குடல் ரத்தக் கசிவு உள்ளவர்களுக்கு துவக்கத்தில் மயக்கம், பிறகு ரத்தம் உறைந்து மலம் மூலம் வெளியேறுவது, இறுதியாக தீவிர ரத்த சோகை என்று பாதிப்புகள் வரிசை கட்டும். இதை 'எண்டாஸ்கோபி’ பரிசோதனை மூலம் கண்டறிந்து, ஊசி மருந்துகளால் குணமாக்கலாம்.
குடல் சுருக்கம், சிறுகுடல் துவக்கத்தில் ஏற்படும் சுருக்கத்தால் சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தில் சிலர் வாந்தி எடுப்பார்கள். வாந்தி எடுப்பதற்கு முன் வயிற்றில் பந்து உருள்வதுபோல உணர்வார்கள். ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு 'எண்டாஸ்கோபி’ மூலம் ஆராய்ந்து பலூன் சிகிச்சை மூலமாக குணமாக்கலாம். முற்றியவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்வார்கள்.
குடல் பொத்துப் போகும் பிரச்னைக்கு, அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.
மேற்சொன்ன மூன்று காரணங்கள் தவிர, சிறுகுடலில் மிகவும் அரிதாக புற்றுநோயும் தாக்கக்கூடும். அது மேற்கொண்டு பரவுவதைத் தடுக்க, பாதிப்புள்ள குடல் பகுதியை மட்டும் அகற்றி விடுவதும் உண்டு.
ஆக டென்ஷன், நேரத்துக்கு சாப்பிடாதது போன்றவையெல்லாம்... ஏற்கெனவே இருக்கும் அல்சரை தூண்டத்தான் செய்யும். ஆனால், அல்சருக்கு காரணமாக இருப்பது குறிப்பிட்ட பேக்டீரியாக்கள்தான். சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை உண்ணும் உணவிலும், பயன்படுத்தும் நீரிலும் கவனமாகக் கடைபிடித்தால் பேக்டீரியா பாதிப்பினை தவிர்க்கலாம். தாமதிக்காது மருத்துவரை அணுகி, உங்கள் அல்சரின் நிலையைத் தெரிந்துகொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்!"
"வழுக்கை முடி வைத்தியம்....திருமணத்தை தள்ளிப்போடுமா ?"
|