவார்ட்' வாங்கறதுதான் இவங்களோட் ஒரே குறிக்கோளாம்!

'சரி நடத்துங்க...'னு சொல்லிட்டு நாம கொஞ்சம் நகர்ந்தா... பொண்ணுங்க எல்லாம் தலைய விரிச்சுப் போட்டுட்டு 'சைத்தான் கி பச்சி' உலாவல் போட்டுக்கிட்டிருந்தாங்க.'போங்கம்மா நீங்களும் உங்க ஹேர் ஸ்டைலும்'!

மொத்தத்துல, ''படிப்பு, மக்கப்பு, மார்க், ரேங்க்-னு, சைலன்சராவே சுத்திட்டிருந்த எங்களுக்கு, இந்த நாலு நாளும் தவுசண்ட் வாலா திருவிழாதான்!''னு ஈவன்ட்ஸ்-ஐ எனர்ஜெட்டிக்கா என்ஜாய் பண்ணிணாங்க ஸ்டூடன்ட்ஸ்!

எல்லாம்... நாலு நாள் கிளாஸ் கட்டாயிட்ட சந்தோஷம்!

'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!
- செ.மனோ படங்கள் வீ.நாகமணி
'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!
'ஃபியர் கிளப்பிய ஃபயர்லெஸ் குக்கிங் !!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism