Published:Updated:

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

Published:Updated:

லலிதா சுபாஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர்,பி.ஜே.பி.
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்திகள் யோசிப்பது...!
செய்திகள் யோசிப்பது.... !

மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2010-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகள் அறிவிப்பு!

- செய்தி

"பல நல்ல திட்டங்களைக் கொண்ட இந்த பட்ஜெட்டை பொதுமக்களுள் ஒருத்தியாக வரவேற்கிறேன். நாற்பதாயிரம் கோடிக்கு ரூபாய்க்கும் மேல் ரயில்வேக்காக பட்ஜெட் ஒதுக்கி இருப்பது, புற்று நோயாளிகளுக்கும் அவர்களுடன் உதவிக்காக பயணம் செய்யும் ஒருவருக்கும் இலவச பயணத்தை உறுதி செய்திருப்பது, பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தாதது போன்ற இந்த பட்ஜெட்டின் அம்சங்களை நான் மனமார பாராட்டுகிறேன். தேசிய அளவிலான அதிவேக ஆணையம், எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்தல், வரிக்குறைப்பு, சேவைக் கட்டண குறைப்பு ஆகியவையும் பட்ஜெட்டை அலங்கரிக்கும் அம்சமாகவே இருக்கின்றன.

ஆனால், ஒரு அரசியல்வாதியாக, தமிழக மக்களின் அரசியல் பிரதிநிதியாக இந்த பட்ஜெட் பற்றி என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. 'உலகத் தரத்திலான ரயில்வே நிலையங்களாக மாற்றப்படும்' என சில ரயில் நிலையங்களின் பெயர்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட தமிழகத்தின் எந்த ஒரு ரயில் நிலையத்தின் பெயரும் இல்லையே... ஏன்? இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று பழம்பெரும் சென்ட்ரல் ரயில் நிலையம் என்பது உலக அளவில் பிரபலம். அப்படியிருக்க, அது எப்படி புறந்தள்ளப்பட்டது? தமிழக எம்.பி -க்கள் அதை வலியுறுத்தாமல் வழிமொழிந்ததை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்?

அதேபோல, 'எடுத்துக்காட்டு ரயில் நிலையங்கள்Õ என்று அறிவிக்கப்பட்ட வரிசையிலும் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற நம் பழமையான ரயில் நிலையங்கள் எடுத்துக் கொள்ளப்படாததும் தமிழ்நாட்டுக்கு ஏமாற்றமே.

மூத்த அரசியல்வாதியான மம்தா பானர்ஜி, எல்லா மாநிலங்களுக்கும் அமைச்சர் என்பதை மறந்துபோனது ஏனோ?

ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்பான அதிவேக ரயில் பாதைகளும் அமைக்கப்பட வேண்டும். அந்த நடவடிக்கையில் ஏற்படும் மெத்தனம் அகற்றப்பட வேண்டும். ஆனால், இதிலெல்லாம் அக்கறைக் காட்டப்படவில்லை.

இதுபோல நிறைய விஷயங்களை கோடிட முடியும். ஆனால், எல்லாவற்றையும் விட முக்கியமானது... ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமிப்பது. அதற்கு, ஐந்து ஆண்டுகள் அவகாசம் சொல்லியிருக்கிறார்கள். மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது ஆளில்லா லெவல் கிராசிங்குகள். அத்தகைய இடத்துக்கான பணி நியமனத்துக்கே கால அவகாசம் எடுத்திருக்கும்போது, ஒரு அரசியல்வாதியாக இந்த ரயில்வே பட்ஜெட் எனக்கு இனிக்கவில்லை!''

செய்திகள் யோசிப்பது.... !
 
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism