Published:Updated:

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

Published:Updated:

 
பகுதி 23
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

அற்புத வீட்டுக்கு அஸ்திவாரம் போடும் 'அக்னீஸ்வரன் செங்கல்'!

இது திருப்புகலூர் தயாரிப்பு

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

'எப்படியாவது ஒரு இடத்தை வாங்கி, வீடு கட்டி, நடு ஹாலில்... வெறும் தரையில்... ஒரு துண்டை விரித்து 'அம்மாடி' என்று படுக்க வேண்டும்' என்பது இங்கு பலரின் கனவு. இப்படி... சொந்த வீட்டுக் கனவோடு இருப்பவர்கள்; ஏதோ ஒரு காரணத்தால், பாதிக்கு மேல் வீட்டைக் கட்ட முடியாமலிருப்பவர்கள்; கட்டி முடித்திருந்தாலும் சிக்கல் ஏற்பட்டு திகைப்பவர்கள் என்று சகலமானவர்களுக்கும் அருள் பாலிக்கிறார் திருப்புகலூரில் குடிகொண்டிருக்கும் அக்னீஸ்வரர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் புகழ்பெற்ற தலங்களான திருமருகல், திருக்கண்ணபுரம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருக்கிறது இந்த திருப்புகலூர். இங்கே... கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று முக்காலத்துக்கும் தானே அதிபதி என்று உணர்த்தும் வண்ணம், பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரரர் என்றும் தனித்தனியே சந்நிதி கண்டு வீற்றிருக்கிறார் இறைவன்.

அது சரி... வீடு விஷயத்தில் பக்தர்களுக்கு இவர் அருள் தருவதன் தலவரலாறு என்ன?

திருவாரூரில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பரவை நாச்சியார், பங்குனி உத்திரநாளில் பலருக்கும் பலவித உதவிகளை செய்வது வழக்கம். அவரிடம் உதவி கேட்டு வருகிறவர்களில் சொந்தமாக உறைவிடம் இல்லாதவர்களும் வருவார்கள். அவர்களுக்கும் உதவ வேண்டுமானால், அதிக அளவில் பொருள்கள் தேவை. ஆனால், தன்னிடம் அந்த அளவுக்குப் பொருள்கள் இல்லையே என்று சுந்தரமூர்த்தி நாயனாரிடம் பரவை நாச்சியார் சொல்ல, பொருள் தேடி புறப்பட்ட சுந்தரர், வழியில் திருப்புகலூரில் தங்கினார். மனதில் கவலைகளோடு தலைக்கு செங்கற்களை வைத்து படுத்தவரின் இன்னல் தீர்த்தான் இறைவன். ஆம்... காலையில் எழுந்து பார்த்தால் தங்கக் கட்டிகளாக மாறியிருந்தன செங்கற்கள். அதனால் மனதில் நினைத்த காரியத்தையெல்லாம் முடிக்க உதவுகிறவன் இந்த இறைவன் என்ற நம்பிக்கை தோன்றி, அது இன்று வீடு கட்ட நினைப்பவர்களுக்கு அருளும் விதமாக ஆகியிருக்கிறது.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

இன்னொரு காரணமும் இருக்கிறது. அக்னி பகவானின் சாபத்தைப் போக்கி, அவனுக்கு உரு கொடுத்ததும் இங்குள்ள இறைவன்தான். வீடு கட்ட நினைப்பவர்களுக்கும், கட்டிய வீட்டுக்கும் அக்னியின் அனுக்கிரகம் வேண்டும் என்பதால், இங்கு சாப விமோசனம் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் அக்னி பகவான், அவனை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறான். அதோடு, அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கத்தான், அக்னீஸ்வரனாக வும் அமர்ந்திருக்கிறார் இறைவன்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

சந்நிதியில் நின்றபடி தன்னை மறந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் சிதம்பரத்திலிருந்து வந்திருந்த தமிழரசி. "மொதமொதல்ல இங்க வந்தப்ப, என் வீடு கூரைவீடுதான். வந்துட்டு போனபிறகு வீட்டுக்காரருக்கு ரொம்ப நாளா வராமலே இருந்த பணம் ஒண்ணு கைக்கு வந்துச்சு. அதை வெச்சு ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சுடுவோம்னு முடிவு பண்ணி இங்க வந்து, பூஜை செஞ்ச செங்கல் வாங்கிட்டுப் போனேன். நாலே மாசத்துல கிரஹப்பிரவேசமே பண்ணிட்டோம். அதனால இந்த அக்னீஸ்வரர் எங்களுக்கு ரொம்ப நெருக்கம். இப்ப இன்னும் ஒரு வீடு கட்டறதுக்கும் வரம் கொடுத்திருக்கார். அதுக்குத்தான் வந்திருக்கேன்" என்று அக்னீஸ்வரரின் அருளை மெய்மறந்து போற்றினார்.

அண்ணாமண்டபம் எனும் கிராமத்திலிருந்து வந்திருந்த லதா, "நாங்க ரொம்ப ஏழைப்பட்ட குடும்பம். வீட்டுக்காரரு பெயின்டர். இப்ப நாங்க இருக்கறது கூரைவீடு. அதை மச்சு வீடா மாத்தணும்னு அவரு ரொம்ப ஆசைப்படறாரு. அதுக்கு உதவ ஆண்டவனை விட்டா யாரு இருக்கா? அதுக்காகத்தான் மனமுருக வேண்டிக்கிட்டிருக்கேன். சுந்தரருக்கு செங்கல்லையே, தங்கமா மாத்திக் கொடுத்தவன், என் வீட்டுக் கூரையை மச்சா மாத்த வரம் கொடுக்க மாட்டானா?!" என்று உரிமையோடு பேசினார் உள்ளம் உருக.

"நான்கு புறமும் அகழி சூழ இருந்த இந்தக் கோயிலுக்கு, முன்பெல்லாம் தோணியில்தான் போக வேண்டுமாம். பிறகுதான் ஒரு பக்கம் தூர்த்து தரையாக்கியிருக்கிறார்கள். வாணாசுரன் என்ற அரக்கன் தன் தாயாரின் சிவபூஜைக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து தருவானாம். அப்படி ஒருநாள் இந்த சிவலிங்கத்தை பெயர்க்க நான்கு புறமும் பள்ளம் தோண்டியிருக்கிறான். ஆனால், அவனுடைய முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் அவனுக்குக் காட்சி தந்த பெருமான், தானே அவன் தாயாரின் முன்பு

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

தோன்றுகிறேன் என்று சொல்லி, அவ்வாறே தோன்றினார். அதுவும் அங்கிருக்கும் ஆயிரம் லிங்கங்களில் தான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக தலையில் கொன்றைப் பூ அணிந்து தலையை கொஞ்சம் சாய்த்தவாறே காட்சியளித்திருக்கிறார். அதனால் 'கோணப்பெருமான்' என்ற பெயரும் பெற்று விளங்குகிறார் இங்கு" என்று பரவசத்துடன் சொல்கிறார் கோயிலை பரம்பரையாக நிர்வகித்து வரும் வேளாக்குறிச்சி ஆதீனத்தின், தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீசத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்.

தொடர்ந்தவர், "இந்த ஆலயத்தின் சிறப்புகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அப்பர் சுவாமிகள் இறைவனில் கலந்ததும் இங்குதான். நளமகாராஜா, தன்னைப் பற்றிய சனீஸ்வரனை போக்கிக் கொள்ள தீர்த்தில் இங்கு குளித்தபோதுதான், 'நான் திருநள்ளாற்றில் விலகிக் கொல்கிறேன்' என்று கேட்டுக் கொண்டார் சனீஸ்வரன். வில்லவன், வாதாபி என்ற அரக்கர்களை அகத்தியர் வதம் செய்யும்வரை அவர்கள் இங்குதான் தங்கி இருந்தார்கள். அவர்களுக்குப் புகலிடமாக இருந்ததால் புகலூர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் திருப்புகலூர் என்றாயிற்று" எனச் சொன்னார் பக்திக் களிப்புடன்!

குருக்கள்களில் ஒருவரான சிவராம குருக்கள், "இறைவனே இங்கே வாஸ்துவாக இருக்கிறார். அதனால் வீடு கட்ட நினைப்போரும், வீடு கட்டிக் கொண்டு இருப்போரும், கட்டிய வீட்டில் பிரச்னை இருப்பதாக நினைப்போரும் ஒருமுறை இங்கு வந்து போனாலே... எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். இது, இங்கு வந்துபோன ஆயிரக்கணக்கானோரின் பரவச அனுபவம். உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்க, இறைவனை நாடி வந்து செல்லுங்கள்" என்று அழைத்தார் மனம் மலர்ந்து!

- கரு.முத்து

எப்படிச் செல்வது?

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் சன்னாநல்லூரில் இறங்கினால், அங்கிருந்து கிழக்கில் ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருப்புகலூர். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்கின்றன. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன. வீடு கட்ட வேண்டுதல் செய்ய வருகிறவர்களுக்கு பூஜை செய்த செங்கல் கோயிலிலேயே கொடுக்கப்படுகிறது. கட்டணம் 150 ரூபாய். நடை திறந்திருக்கும் நேரம்... காலை 6 முதல் 12.30 மணி வரை. மாலை 4 முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு 04366-236119

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
 
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism