சமீபத்தில் தெரிந்த பெண்மணி ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பள்ளி விட்டு வந்த அவருடைய மகள், ரேங்க் கார்டை அவரிடம் காட்டினாள். அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். கார்டை பார்த்தபின், "சரி, டியூஷனுக்கு நேரமாச்சு கிளம்பு" என்று அவளை அனுப்பி வைத்தார். நானோ ஆச்சர்யப்பட்டு, "நல்லாத்தானே படிக்கறா. கூடவே, யூ.கே.ஜி. படிக்கற சின்ன பொண்ணு வேற. அவளுக்கு எதுக்கு டியூஷன்?" என்று கேட்க, சொன்னாரே ஒரு பதில்... அப்பப்பா!
"வீட்டுல இருந்தா தொணதொணனு ஏதாச்சும் பேசிட்டு, சேட்டை பண்ணிட்டே இருப்பா. நிம்மதியா சீரியலும் பார்க்க விடமாட்டா. டியூஷன் அனுப்பினாலாச்சும் ரெண்டு மணி நேரம் நிம்மதியா இருக்கலாம். அதனாலதான்..."
குழந்தைக்கான நேரத்தை டி.வி. சீரியலில் செலவிடுவதெல்லாம் தவறு என்று எவ்வளவோ வாதாடியும், அதை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. என்னைத்தான் நொந்து கொண்டேன் - இதுபோன்றவர்களுக்கு அறிவுரை சொல்ல முயன்றதற்காக!
- சொ.பரிமளா, சுப்ரமணியபுரம்
பார்த்து அனுப்புங்க பத்திரிகையை!
|