தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பங்கேற்றுக் கொண்டுஇருக்கிறார்கள் நம் சகோதரிகள். ஆண்டாண்டு காலமாக அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் உள்ளாட்சிக்குள் வந்தபோது ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்கள். 'பஞ்சாயத்து - உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களை இயக்குவது ஆண்கள்தான்' என்ற விமர்சனம் இருந்தது. ஆனால், இன்று தன்னந்தனியாகவும் திறமையாகவும் பெண்கள் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத்திலும் அந்த நிலை வரவேண்டும். எனவே, 'இந்த 33% இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும்' என்று எதிர்ப்பைக் காட்டாமல் இந்த கூட்டத் தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக நிறைவேறும்!"
காயத்ரிதேவி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்.
''பழமைவாத சிந்தனை கொண்டவர்கள் என்று கருதப்படும் பாகிஸ்தானில்கூட 21.3% பெண்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கு ஓட்டு உரிமை மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் பெண்கள் அரசியல் அதிகாரத்துக்கு வந்த பின்புதான் அந்நாடு, உலகின் வளர்சியில் 25-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கு வெறும் 10.8% என்ற அளவில்தான் நாடாளுமன்றத்தில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
|