Published:Updated:

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

Published:Updated:

ஃபீலிங்... ஹீலிங்..!
சி.ஆர்.எஸ்.
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உன் கண்ணில் நீர் வழிந்தால்... உஷார்... உஷார்... உஷார்!
ஃபீலிங்.. ஹீலிங்...!

லெக்சரர் கிளாஸில் நுழைந்ததும், 'அசைன்மென்ட் எழுதாதவங்க எல்லாம் எழுந்திரிங்க...' என்பார்.

வகுப்பிலிருக்கும் ஐம்பது பேரில், ஐந்து பேராவது எழுந்து நிற்பார்கள். அதில் மூன்று பேர் எழுதாததற்கு காரணம் சொல்வார்கள். ஒரு பெண் தலையைக் குனிந்தபடி லெக்சரர் திட்டுவதைக் கடமையாக கேட்டுக் கொண்டிருப்பாள். ஒரு பெண் மட்டும் மேம் எதுவும் கேட்கும் முன்னரே பொலபொலவென கண்ணீர் பொழிவாள். மேமுக்கும் மற்ற மாணவிகளுக்கும் காட்சிப் பொருளாகி, 'ஆரம்பிச்சுட்டாப்பா...' என்று அவர்களின் கேலிக்கு உள்ளாவாள்.

வகுப்புக்கு எப்படியும் இப்படி சில 'ஆரம்பிச்சுட்டாப்பா...' கேஸ்கள் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் தொட்டாசிணுங்கிகள் இவர்கள்.

ஷைலுவும் இந்த ரகம்தான்!

தமிழ் சினிமாவில் வரும் இலக்கண ஹீரோயினாக கிராமம் ஒன்றில் இருந்து படிப்புக் காக நகரத்துக்கு வந்தவள் ஷைலு. வகுப்பில் யாரிடமும் அதிகம் பேசாவிட்டாலும், எதற்கெடுத் தாலும் அழுது தீர்க்கும் குணத்தால் கல்லூரி முழு வதிலும் பிரபலமாகிப் போனாள். "ஷைலுவா..? 'இன்னிக்கு மழை வராது'னு சொன்னாக்கூட அழற பொண்ணாச்சே அவ?!"

- இது அவள் கல்லூரி பிரின்ஸிபால் அவளைப் பற்றி அடித்த கமென்ட் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!

பரீட்சையில் மார்க் குறைந்தால், ஆடிட்டோரியத்தில் ஸீட் கிடைக்காவிட்டால், லைப்ரரியில் அசைன்மென்ட் புக் கிடைக்காவிட்டால், செல்போன் சிக்னல் கிடைக்காவிட்டால், ஏன்... பேனா சரியாக எழுதாவிட்டால்கூட அழுது அழுது, இப்படி தன்னை கல்லூரிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறாள் ஷைலு. இப்படி எதற்கெடுத்தாலும் அழும் அவள், ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில் திடீரென ஏற்பட்ட கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள தோள் தேடியபோது கூட, 'ஆரம்பிச்சுட்டாப்பா...' என்று அவளைக் கை கழுவிச் சென்றிருக்கிறது கூட்டம். மனம் பாதிக்கப்பட்டவள், பேராசிரியை ஒருவர் மூலமாக என்னிடம் அழைத்து வரப்பட்டாள்.

இப்படி எடுத்தற்கெல்லாம் அழுவதற்கு, பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று இயற்கை. டூ-வீலரில் 'ஷாக் அப்ஸர்வர்' என்று ஒன்று இருக்கும். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும்போது, அதிர்வை ஏற்படுத்தாமல் காப்பாற்றுவது இந்த ஷாக் அப்ஸர்வர்தான். அந்த ஷாக் அப்ஸர்வர் போல, நம் மூளை யில் நிறைய அமிலங்கள் உள்ளன... மனிதனின் மனநிலையில் ஏற்படும் அதிர்ச்சியை கன்ட்ரோல் செய்ய. அந்தச் சுரப்புகள் குறையும்போது, அவர்களால் எந்த விஷயத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல், எதற்கெடுத்தாலும் அழுவார்கள்.

இரண்டாவது காரணம், அவர்களாகவே வளர்த்துக் கொள்ளும் இயல்பு. மற்றவர்கள் தன் மீது கரிசனம் காட்ட வேண்டும் என்பதற்காகவே அழுகாச்சி காவியம் படைக்கும் இவர்களை, உலகம் 'பாவம்...' என்று சொல்லும். தேவையில்லாத இந்த அழுகை எல்லை தாண்டும்போது, அதையே மனநல மருத்துவர்கள், 'ஹிஸ்டீரியா' என்போம்.

இதில் ஷைலுவின் பிரச்னைக்கு முதல் காரணம்தான் மூலம் என்பதால், உணர்ச்சிகளை கன்ட்ரோல் செய்ய, அழுகையை அரஸ்ட் செய்ய மனநல பயிற்சி கொடுத்து அனுப்பினேன். இரண்டாவது காரணக்காரர்கள், அழுது அழுது 'ஹிஸ்டீரியா' வளர்க்காதீர்கள்... உஷார்!

- ஃபீல் பண்ணுவோம்...
மாடல் ஷெர்மின்,
படம் எம்.உசேன்

ஃபீலிங்.. ஹீலிங்...!
 
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism