Published:Updated:

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

Published:Updated:
செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'
செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'
செம்மொழி மாநாடும்.... பி.டி. கத்திரிக்காயும் !

பொட்டிக்கடையில இருந்து, பார்லிமென்ட் வரை நாடு முழுக்க இப்போ நான் ஸ்டாப் டாக்கிங்... இந்தியாவுக்குள்ள வேண்டா விருந்தாளியா நுழைய பார்க்கற மரபணு மாற்றப்பட்ட 'பி.டி கத்திரிக்காயை'ப் பத்திதான் (புதுசா ஏதாச்சும் சொல்லுங்கப்பா).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

இதுக்கு எதிரா சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிபுணர்கள், அறிஞர்கள்னு ஆளாளுக்கு கருத்துகளை கொட்டிட்டு இருக்காங்க. ஆதரவா... அரசாங்கமே நின்னு அலப்பறை கொடுக்குது.

இந்த முக்கியமான தருணத்துல, நம்ம நாட்டோட நாளைய தூண்கள், இந்த விஷயத்துல என்ன நிலைப்பாடோட இருக்கறாங்கனு அறிய வேணாமா?! (கிளம்பிட்டாய்ங்கடா... கிளம்பிட்டாய்ங்க!)

ஓவர் டு மதுரை அமெரிக்கன் காலேஜ் பொண்ணுங்க...

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

"பி.டி கத்திரிக்காயைப் பத்தி என்ன நினைக்கறீங்க?"னு டி.சேனல் நியூஸ§க்கு 'பைட்’ கேட்கற ஏரியா ரிப்போர்டர் மாதிரி பொண்ணுங்ககிட்ட ஆஜராக,

"பி.டி உஷாவைத் தெரியும். அது என்னப்பா பி.டி கத்திரிக்காய்..? ஓ... அவங்க வீட்டுத் தோட்டத்துல விளையறதால அதுக்கு பேர் பி.டி கத்திரிக்காயா..?"னு ஸ்டார்டிங்லயே ஜெனரல் நாலெட்ஜை கார்த்திகா ஸ்ட்ராங்கா நிரூபிக்க,

"இல்லடி... இது வேற!"னு நம்மள காப்பாத்த வந்தாங்க ஜனனி!

"நாங்கூட இதப் பத்தி படிச்சிருக்கேன் (அப்பாடா!). கோயம்புத்தூர்ல ஏதோ செம்மொழி மாநாடு நடக்கப் போகுதாம்ல. அதுக்கு கலைஞர்தான் தலைமை தாங்குறாராம். அப்புறம்... ம்ம்ம்ம்... ஞாபகம் வந்திருச்சு. அங்ககூட 'கத்திரிக்கா’னு ஒரு குறும்படம் போடப் போறாங்களாம். அதுக்கு பி.டி கத்திரிக்காய்ங்கிற பேரை 'மரபணு கத்திரிக் காய்’னு தமிழ்ல பெயர் மாற்றம் செஞ்சா, வரிச்சலுகை தர்றதா அறிவிச்சுருக்காங்களாம். அந்த மேட்டர்தானே..? (என்னங்கடா நடக்குது இங்க..?!)"னு ஜனனி உள்ளூர் சரித்திரத்தையெல்லாம் ஒரே பாராகிராஃப்குள்ள குழப்பி சுருக்க...

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

"அடிப்பாவி... அப்பப்ப நியூஸ் பேப்பர்ல வர்ற ஹெட்லைனை எல்லாம் படிச்சுப்புட்டு, நீயே ஒரு ஸ்டோரிலைன் பிடிச்சுட்டியே..! கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணும்மா... முடியல"னு பதறின பாவனா,

"இது மரபணு மாற்றப்பட்ட ஒரு கிருமி கத்திரிக்காய். இதைச் சாப்பிட்டா பல சைடு எஃபெக்ட்ஸ் வருமாம். அதனால், இதை இந்தியாவுல அனுமதிக்க கூடாதுனு எல்லாரும் கதறிக்கிட்டு இருக்காங்க... சரியா?!"னு கரீக்கிட்டா மேட்டரைப் பிடிக்க (கை தட்டுங்கப்பா... கை தட்டுங்க), அவங்க பின்னாடி ஒரு ஒளி வட்டம்! சட்டுனு கேங் ஹீரோயின் ஆயிட்டாங்க பாவனா.

"பி.டி கத்திரிக்காய், ஒரு வகையில நல்லதுதான்!"னு அன்எக்ஸ்பெக்டட் நேரத்துல அஜீத் மாதிரி டாபிக் எடுத்து, ஒட்டுமொத்த கோஷ்டிக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தாங்க ப்ரியா.

"எப்பூடினா... கல்யாணம் ஆன உடனே, தனிக்குடித்தனம் போயிடணும் (இதுவல்லவோ லட்சியம்!). வீட்டுக்கு வெளியில இருக்கற கேட்ல, 'இங்கு 'பி.டி கத்திரிக்காய் சமையல்... ஜாக்கிரதை’னு ஒரு போர்டை மாட்டி தொங்கவிட்டுட்டோம்னா நாத்தனார், மாமியார், உற்றார், உறவினர் தொல்லையில இருந்து எஸ்கேப் ஆகிடலாம்ல?! அதையும் மீறி வந்தா... பி.டி கத்திரிக்காய் சாம்பார், அவியல், பொரியல், பிரியாணினு போட்டு அவங்களை அட்டாக் பண்ணி, அவுட் ஆக்கிடணும்!"னு பிரியா போட்ட ப்ளான்ல ஏரியாவே என்கவுன்ட்டராக,

அதுக்கு ஜால்ரா தட்டுற மாதிரி, "பி.டி. கத்திரிக்காய் மட்டுமில்ல... பி.டி. மசால் பொடி, பி.டி. கொத்தமல்லி, கறிவேப்பிலை, பி.டி. சீரகம்னு வீட்ல ஸ்பெஷல் அஞ்சறைப்பெட்டி ரெடி பண்ணி வச்சுக்கணும். அப்பத்தான் பக்கத்து வீட்டுக்காரங்க, 'ஒரு கரண்டி மசால் பொடி தாங்க’, 'கொஞ்சூண்டு சீரகம் கொடுங்க..’னு எல்லாம் வரமாட்டாங்க..."னு கண்டினியூ பண்ணி முடிச்சாங்க கார்த்திகா.

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'

இதையெல்லாம் பார்த்துட்டு ஏதோ காளியாத்தா கணக்கா ஆரம்பிச்ச லீனா, "2012-ல உலகம் அழியப் போகுதுனு மாயன் காலண்டர்ல சொன்ன மாதிரியே நடந்துகிட்டு இருக்கு. அதுக்கான முதல் அஸ்திரம்தான், இந்த பி.டி கத்திரிக்கா. மூன்றாம் நூற்றாண்டுல நெப்போலியன் போனபார்ட்டுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல செஞ்சாங்க. அதிரடி மன்னன் புரூஸ் லீக்கு அவரோட மனைவியே ஸ்லோ பாய்சன் கொடுத்துதான் கொன்னுட்டாங்களாம் (இந்தப் பொண்ணு என்னதான் சொல்ல வருது?!). அதுமாதிரி உலகத்துக்கே ஒரு ஸ்லோ பாய்ஸன்தான், இந்த பி.டி. அயிட்டம்ஸ். மனித குலத்துக்கே ஒரு பெரிய அழிவு காத்துக்கிட்டிருக்கு. இதையெல்லாம் காப்பாத்த 'கேப்டன்' விஜயகாந்த்தான் வரணும்னு எதிர்பாக்காம, இந்த நாட்டோட குடிமகள்களா (!), நாமதான் ஸ்டெப்ஸ் எடுக்கணும்"னு சொல்லவும்... எல்லாருக்குமே செம கிர்ர்ர்ர்!

"ஆத்தாடி! இவ என்னடி 'பேராண்மை' படத்தை நூறு நாள் முழுக்க நானூறு ஷோ பார்த்துட்டு வந்தவ மாதிரி பேசுறா..! ஹிஸ்டரியப் பத்தி இவ்ளோ பேசறியேம்மா..? ஹிஸ்டரி சப்ஜெக்ட்ல ஒரு அரியர் வச்சுருக்கியே... அதுல இருந்து முதல்ல உன்னையக் காப்பாத்து!"னு ப்ரியா கூட்டத்துல கட்டுச் சோத்தை அவுக்க... ஆரம்பிச்சது டெரர் அட்டாக்!

நாம அப்ஸ்காண்ட்!

- இரா.கோகுல் ரமணன்
படங்கள் ஜெ.தான்யராஜு

செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'
 
செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'
செம்மொழி மாநாடும்...பி.டி.கத்திரிக்காயும் !'
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism