Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓவியங்கள் சேகர்


"கர்ணனின் அப்பா வந்திருக்கார்!"

குட்டீஸ் குறும்பு!

என்னுடைய ஆறு வயது பேரன் அட்சய்கிருஷ்ணாவுக்கு அவனுடைய தாத்தா புராணக் கதைகள் கூறுவது வழக்கம். ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்தவுடன் பால்கனிக்குச் சென்றவன், "எல்லோரும் ஓடிவாங்க. இங்க கர்ணனோட அப்பா வந்திருக்கிறார்..." என்று திடீரென அழைக்க, நாங்கள் ஒன்றும் புரியாமல் அங்கு எட்டிப் பார்த்தோம். பேரனோ சூரியனைக் காட்டி, "அதோ பாருங்க கர்ணனோட அப்பா..." எனச் சொல்ல, அவனுடைய தாத்தாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. 'கர்ணனின் அப்பா சூரியன்' என்று மகாபாரத கதையை அவர் சொல்லியிருக்க... அதைத்தான் இப்படி 'சுட்டி'யிருக்கிறான் சுட்டிப்பயல்.

அந்த குட்டீஸின் புத்திக் கூர்மையை அனைவரும் ரசித்து மகிழ்ந்தோம்!

- ஆர்.தங்கமணி, சென்னை-87

"ஏன் இந்த விசாரணை?"

குட்டீஸ் குறும்பு!

ஒருமுறை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு என் நாலு வயது பேரனுடன் சென்றிருந்தேன். அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பும்போது, அந்த வீட்டுப் பெரியவர் என் பேரனிடம், "உன் அப்பாவை விசாரிச்சதா சொல்லு..." என்று கூற, என் பேரனின் முகம் வாடிவிட்டது. 'உம்' என்ற முகத்துடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவனிடம், "என்னடா ஆச்சு?" என்று வினவ, "நம்ம அப்பாவை எதுக்கு பாட்டி அந்த தாத்தா விசாரிக்கறார். நம்ம அப்பா என்ன தப்பு செஞ்சாங்க?" என்று அவன் மழலையில் என்னிடம் எதிர்க்கேள்வி கேட்டான். 'விசாரிப்பு' என்றதும் தப்பு செய்தவர்களை விசாரிப்பது என்று அர்த்தம் செய்து கொண்டிருக்கிறான் என் பேரன் என்பது புரிந்துபோனது எனக்கு! சிரிப்பை அடக்கிக்கொண்டு நான் அவனிடம், "உன் அப்பாவோட உடல் நலத்தைதான் அக்கறையோடு அந்த தாத்தா விசாரிச்சாரு" என்று விளக்கி புரியவைக்கவும்தான் சமாதானமடைந்தான்.

பிள்ளைகள் வளர வளர தங்களின் மொழியை முழுமையாகக் கற்றுக்கொள்வது எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை உணர்ந்தேன் நான் அன்று!

- பிரபா முத்துக்குமாரசாமி, நங்கநல்லூர்

''ரெண்டு சீட்டுலயும் அண்ணா பேரு!''

குட்டீஸ் குறும்பு!

என் தோழிக்கு... ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண், ஆறாம் வகுப்பு படிக்கும் பையன் என்று இரண்டு குழந்தைகள். இருவருக்கும் எப்போது பார்த்தாலும் டிஷ்யூம் டிஷ்யூம்தான். அன்று அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போதும் அந்த 'வாண்டு யுத்தம்' மூண்டுவிட, "இது சரிப்பட்டு வராது. ரெண்டு பேரோட பெயரையும் ஒரு சீட்டுல எழுதிப்போட்டு எடுத்து, யார் பெயர் வருதோ, அவங்கள ஹாஸ்டல்ல சேர்க்கப் போறேன்" என்ற தோழியின் கணவர், தோழியிடம் பெயர்களை எழுதச் சொன்னார். பையன் கலக்கத்துடன் நிற்க, அந்த ஒன்றாம் வகுப்பு சுட்டிப் பெண்ணோ அவள் அம்மா காதில், "அம்மா, ரெண்டு சீட்டுலயும் அண்ணா பேரையே எழுதிடுங்க! நான் ஒழுங்கா சாப்பிடுவேன், ஹோம் வொர்க் எல்லாம் செய்வேன்..." என்று சீக்ரெட் டீலிங் பேச, அடக்கமாட்டாமல் சிரித்தோம் நாங்கள்!

டேலன்ட்டட் வாண்டுகள்தான்!

- பெனிடா இளங்கோ, சென்னை-110

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய
முகவரி 'குட்டீஸ் குறும்பு,' அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

குட்டீஸ் குறும்பு!
 
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism