எங்கள் வீட்டுக்கு அருகிலேயே என்னுடைய காலேஜ். எங்கள் வீட்டு நாய் ஜாலி, தினமும் கல்லூரி வாசல் வரை என்னுடன் வந்துவிட்டு, திரும்பிவிடும். ஒரு நாள், 'போ போ...' என்று நான் விரட்ட விரட்ட, வகுப்பறை வரை தொடர்ந்து வந்தது. வகுப்புக்குள் ஒரு ஓரமாக படுத்துக்கொண்டது. அதற்குள் பெல் அடித்து, மேம் வந்து கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட... அனைவரும் கப்சிப்!
'எப்ப குரைச்சு, நம்மள மாட்டிவிடப் போகுதோ...' என்ற பதைபதைப்புட னேயே நொடிகள் நகர்ந்தன. ஒருவழி யாக பீரியட் முடிந்து பெல்லும் அடித்துவிட, 'அப்பாடி' என்று பெருமூச்சுவிட்டேன். ஆனால், மேம் வகுப்பிலிருந்து வெளியேறியபோது, அவரை முந்திக்கொண்டு என் ஜாலி ஓட, 'செத்தேன்!' என்று நினைத்துக் கொண்டேன். திகிலடைந்து விசாரித்த மேமிடம்... நான் உண்மையை ஒப்பித் தேன். மேமோ ஆச்சர்யத்துடன், ''முக் கால் மணி நேரமா கிளாஸ்ல எந்த சத்தமும் போடாம ஒரு நாய் உட்கார்ந் திருந்ததா... குட்!
நீங்களும்தான் இருக்கீங் களே?!'' என்று ஒரு 'குட்டு' வைத்து நகந்தார். அந்த அவமானத்தையும் மீறி வகுப்பில் வெடித்தது சிரிப்பொலி!
- இந்திராணி தங்கவேல், மும்பை
"குட்டாதீங்க மேம்... அடிங்க!"
|