Published:Updated:

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

Published:Updated:

வாஸ்து....வாஸ்தவம்தானா..?
வாஸ்து...வாஸ்தவம்தானா ..?
வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உண்மையை செதுக்குகிறார் ஒரு ஸ்தபதி

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

"ஏண்டா டேய்... அவனவன் வீடு இல்லாம பிளாட்பாரத்துல படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கான். வீடு இருக்கறவன் கூட, கோர்ட்டு, கேஸ§னு அலைஞ்சுட்டு இருக்கான்... அதை மீட்கறதுக்காக. நீ ஒரு அருமையான வீடு வெச்சிருக்கற. அதுல நிம்மதியா வாழத் தெரியாம... என்ன மாதிரி ஃபிராடு வாஸ்துகிட்ட மாட்டிக்கிட்டு காசை கரியாக்கறயேடா முட்டாப் பயலே!'’

- இது 'பாளையத்தம்மன்' படத்தில் வாஸ்து ஜோசியராக வரும் விவேக் பேசும் டயலாக்.
இது, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி மட்டுமல்ல... இன்றைய தேதியில் வாஸ்து ஜோதிடம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளை ஊருக்கெல்லாம் உணர்த்தும் காட்சியும் கூட!

வீடு கட்டுகிறார்கள் என்று தெரிந்தாலே, வாஸ்து பற்றி வண்டி வண்டியாக அட்வைஸோடும், பணத்தைக் கறக்கும் தந்திரங்களோடும் எங்கிருந்தோ ஆட்கள் வந்துவிடுகிறார்கள். இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மை? அதைப் பற்றி பேசுகிறார் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோயில்களை வடிவமைத்திருக்கும் ஸ்தபதி கீர்த்திவர்மன்.

"வாஸ்து என்பது, 'வஸ்து' என்ற சொல்லில் இருந்து வந்தது. வஸ்து என்றால் பொருள் என்று அர்த்தம். அது பூமியையும் குறிக்கும். பூமி மீது அமைக்கப்படும் கட்டடங்களுக்கு சில வரையறைகளை, அனுபவ அறிவால் அந்தக் காலத்தில் கண்டறிந்தார்கள்.

உதாரணத்துக்கு... ராஜாக்கள் காலத்தில் புதிதாக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும்போது, மக்கள் குடியிருக் கத் தேவையான இடம், அவர்களின் வேளாண்மை மற்றும் தொழில்களுக்கான நிலம் போன்றவற்றை அரசாங்க ஆட்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். அதற்காக பல்வேறு யுக்திகளை அவர்கள் கையாண்டார்கள். ஒரு இடத்தில் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஆடு, மாடுகளைக் கூட்டமாக மேய விடுவார்கள். காலை முதல் மாலை வரை மேய்ந்து, அங்கேயே ஏதாவது ஒரு மூலையில் உறங்க அவை பொழுதைக் கழிக்கும். அப்படி அவை உறங்கும் இடத்தைத்தான்... வீடு உள்ளிட்ட கட்டடங்களை கட்ட சரியான இடம் என்று தேர்ந்தெடுத்தார்கள். காரணம்..? பொதுவாக மனிதர்களைவிட ஐந்தறிவு ஜீவன்களுக்கு நிலத்தின் நீக்கு போக்குகள் நன்கு தெரியும் என்பதுதான். அவைதான் முழுமையாக இயற்கையோடு உறவாடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை தூங்குகின்ற இடப்பகுதி நில அதிர்ச்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத பகுதியாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து, அங்கே வீடுகளை அமைத்தார்கள்.

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

வீடு அல்லது கட்டடம் என்றால், போதுமான வெளிச்சம், காற்று முக்கியம். எந்தப் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிறதோ... அந்த இடத்தை வாயு மூலை (வடமேற்கு) என்று சொல்லி வைத்தார்கள். காற்று அதிகம் வீசாத பகுதியை அக்னி மூலை (தென்கிழக்கு) என்று சொன்னார்கள். அங்கே சமையலறையை வைக்கச் சொன்னார்கள். காற்று இல்லாத பகுதியில் தானே நெருப்பு நின்று எரியும்..! ஈசான்ய மூலை (வடகிழக்கு திசை) சற்றுத் தாழ்வாக இருப்பதோடு, திறந்த வெளியாகவும் இருக்க வேண்டும். தோட்டம்கூட அமைக்கலாம். அப்போதுதான் காலைச் சூரியனின் இளம் கதிர்கள் வீட்டுக்குள் வந்து சேரும். மதிய நேரம் ஆகிவிட்டால் சூரியன் உக்கிரத்தோடு இருக்கும். அதன் தாக்கத்தைக் குறைக்கவே, நைருதி மூலை (தென்மேற்கு) சற்று உயரமாக இருப்பதோடு, மறைப்பாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். இதெல்லாமே தமிழகம் மற்றும் தென் இந்திய சூழலுக்கு பொருத்தமானது. மற்ற பகுதிகளுக்கு அங்குள்ள சூழலுக்கு ஏற்பதான் முடிவெடுக்க முடியும்.

கிராமத்தில் மனையடி சாஸ்திரம் பார்ப்பவர்களே இந்த அடிப்படை விஷயங்களையெல்லாம் வீடு கட்டும்போது தெள்ளத் தெளிவாகச் சொல்லி விடுவார்கள். அதற்கு எதற்காக வாஸ்து என்ற பெயரில் வீண் செலவு? இதைத்

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?

தவிர வீட்டில் அதை வைத்தால், இது வரும்... இதை வைத்தால் அது வரும் என்று சொல்வதெல்லாம்கூட மனம் சார்ந்த விஷயங்கள்தான். அவற்றுக்கும் வாஸ்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று அடித்துச் சொன்ன ஸ்தபதி கீர்த்திவர்மன்,

''அனுபவ அடிப்படையில் சொல்லி வைக்கப்பட்ட வாஸ்து விஷயங்கள் எல்லாமே, தனித்தனி வீடுகள் கட்டப்படும்போது மட்டுமே பொருந்தும். அபார்ட்மென்ட் எனப்படும் அடுக்குமாடி வீடுகள் கட்டும்போது துளிகூட அங்கே வாஸ்து என்பதைப் பொருத்திப் பார்க்க முடியாது. அது தேவையும் இல்லாத ஒன்று. இருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்வதுதான் உண்மையான வாஸ்து'' என்றார் முத்தாய்ப்பாக.

 

வாஸ்து...வாஸ்தவம்தானா ..?
- ம.பிரியதர்ஷினி
வாஸ்து...வாஸ்தவம்தானா ..?
வாஸ்து...வாஸ்தவம்தானா ..?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism