Published:Updated:

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

Published:Updated:

கோயில் வீடு...
கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !
கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடவே குடியிருக்கும் குலதெய்வம்
கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

கோயில்... தெரியும். வீடு... தெரியும். கோயில் வீடு..?!

தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு நடுவே... தங்களின் குலதெய்வத்துக்கும் தனியாக ஒரு வீடு அமைத்து, குலதெய்வத்தையும் பங்காளிகளில் ஒருவராக பாவிப்பதுதான்... கோயில் வீடு! இப்படிப்பட்ட கோயில் வீடுகள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் கூட வழக்கத்தில் இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் கிராமத்தில், ஒண்டுக்குடித்தனங்கள் போன்ற அடர்த்தியான குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் கிழக்குப்பகுதி பாகத்தில் குடியிருக்கிறார் ஆறுமுகம். அதன் மேற்குப்புறத் தில் இருக்கும் ஓடு வேயப் பட்ட பாகத்தில் இருக்கிறது... அவருடைய குலதெய்வத்துக் கான கோயில் வீடு!

"இது, எங்க தாத்தா காலத்துல கட்டின கோயில் வீடுங்க. தாத்தாவுக்குப் பிறகு, எங்க அம்மா பூசாரியா இருந்து இந்த வீட்டைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க இறந்துட்டாங்க. இப்ப, அடுத்தாப்புல யாரு பூஜை வெக்குறதுனு சாமிகிட்ட கேட்டு நியமிக்கணும்" என்று சொன்னார் ஆறுமுகம்.

ஆம்... அந்த கோயில் வீட்டுக்குள் நுழையும் உரிமை எல்லோருக்கும் கிடையாது. யார் தகுதியானவர் என்பதை அந்தத் தெய்வத்தை வணங்கும் அத்தனை குடும்பங்களும் ஒன்றுகூடி, தெய்வத்திடமிருந்தே உத்தரவு கேட்டுப் பெறுவார்கள். பூ கட்டி போட்டுப் பார்ப்பார்கள், அல்லது சாமியே யார் மீதாவது அருள் வந்து சொல்லும்.

தொடர்ந்து பேசிய ஆறுமுகம், "இந்தக் கோயில் வீடு எங்க குலதெய்வம் பட்டவன் சாமிக்கானது. இங்கயிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற முத்துக்காடு கிராமத்துலதான் பட்டவன் கோயில் இருக்கு. பட்டவனுக்குச் சொந்தமான சூலம், துணிமணினு எல்லாம் இந்தக் கோயில் வீட்டுலதான் வெச்சுருக்கோம். ஏதாவது விசேஷம்னா... முறைப்படி இங்கயிருந்து சாமியாடி எல்லா சாமான்களையும் எடுத்துக்கிட்டுப் போவோம். விசேஷம் முடிஞ்சதும், திருப்பி எடுத்துக்கிட்டு வந்துடுவோம். கோயில் வீட்டுல வெச்சு, நெறமாச ஆட்டுக்குட்டியை பலி கொடுத்து, திருவிழாவை நிறைவு செய்வோம்!" என்று சொன்னார்.

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

அதே ஊரைச் சேர்ந்த கணேசன், இந்தக் கோயில் வீடு ஏற்படுத்தப்பட்டதற்கான காரணங்களைச் சொன்னார். "குலதெய்வ கோயில்ங்கறது ஊரை விட்டு தள்ளியோ, வெளியூர்லயோ இருக்கும். நெனச்ச நேரத்துல போக வர முடியாது. நம்மளோட எந்த நல்லது கெட்டதுக்கும் நம்ம சாமியும் கூடவே இருக்கணும்னு நெனச்ச சனங்க, இப்படி கோயில் வீடுனு ஒண்ணைக் கட்டியிருக்காங்க. குலதெய்வக் கோயில் இருக்கற எடத்துலயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துட்டு வந்து, அதை வெச்சு அவங்க எடத்துல... இல்லைனா வீட்டுல ஒரு பகுதியை ஒதுக்கி, கோயில் வீடாக்கியிருக்காங்க. ஒவ்வொரு கோயில் வீட்டுக்கும், அந்தக் குலதெய்வம்

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !

வழிவந்த அத்தனை பேரும் உடமைப் பட்டவங்கதான். குறைஞ்சது நூறு பேராவது அந்தக் கிளையில இருப்பாங்க. அவங்களோட அத்தனை நல்லது கெட்டதுக்கும் இங்க வந்துடுவாங்க. வீட்டுல நடக்கற கல்யாணம் காட்சிக்கு முதல் பத்திரிகையை இங்கதான் வைப்பாங்க!" என்று பெருமையாகச் சொன்ன கணேசனின் குலதெய்வம், நாற்பது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் அன்ன காமாட்சியம்மன். அதன் மண்ணை எடுத்து வந்து, இங்கே கோயில் வீடு கட்டியிருக்கிறார்கள் அவரின் உறவுகள்.

வீடுகளோடு வீடாகத்தான் இருக்கிறது கோயில் வீடும். ஆனால், வெளியே ஒரு மண்டபம், உள்ளே ஒரு அறை என கொஞ்சம் போல வித்தியாசம்... அவ்வளவுதான்! மண்டபம்... உறவுகள் கூடி இருப்பதற்காக. உள் அறை... தெய்வம் குடியிருப்பதற்காக! தெய்வத்தின் உடைமைகள் ஒரு மூட்டையாக கட்டப்பட்டு ஓரத்தில் கிடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த அறைக்குள் சாமி உருவமோ, படங்களோ எதுவும் இல்லை. தெய்வத்தின் பிரதிநிதியாக ஒரு சூலமோ, வேலோ, விளக்கோ இருக்கும். அதுதான் தெய்வம். அதற்குத்தான் அத்தனை வழிபாடுகளும்.

"உருவம் எதுக்கு? காலம் காலமா எங்கள காத்து நிக்கற எங்க சாமிய, எங்க மனசுக்குத் தெரியும்!" என்கிறார்கள் இந்த மக்கள் மனப்பூர்வமாக!

கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !
- கரு.முத்து படங்கள் எம்.ராமசாமி
கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !
கூடவே குடியிருக்கும் குலதெய்வம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism