Published:Updated:

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

Published:Updated:

'சமைத்தால் கிச்சன்...சந்தித்தால் ஹால்...சாய்ந்தால் பெட்ரூம்...!
ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்
ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஆல் இன் ஒன்'அசத்தல் அபார்ட்மென்ட் !

நான்கு மூலைகளைக் கொண்ட ஒற்றை அறையைக் காட்டி, ''இதுதான் வீடு. சமைக்கும்போது கிச்சன். உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தா ஹால். நைட் தூங்கும்போது பெட்ரூம். உங்க இஷ்டம் போல வாழலாம்..." என்று வீட்டு புரோக்கர்களை வைத்து ஜோக்காக சொல்லப்படும் ஒரு விஷயம்... இப்போது கிட்டத்தட்ட நிஜத்தில்!

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

'இருக்கும் சதுர அடிகளுக்குள் சகல வசதிகளையும் கொண்டு வருவது எப்படி..?' என்ற யோசனையில் விளைந்திருக்கும் ஸ்டூடியோ அபார்ட்மென்ட் வீடுதான் அது!

இப்போது சென்னையில் ஆங்காங்கே முளைத்துள்ள புதுவரவான 'ஸ்டூடியோ அபார்ட்மென்ட்' பற்றிய தகவல்களைத் தருகிறார் 'சென்னை ஸ்டார் சிட்டி' நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் புவனா பாரதி. இவர், ஏவி.எம். குடும்பத்து வாரிசுகளில் ஒருவர்.

''ஸ்டூடியோ அபார்ட்மென்ட், வெளிநாடுகளில் பிரபலமான மற்றும் வசதியான ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் ஐடியா. இதன் அமைப்பு என்று பார்த்தால்... 300, 400, 500 சதுர அடிகளுக்குள் கட்டப்பட்ட வீடு. ஹாலின் ஓரத்திலேயே கிச்சன் மேடை. வெளிநாடுகளில் சமையலை ஒரு தனி வேலையாக ஒதுக்கி, அதிக நேரத்தைக் கழிப்பதில்லை. புத்தகம் படிப்பது, டி.வி. பார்ப்பது போன்ற பிற வேலைகளைப் போலவே சமையலையும் 'ஈஸி ஹேண்ட்'-ஆக செய்கிறார்கள். அதற்கு ஏற்றதுதான் இந்த ஏற்பாடு. இதனால் அவர்கள் ஹாலில் பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டே ஓரத்தில் இருக்கும் கிச்சனில் சமையலையும் முடித்துவிட சுலபமானதாக இருக்கும். சமைத்து முடித்தபின் சமையல் மேடையைச் சுத்தப்படுத்தி விடுவதும் அவசியம். இல்லையென்றால் வீடு முழுவதும் சமையல் வாசனை பரவிக்கொண்டே இருக்கும். ஸ்டவ் உள்ளிட்ட அனைத்தையும், அதற்கென பிரத்யேகமாக இருக்கும் ஷெல்ஃபுகளுக்குள் தள்ளிவிடவேண்டும். அந்த ஹாலேதான்... பெட்ரூம்!

முடிந்தவரை பொருட்களை எல்லாம் வெளியே பரப்பிப் போடாமல், அலமாரிக்குள்ளேயே அடைக்கலப்படுத்தி விடலாம். இதனால் இடமும் மிச்சமாகும். இன்னொரு முக்கிய அம்சம்... இந்த டைப் வீடுகளில் ஹால், பெட்ரூம், அடிஷனல் பெட்ரூம் என்று ரூம்களை பிரிப்பது சுவரல்ல... மரத்தடுப்புகள். இடம் தேவைப்பட்டால் தடுப்புகளை எடுத்துவிட்டு, இரண்டு பெட் ரூம்களையும் ஒரே ஹாலாக்கிவிடலாம். பாத்ரூம் மட்டும் வழக்கமான வீடுகளில் உள்ளது போல அட்டாச்டுதான்" என்று விளக்கிய புவனா,

''மாணவர்கள், ஆராய்ச்சி பணியில் இருப்பவர்கள், வீட்டில் இருந்தபடியே வேலை

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்

பார்ப்பவர்கள் போன்றோருக்கு மிக வசதியான வீடு இது. கூடவே, இப்போது புதிதாக வீடு கட்டுபவர்களும், பில்டர்கள் தரப்பிலும் 'ஸ்டூடியோ அபார்ட்மென்ட்' என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அம்மா, அப்பா மற்றும் ஒரு குழந்தை என்றிருக்கும் 'நியூக்ளியர் ஃபேமிலி'களுக்கு இந்த மாடல் வீடுகள் பொருத்தமாகவும் வசதியாகவும் இருக்கும்! ரியல் எஸ்டேட் விலை ஏறிக் கொண்டிருக்கும் நகரப் பகுதியில் இந்த மாடல் வீடுகளில் பணமும் குறைவாகும். வீடும் நிறைவாகும்" என்று பரிந்துரைத்தார் புவனா.

தொடர்ந்தவர், ''வெளியூர்களில் இருந்து வந்து தங்குபவர்களில் பலருக்கும் நகர்ப்புற ஹோட்டல்கள் பிடித்தமாக இருப்பதில்லை. அவர்களுக்காகவே ஆறு வருடங்களுக்கு முன் சென்னையில் 'சர்வீஸ்டு அபார்ட்மென்ட்' என்பதை அறிமுகப்படுத்தினோம். ஹால், கிச்சன், டைனிங் டேபிள் என வீடு போன்ற ஒரு 'ஃபீல்' இதன் மூலம் கிடைக்கும். ஆனால், ஹோட்டல் வாடகைதான் இதற்கும். விரும்பினால் சமைத்துச் சாப்பிடலாம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே... அடுத்த கட்டமாக ஸ்டூடியோ அபார்ட்மென்ட் சிஸ்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். மாணவர்கள், தம்பதியாக வருபவர்கள் மற்றும் தொழில் விஷயமாக சென்னைக்கு வருபவர்கள் என அவர்களின் சில ஆண்டு 'டிரிப்'க்கும் இந்த அபார்ட்மென்ட்டை பெரிதும் விரும்புகிறார்கள்!" என்றார் உற்சாகமாக!

ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்
- லாவண்யா
படங்கள் து.மாரியப்பன்
ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்
ஆல் இன் ஒன் 'அசத்தல் அபார்ட்மென்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism