என் அலுவலகத்தில் மனமகிழ் மன்ற ஆண்டு விழா ஏற்பாடுகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, அதிக வேலைப்பளுவால் திணறினோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது என்று யோசித்த நாங்கள், அதற்காக மேடையில் எங்களுக்கு கிடைத்த சான்ஸை பயன்படுத்திக் கொண்டோம்.
''ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... சென்டி மீட்டர் சிரிக்கச் சொல்லி கேட்டேன்..'' என்று அப்போது பிரபலமாக இருந்த 'குஷி' திரைப்படப் பாடல் மெட்டில், எங்கள் சோகக் கதையை நகைச்சுவை கலந்து எழுதிக் கொண்டு, அலப்பறையாகப் பாடி அப்ளாஸ்களை அள்ளினோம்.
இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயம், நாங்கள் ஏழு பேருமே இணைபிரியா தோழிகள். இதில் ஒருத்தியைத் தவிர, மற்றவர்களுக்குத் துளிகூட பாட்டுப் பாடத் தெரியாது.
ப.மகாலெட்சுமி, மணப்பாறை
சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் உங்கள் வீட்டுப் பரணிலும் இருக்கிறதா? எடுங்கள் அவற்றை. சம்பவங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். (குறிப்பு கடிதத்தில் உங்களின் முழு முகவரி, தொலை பேசி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம். புகைப்படங்களை கண்டிப்பாகத் திருப்பி அனுப்ப இயலாது).
முகவரி 'போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!'
அவள் விகடன், 757, அண்ணாசாலை,
சென்னை-600 002
|
|