Published:Updated:

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

Published:Updated:

வீட்டுக் கடன்கள்...
விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?
விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

'எலி வளையானாலும், தனி வளை' என்பது காலங்காலமாக மக்களின் மனதில் ஊறிப்போயுள்ள பழமொழி. அந்த ஆசைதான் மக்களைத் தனக்கென ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள உந்தித் தள்ளுகிறது!

தாத்தா குடிசை வீடு வேய்ந்தார்; அப்பா ஓட்டு வீடு கட்டினார்; இப்போது நாம்..?

- பிழைக்க நகர்ந்த பெருநகரங்களில் ஏறிப்போயுள்ள நிலம் மற்றும் வீடுகளின் விலையால் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்படி பலரும். ஆனாலும், 'எப்படியாச்சும் ஒரு சொந்த வீடு கட்டிடணும்...' என்ற இந்த மனஓட்டத்தை படித்துவிட்ட வங்கிகள், 'வீட்டுக் கடன்... வாங்க, வாங்க!' என்று கை நீட்டுகின்றனர். ஒரு காலத்தில் 'வீட்டின் மேல் கடன் வாங்குவது கௌரவக் குறைச்சல்' என்று கருதிய தமிழக மக்களும், இப்போது வீட்டுக் கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

'ஓடி வா... ஓடி வா... வெறும் 7% வட்டிதான். எங்ககிட்ட ஓடி வா!',

'எங்ககிட்ட 6% வட்டிதான். அதனால இங்க ஓடி வா... ஓடி வா!'

இப்படியெல்லாம் கூப்பாடு போட்டு அழைக்கும் வங்கிகள், லோன் பெற்ற ஓராண்டுக்குள்ளாகவே அந்த வட்டி விகிதத்தை 10%... 12%... என்று இஷ்டத்துக்கு எகிற வைத்து, உங்களின் இதயத்துடிப்பை தாறுமாறாக்கத் தவறுவதில்லை. அதேசமயம், புதியவர்களை இழுத்துப்போட... '5.99% வட்டி மட்டுமே' என்றுகூட வலை விரிப்பது தொடர்கிறது.

இந்தச் சூழ்நிலையில், வீட்டுக் கடன் பற்றிய தகவல்களைப் பெற, சென்னையைச் சேர்ந்த ஃபைனான்ஷியல் நிறுவனங்களில் கன்சல்டன்ட்டாக பணிபுரியும் சிலரிடம் பேசினோம். "இந்த விஷயத்தைப் பேசினால் ஏகப்பட்ட உண்மைகளை உடைத்துப் போட வேண்டியிருக்கும். அது எங்களுடைய வேலைக்கே உலையாக முடியலாம். எனவே, தகவல்களை மட்டும் சொல்கிறோம். எங்களைப் பற்றிய விவரங்களை மறைத்துவிட்டு வெளியிடுங்கள்" என்ற வேண்டுகோளுடன் பேசினார்கள்.

அவர்கள் சொன்ன தகவல்கள் எல்லாமே வீட்டுக்கடன் என்ற பெயரில் எப்படி எப்படியெல்லாம் வலை விரிக்கப்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

"ரியல் எஸ்டேட் கிடுகிடு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் என்று இப்போது இருக்கும் சூழ்நிலையில், கையில் தொகையை வைத்துக் கொண்டு அஸ்திவாரம் போடும் நிலையில் பெரும்பாலா னவர்கள் இல்லை. அவர்களுக்கான ஏணியாக வங்கி கள் முன் வைக்கும் 'வீட்டுக் கடன்கள்', கண்டிப்பாக வரவேற்புக்கு உரியவைதான். ஆயினும், 'வீட்டுக் கடன் என்பது லாபமா, நஷ்டமா?' என்பது, அந்தக் கடன் சம்பந்தப்பட்ட ஷரத்துகளை நாம் தேர்ந்தெடுக்கும் விதத்திலும், அதன் சூட்சமங்களை அறிந்துகொள்ளும் தெளிவிலும்தான் அடங்கி இருக்கிறது" என்று ஆரம்பித்தவர்கள், 'வீட்டுக்கடன்' பற்றி ஏ டு இஸட் நாம் தெளிவுபெற, விரிவாகப் பேசினார்கள்.

வீட்டுக் கடன்... அடிப்படைகள்!

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

"ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யும்பட்சத்தில், முதலில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். அது உங்களுக்குச் சரிப்பட்டு வரும்பட்சத்தில், அடுத்தாக எவ்வளவு தொகையை நீங்கள் கடனாக வாங்கலாம் என்பதை, உங்களின் பொருளாதாரத் திறனைப் பொறுத்து முடிவெடுங்கள். வங்கிகளைப் பொறுத்தவரை அதிகபட்சம் உங்களின் சம்பளத்தில் பாதியை, மாதத் தவணையாக (EMI) கருதி, அதற்கேற்ற தொகையைக் கடனாகத் தருவார்கள். அத்தொகையை தவணையாக வங்கிக்குச் செலுத்திவிட்டு, மாதத்தின் மற்ற செலவுகள், அவசரச் செலவுகளை மீதி சம்பளத்தில் உங்களால் சமாளிக்க முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். அது சிரமம் தரும் எனும்பட்சத்தில், கடன் தொகையைக் குறைத்துக் கொண்டால், மாதத் தவணையும் குறையும். எனவே, நிதானித்து முடிவெடுங்கள்.

இதில் இன்னொரு வழி, தவணைத் தொகையைக் குறைக்க, ஆண்டுகளைக் கூட்டிக் கொள்ளலாம். அதாவது, ஐந்து லட்ச ரூபாயை ஐந்து வருடத்தில் திருப்பி செலுத்துவதற்கான தவணைத் தொகை உங்களுக்கு சௌகரியப் படாத பட்சத்தில், ஏழு வருடத் தில் திருப்பி செலுத்துமாறு லோன் எடுத்துக் கொள்ளலாம். இப்படி ஆண்டுகள் கூடுவதால், தவணைத் தொகை குறையும். ஆனால், வட்டி உயரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லோன் சாங்ஷன் ஆவது சுலபமா?!

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

கேட்கிறவர்களுக்கெல்லாம் கடனை வழங்காது வங்கி. அதற்கான தகுதி உடையவரா என்று நீங்கள் வங்கியால் திறனறியப்படுவீர்கள். அதற்கு, உங்களின் மாத வருமானம், சொத்துக்கள், 'சிபில்' (Credit Information Bureau India Limited) எனும் அமைப்பு தரும் விவரங்களின் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படும். இந்த சிபில்... ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு. இங்கே அனைத்து வங்கிகளின் அனைத்து டேட்டாக்களும் ஒருங்கிணைக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் இதற்கு முன்பு வேறு எந்த வங்கியிலிருந்தாவது கடன் வாங்கி இருக்கிறீர்களா, அதை சரியாக கட்டி இருக்கிறீர்களா போன்ற அனைத்து விவரமும் இங்கே கிடைக்கும். 'ஒரு டூ-வீலர் லோன் வாங்கிட்டு ஒழுங்கா கட்டாம விட்டுட்டேன். ஆனா, அதெல்லாமா இதுல தெரியப் போகுது..?' என்று நீங்கள் கேட்டால், 'தெரியும்!' என்பதுதான் அழுத்தமான பதில். எனவே, எந்த லோன்களானலும் முறைப்படி செலுத்திவிடுங்கள். ஏனெனில், 'சிபில்' உங்களுக்கு நல்ல சர்டிஃபிகேட் தந்தால்தான் லோன் சாத்தியமாகும்.

EMI - ஒரு விளக்கம்!

லோனுக்கு நாம் செலுத்தும் மாதத் தவணை என்பது, அசல் மற்றும் வட்டி இரண்டும் கலந்தது ஆகும். ஒட்டுமொத்த தவணைக் காலத்தில் முதல் பாதி ஆண்டுகளில் நீங்கள் கட்டும் தவணையில் பெரும்பகுதி வட்டிக்கே எடுத்துக் கொள்ளப்படும். சிறுபகுதி மட்டுமே அசலில் இருந்து கழிக்கப்படும். இறுதி ஆண்டில்தான் அதிக அசல், குறைந்த வட்டி என்ற விகிதம் கடைபிடிக்கப்படும்.

மாறும் வட்டி விகிதங்கள்... தெளிவு பெற்று தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் எடுக்கும் லோனின் வட்டி விகிதத்தில், நிலையானது (Fixed), மாறக் கூடியது (Floated) என்று இரண்டு சாய்ஸ்கள் இருக்கும். உங்களுக்கு சரியானதை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள். நிலையான வட்டி விகிதம் என்பது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே பொதுவாக வழங்கப்படுகிறது. ஆனால், சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து அது எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கப்படலாம் என்ற உள் ஷரத்துடன்தான் அந்த ஆப்ஷனையே உங்களுக்கு வழங்குவார்கள். பொருளாதார ஏற்ற இறக்கம் பெரிய அளவில் இருந்தால், அதைக் காரணமாகக் காண்பித்து, நிலையான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க முடியும். ஒரு வங்கியின் வீட்டுக் கடன் பிரிவானது தன்னுடைய பணத்தில் லோன் கொடுக்கும்போது தானே வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம். பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. பணத்தேவைக்காக இவர்கள் ரிசர்வ் பேங்க் போன்ற வங்கிகள் அல்லது தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இவர்கள் வாங்கும் கடனுடைய வட்டி அதிகமானால், அவர்களிடம் கடன் வாங்கும் உங்களின் வட்டியும் அதிகமாகும். என்றாலும், மாறும் வட்டிவிகிதத்தைவிட, நிலையான வட்டி என்பது ஓரளவுக்கு பலன் தரக்கூடியதே!

இடையிலேயே கடனை முடிக்க முடியுமா?

மாதத் தவணை என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் கையில் குறிப்பிட்ட அளவுக்கு ஒரு தொகை இருந்தால் (Part payment) அதைக் கட்டி மாதத் தவணை அல்லது கடன் திரும்பச் செலுத்தும் காலம் இவை இரண்டில் ஒன்றை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அந்தத் தொகை அப்படியே அசலில் இருந்து கழிக்கப்படும். ஆனால், இம்முறையால் வங்கிகளுக்கு நஷ்டம் என்பதால், அவை இப்படி நடப்பதை விரும்புவதில்லை. இதனாலேயே, அடிக்கடி 'பார்ட் பேமன்ட்' என்ற வகையில் கட்டிக் கடனை சீக்கிரம் அடைப்பவர்களுக்கு சில வங்கிகள் அபராதமும் போடும்!

ஒருவேளை உங்களிடம் முழு கடன் தொகையும் சொந்தப் பணமாக கிடைத்தால், அப்படியே கடனை அடைத்து விடலாம். இப்படி கடன் அடைப்பவர்களிடமிருந்து முன்பு வங்கிகள் அபராதம் வசூலித்தன. அரசு இப்போது அதற்கு தடைவிதித்து உள்ளது. அதேசமயம், வட்டிவிகிதம் கூடுதலாக இருக்கிறது என்று வேறு வங்கிக்குக் கடனை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், அபராதத்தில் இருந்து தப்ப முடியாது. இந்த அபராதத்தை ப்ரீ லூஸர் பெனாலிட்டி (Pre loser penalty) என்கிறார்கள்.

குறைந்த வட்டி விகிதத்துக்காக
வங்கியை மாற்றுவது லாபமா?

தவணைக் காலத்தில் வேறொரு வங்கியில் வட்டிவிகிதம் குறைவாக இருக்கிறது என்று நினைத்து, உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் வாங்கிய துவக்க காலத்திலேயே மாறிவிட்டால், அதனால் உங்களுக்கு லாபம் இருக்கும். ஆனால், பாதி காலம் வரை செலுத்தியபிறகு மாறுவது பெருத்த நஷ்டத்தையே தரும். ஏனெனில், ஆரம்ப காலங்களில் நீங்கள் செலுத்தும் தவணைத் தொகையில் வட்டிதான் அதிகமாக கழிக்கப்படும். அசல் அப்படியே இருக்கும். எனவே, எதிலும் கால்குலேஷன் முக்கியம்!" என்று முடித்தார்கள்!

"நம்ம ஆயுசுக்கு சொந்தக் காசுல வீடு கட்டமுடியாது. ஆனா, மாசாமாசம் வாடகை கொடுக்கறதா நெனச்சுக்கிட்டு, தவணையைக் கட்டினா வீடு மிச்ச மாயிடும்" என்கிற நடுத்தர வர்க்கத்தின் மனோபாவம்தான்... வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகள் பலவற்றுக்கும் முக்கியமான ஆதார ஸ்ருதி. ஆனால், அவர்களையெல்லாம் கசக்கிப் பிழியும் விதத்தில் வங்கிகளின் தந்திர வலைகள் விரிந்து கொண்டே இருந்தால்... ஒரு கட்டத்தில் வீட்டுக் கடனை கட்டமுடியாமல் பலரும் வீதிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், இந்த விஷயத்தில் வங்கிகள் ஒருபோதும் உங்களுக்காக யோசிக்கப் போவதில்லை. எனவே, கடன் திட்டங்களின் சாதக-பாதகங்களை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட பிறகே அடியெடுத்து வையுங்கள் மக்களே!

இரா.மன்னர்மன்னன்
- படங்கள் து.மாரியப்பன்

5.99 % எப்படி சாத்தியம் ?

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?

"வங்கிகளும், கட்டுமான நிறுவனங்களும் இணைந்து நடத்தும் சில 'வீட்டுக் கடன் மேளா'க்களில் '6.25% வட்டிக்கு வீட்டுக் கடன்', '5.99% வட்டிக்கு வீட்டுக் கடன்!' என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். உண்மையில் எந்த ஒரு வங்கியாலும் அவ்வளவு குறைவான வட்டிக்கு நேரடியாக வீட்டு லோன் கொடுக்கவே முடியாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் அதற்கு இடம் கொடுக்காது. வங்கிகள் சராசரியாக 8.25 அல்லது 8.75% வட்டிக்கே லோன் கொடுக்கும் (இது பிப்ரவரி மாத நிலவரம். மார்ச்சில் இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது).

ஆனால், அந்த மேளாவில் கலந்து கொள்ளும் கட்டு-மான நிறுவனங்கள் வாயிலாக நீங்கள் வீடு கட்டுவதாக ஒப்புக் கொண்டால்... வங்கிகள் நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச வட்டிவிகிதமான 8.25% மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சொல்லும் 5.99% என்பதற்கு இடையிலான வித்தியாச தொகையை, கட்டுமான நிறுவனங்களே செலுத்திவிடும். அதாவது, 2.26% வட்டித் தொகையை செலுத்தும் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு, அதன் மூலமாகவே உங்களின் வட்டி விகிதத்தை 5.99% எனக் குறைப்பார்கள்.

விஷயம் என்னவென்றால், அந்த நிறுவனம் சொல்லும் குறிப்பிட்ட காலம் வரையில்தான் (பொதுவாக ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள்) வட்டி விகிதம் 5.99%ல் நிலையாக இருக்கும். அந்த காலம் முடிந்தவுடன் அப்போது அந்த வங்கியில் என்ன வட்டி நிலவரமோ அதை நீங்கள் பின்பற்ற வேண்டியதுதான். அது 14% ஆக இருந்தாலும் சரி, 20% ஆக இருந்தாலும் சரி.

'எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்... முதல் வருடம் நமக்காக 2.26% வட்டியைக் கட்டுகிறார்களே... அது நமக்கு லாபம்தானே?' என்று ஒரு கேள்வி எழும்.

அந்த நிறுவனம் உங்களுக்காக 2.26% வட்டியை ஓராண்டுக்கு செலுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று மேலும் ஒரு கேள்வியை எழுப்பிப் பாருங்கள்... விஷயம் புரியும்! அதாவது, உங்களுக்காக வட்டி கட்டு-வதால் ஏற்படும் பண இழப்பை, உங்கள் பணத்திலேயே-தான் சரிகட்டுவார்கள். உங்களுக்காக அவர்கள் கொடுக்கும் எஸ்டிமேட் வேண்டுமென்றே அதிகரிக்கப்பட்டிருக்கலாம்... அல்லது, தரம் குறைவான பொருட்கள் பயன்படுத்தி உங்களுக்கான வீடு கட்டப்பட்டு, அத்தொகை அட்ஜெஸ்ட் செய்யப்படலாம். எனவே, 'குறைந்த வட்டி' கூவலை கட்டுமான நிறுவனங்கள் முன் வைக்கும்போது... அதற்கு செவி சாய்க்க நினைத்தால்... பத்துக்கு நூறு தடவை யோசியுங்கள்" என்று சொன்னார்கள் சில ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்கள்.

இதைப்பற்றி சமீபத்தில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற வீட்டு லோன் மேளாவில் இருந்த 'அட்சயா ஹோம்ஸ்' நிறுவன ஸ்டாலில் கேட்டபோது... ''நீங்கள் சொல்லும் கணக்கு சரிதான். அதாவது, வித்தியாசப்படும் வட்டித் தொகையை நாங்கள்தான் வங்கிக்கு செலுத்துவோம். அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது, தற்போது கட்டுமானப் பணிகள் குறைந்த அளவிலேயே நடக்கின்றன. அதனால், எங்க-ளுடைய லாபத்தைக் குறைத்துக் கொண்டு, வாடிக்கையாளருக்காக வட்டியை நாங்கள் கட்டுகிறோம். மற்றபடி, தரம் குறைந்துவிடும், எஸ்டிமேட் அதிகரித்துவிடும் என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை" என்றார்கள்.

விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?
 
விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?
விரலைச் சுட்டுக்கொள்ளாமல் வீடு கட்டுவது எப்படி ?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism