Published:Updated:

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Published:Updated:

 
'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மேஷம் நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் பேசும் நீங்கள், நாலும் அறிந்தவர்கள்.

சுக்கிரன் 12-ல் மறைந்ததால் எதிர் பாராத பணவரவு உண்டு. வாகன வசதி பெருகும். கணவர் முழுமையாக நேசிப்பார். அவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் புது வேலை அமையும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சூரியன் 11-ல் இருப்பதால் அரசு காரியங்கள் சாதகமாக முடியும். ராசிநாதன் செவ்வாய் நீசமாகி நிற்பதால் வீண் டென்ஷன், செலவுகள் வந்து நீங்கும். 6-ம் தேதி காலை 7 மணி முதல் 8-ம் தேதி மாலை 3 மணி வரை யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். 6-ல் சனி வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் புதுயுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள்.

விஸ்வரூபமெடுக்கும் நேரமிது.

ரிஷபம் சோர்ந்திடாமல், சுமைகளை சுமப்பவர்களே!

10-ம் வீட்டில் புதனும், சூரியனும் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்க முன் பணம் கொடுப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். புது வண்டி வாங்குவீர்கள். 5-ல் சனி இருப்பதால் முன்கோபம், வீண் விரயம், பிள்ளைகளால் அலைச்சல் வந்து நீங்கும். 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் நிற்பதால் குடும்பத்தில் அவ்வப்போது வீண் சண்டை வரலாம். 8-ம் தேதி மாலை 3 மணி முதல் 10-ம் தேதி வரை யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்கு வீர்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். 10-ல் குரு இருப்பதால் உத்யோகத்தில் வீண் பழி வந்து விலகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் வேளையிது.

மிதுனம் தனக்கென தனிக் கொள்கை வைத்திருப்பவர்களே!

புதன் வலுவாக இருப்பதால் நீண்ட நாளாகத் தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். ரியல் எஸ்டேட் பணம் தரும். சுக்கிரன் 10-ல் உச்சம் பெற்றிருப்பதால் பணவரவு திருப்தி தரும். கணவருடன் இருந்த இடைவெளி நீங்கும். மகளுக்கு கல்யாண முயற்சி பலிதமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி மதியம் 1 மணி வரை முன் யோசனையுடன் செயல்படுங்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் பதற்றம், தடுமாற்றம் ஏற்படலாம். அர்த்தாஷ்டம சனி நடப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத் தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும்.

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வேளையிது.

கடகம் காத்திருந்து காய் நகர்த்தும் நீங்கள், மனிதநேயம்அதிகம் கொண்டவர்கள்.

6-ம் வீட்டில் ராகு வலுவாக இருப்பதால் திடமாக முடிவுகள் எடுப்பீர்கள். சுக்கிரன் 9-ல் நிற்பதால் வீட்டு உபயோக பொருட்கள், வாகனம் புதிதாக வாங்குவீர்கள். கணவருடனான ஈகோ பிரச்னை நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க விரும்பியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் சகோதரரால் அலைச்சல் உண்டு. உடல் உபாதை வந்து விலகும். 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சாலையில் செல்லும்போது கவனம் தேவை. குரு பகவான் 8-ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

புதுத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் காலமிது.

சிம்மம் மனதுக்குப் பிடித்தவர் களுக்கு வாரி வழங்குபவர்களே!

சுக்கிரன் 8-ல் மறைந்ததால் வராது என்று நினைத்திருந்த பணம் வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஆன்மிகவாதிகளின் நட்பால் தெளிவடைவீர்கள். 7-ல் சூரியன் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் 12-ல் மறைந்து நிற்பதால் திடீர் பயணங் கள், சுபச் செலவுகள் அதிகரிக்கும். 16-ம் தேதி எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பாதச் சனி நடைபெறுவதால் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார்.

சவால்களில் வெற்றி பெறும் தருணமிது.

கன்னி கவிதை, கற்பனை என்று சிறகடிக்கும் நீங்கள், இரக்கப்பட்டு ஏமாறுவீர்கள்.

செவ்வாய் வலுவாக இருப்பதால் மனவலிமை கூடும். பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கி உதவும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். சுக்கிரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்ததால் வீண் செலவுகள், டென்ஷன் குறையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்விக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 6-ல் குரு நிற்பதால் கணவர் அவ்வப்போது கோபப்படலாம். செலவுகள் துரத்தும். ராகுவால் உங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படலாம். ஜென்ம சனியால் அவ்வப்போது சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் வேலைச் சுமையுடன் செல்வாக்கும் உயரும்.

வெற்றிக்கு வழி வகுக்கும் நேரமிது.

துலாம் கசிந்த இதயம் உடைய நீங்கள், கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கரைக்கும் அளவுக்கு கனிவாகப் பேசுவீர்கள்.

ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு வலுவாக இருப்பதால் வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் கணவருடன் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உடல் உபாதை ஏற்படக்கூடும். 5-ல் நிற்கும் குருவால் பிரச்னைகளை எளிதில் சமாளிப்பீர்கள். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். 9-ல் கேது நிற்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு வரலாம். செவ்வாயால் சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சொத்து வாங்குவது விற்பது சாதகமாக அமையும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத் தில் உங்கள் தவறுகளை அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

தராதரம் அறிந்து செயல்படும் காலமிது.

விருச்சிகம் யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், அழுத்தமான கொள்கைப் பிடிப்புள்ளவர்கள்.

சூரியனும், புதனும் 4-ல் பலம் பெற்றிருப்பதால் நினைத்தது நிறைவேறும். வீட்டில் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவர் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். 4-ல் குரு நிற்பதால் வீண் கோபம் வரும். பயணங்களால் அலைச்சல் உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் வேலைச் சுமை குறையும்.

எதையும் சாதிக்க முயலும் வேளையிது.

தனுசு மனதில் உள்ளதை மறைக்காமல் பேசும் நீங்கள், உச்சத்தில் இருந்தாலும் கடந்து வந்த பாதையை மறக்க மாட்டீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் கணவர் உங்களை குறை கூறலாம். செவ்வாய் 8-ல் நிற்பதால் சகோதர, சகோதரிகளால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். 10-ல் சனி நிற்பதால் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் உபாதையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டும்படியாக நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் காலமிது.

மகரம் 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்றிருப்பவர்கள் நீங்கள்!

புதனும், கேதுவும் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். கணவர் உங்களைப் பாராட்டுவார். 2-ல் சூரியன் தொடர்வதால் முன் கோபம், அலைச்சல், உடல் உபாதை வந்து போகும். குரு பகவான் வலுவாக இருப்பதால் அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள். 9-ல் சனி தொடர்வதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் நேரமிது.

கும்பம் தாராள மனதுடைய நீங்கள், தன்னை விட கீழே இருப்பவர்களைப் பற்றி யோசிப்பீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் போராட்டம் குறையும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். 3-ம் தேதி பொறுமையுடன் செயல்படுங்கள். ஜென்ம குருவால் எதிர்காலம் பற்றிய மன உளைச்சல் அதிகரிக்கும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் பயணச் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அஷ்டமத்து சனி நடப்பதால் கணவர் அவ்வப்போது உங்களை குறை கூறலாம். நீங்கள் எதார்த்தமாகப் பேசுவதை சில நேரங்களில் உறவினர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

அலைச்சலுடன் ஆதாயம் தரும் வேளையிது.

மீனம் 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது உங்களைப் பொறுத்தவரை உண்மைதான். நீங்கள் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.

புதன் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். 4-ம் தேதி முதல் 6-ம் தேதி காலை 7 மணி வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். 5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகள் உங்களைக் கோபப்படுத்து வார்கள். கண்டகச் சனி நடைபெறுவதால் கணவர் கொஞ்சம் அலுத்துக் கொள்வார். 12-ல் குரு நிற்பதால் மன அழுத்தம், வீண் பழி வந்து செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். 4-ல் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சூரியனால் மறைமுக எதிர்ப்பு, உடல் உபாதை ஏற்படலாம். வியாபாரத்தில் தயக்கமில்லாமல் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

விமர்சனங்களைத் தாண்டி வெற்றி பெறும் தருணமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
-
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism