Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

Published:Updated:

வெற்றிக்கு பாஸ்வேர்ட்!
ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு...
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணிதப் படிப்புக்கு கலக்கலான எதிர்காலம் !

எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.டெக்., பயோ-டெக் என்று மாணவர்கள் விரையும் நேரமிது. என்றாலும், அதற்கு சற்றும் சளைக்காமல்... கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் எப்போதுமே ஹவுஸ்ஃபுல்தான்! அந்தளவுக்கு பி.ஏ., பி.எஸ்சி. கோர்ஸ்கள் நம் மாணவ சமுதாயத்தின் முதல், முக்கிய, எளிய சாய்ஸாக இருக்கின்றன!

அந்த வகையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. கோர்ஸ்களை இணையில்லா தரத்துடன் தருவதில் முன்னணியில் இருக்கிறது, 'சென்னை மேத்தமேட்டிக்கல் இன்ஸ்டிடியூட்' (சி.எம்.ஐ). குறிப்பாக, கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனம். அறிவியல் படிப்புகளுக்கும் ஆராய்ச்சி வாய்ப்புகளைத் தருவது, இந்த நிறுவனத்தின் தனித்தன்மை. ஆம்! தன் மாணவர்களுக்கு அவர்கள் துறை சார்பாக வெளிநாடு வரை சென்று ரிசர்ச் செய்யும் வாய்ப்புகளை இந்த நிறுவனம் அளிக்கிறது.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

1989-ம் ஆண்டு ‘ஸ்பிக் சயின்ஸ் ஃபவுண்டேஷன்' சார்பில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், 1996 முதல் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தரம் உயர்ந்து, 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் அனைவருமே கல்வி மற்றும் அனுபவத்தில் தேர்ந்த, தரமானவர்கள். இந்நிறுவனம் வழங்கும் கல்வியிலும் அந்தத் தரம் எதிரொலிக்கிறது.

பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. மாணவர்களுக்கு அவர்கள் கல்விக்கும் செயல்முறைக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காக, தன் மாணவர்களைப் படிக்கும்போதே அந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தி வரும் இந்த நிறுவனத்தின் மாணவர்களில் பலர், உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு, ஆராய்ச்சி என்று ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்க அம்சமாகும். குறிப்பாக, ஃபிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற இ.என்.எஸ். ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டுடன் ‘டை-அப்’ வைத்துள்ள இந்த நிறுவனத்தினர், தங்களுடைய பி.எஸ்சி. மேத்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் (ஹானர்ஸ்) டாப் ரேங்க் மாணவர்களை அங்கு ஆராய்ச்சிக்கு அனுப்பு கிறார்கள். அதேபோல, இ.என்.எஸ்-ஸின் டாப் ரேங்க் ஹோல்டர்கள் நான்கு பேர் ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வந்து, இங்குள்ள மாணவர்களுக்கு டீச்சிங் மற்றும் ரிசர்ச் புரோகிராம்களில் உதவுகிறார்கள்.

முக்கியமாகக் கணிதத்துறையில்... அல்ஜீப்ரா, அனாலிசிஸ், டிஃபரன்ஷியல் ஈக்குவேஷன் அண்ட் டோப்பாலஜி போன்றவைகளும்; கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில்... டிசைன் அண்ட் அனாலிசிஸ் ஆஃப் அல்காரிதம்ஸ், கம்ப்யூடேஷனல் காம்ப்ளக்ஸ்சிட்டி தியரி அண்ட் கம்ப்யூட்டர் செக்யூரிட்டி; பிசிக்ஸ் துறையில்... குவான்டம் ஃபீல்டு தியரி அண்ட் மேத்தமேடிக்கல் பிசிக்ஸ் என்று இவர்களுக்கான ஆராய்ச்சித் தளம் விரிகிறது.

ப்ளஸ் டூ-வில் பர்ஸ்ட் குரூப் எடுத்திருக்கும் மாணவர்கள், அதாவது மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்திருக்கும் மாணவர்கள், இந்த கோர்ஸ§க்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென நடக்கும் பிரத்யோகமான நுழைவுத் தேர்வில் (சி.எம்.ஐ. என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே இங்கு அட்மிஷன்.

தவிர, ‘நேஷனல் சயின்ஸ் ஒலிம்பியாட்' (இரண்டாம் வகுப்பில் ஆரம்பித்து 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சயின்ஸ், மேத்ஸ் தொடர்பான கேள்விகள் அடங்கிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு (new.sofworld.org) நடத்தும் சயின்ஸ் போட்டிகளில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பவர்கள், நேரடியாக இந்த கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது ஒரு ரெஸிடென்ஷியல் இன்ஸ்டிடியூஷன். எனவே, மாணவர்கள் இங்கேயே தங்கிதான் கல்வி பயில முடியும்.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

இங்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.750 மட்டுமே கல்விக் கட்டணம் என்பது, சிறப்புச் செய்தி. கூடுதல் செய்தி... இங்கே படிப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் உண்டு.

நுழைவுத் தேர்வுக்கான அப்ளிகேஷன் தற்போது விநியோகிக்கப்படுகிறது. இதற்கான கடைசி நாள் 19.4.10. மேலும் விவரங்களுக்கு new.cmi.ac.in

இங்கு படித்த மாணவர்கள் அனைவருக்கும் கேல்டெக், எம்.ஐ.டி., பிரின்ஸ்டன், யேல் யுனிவர்ஸிட்டி, இ.என்.எஸ். போன்ற பிரபலமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி நிறுவனங்களிலும், தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ரிசர்ச் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சாஃப்ட்வேர் நிறுவனங்களும் இந்த இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுத்து பணியில் அமர்த்திக் கொள்கின்றன. கேம்பஸ் ப்ளேஸ்மென்ட்டும் உண்டு. ஆராய்ச்சி பணியிலிருப்போருக்கு சம்பளமாக பல பல ஆயிரங்களும் உண்டு!

- மீண்டும் சந்திப்போம்...

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
-தா.நெடுஞ்செழியன்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism