"பெண்கள் எல்லாருமே அழகுதான். அவங்களை இன்னும் அழகா காட்டற 'சீக்ரெட் ஆஃப் பியூட்டி'... அவங்களோட டிரெஸ்! அதுலயும் உயரம், ஒல்லி, குண்டு, குள்ளம்னு அவங்கவங்க உடல்வாகுக்கு ஏத்த மாதிரி டிரெஸ் பண்ணிட்டா, அவங்க இன்னும் இன்னும் அழகுதான்!''னு சர்டிஃபிகேட் கொடுக்கறாங்க, இருபது வருஷமா ஃபேஷன் டிசைனரா கலக்கிட்டு இருக்கற 'ஃபேஷன்' தபு.
பெண்கள் இனத்தையே நான்கு விதமான உடல் வாகுக்குள்ள பிரிச்சு அடக்கிட்டு, ஒவ்வொரு வாகுக்கும் ஏத்த டிரெஸ் டிசைன்களை அம்மணி அடுக்கறாங்க... நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்க!
''உயரமா, ஒல்லியா இருக்கறவங்க, உயரமா, பருமனா இருக்கறவங்க, கொஞ்சம் குறைஞ்ச உயரத்தோட, ஒல்லியா இருக்கறவங்க, கொஞ்சம் குறைஞ்ச உயரத்தோட, பருமனா இருக்கறவங்கனு இந்த நாலு வகைக்குள்ள அத்தனை பெண்களையும் அடக்கிடலாம்!
உயரம் 'ப்ளஸ்' மெல்லிய உடல்வாகு நீளமான சுடிதார் டாப்ஸ் போட்டா, அது இவங்க உயரத்தை இன்னும் கூட்டிக் காட்டும். குட்டையான சுடிதார் டாப்ஸ் போட்டா, கால்கள் ரெண்டும் நீளமா தெரியும். அதனால், மீடியம் சைஸ் சுடிதார் டாப்ஸ்தான் இவங்களுக்கான சாய்ஸ்.
டாப்ஸ், பேன்ட், துப்பட்டானு எல்லாமே ஒரே கலர்ல இருக்கற 'சிங்கிள் கலர்டு' சுடிதார்கள் அவங்க உயரத்தை 'பளிச்'னு காட்டுங்கறதால, 'கலர் காம்பினேஷன்' சுடிதார்களைப் போடலாம். 'வெர்டிகல் லைன்ஸ்'னு சொல்ற நீளக்கோடுகள் கொண்ட டிரெஸ்கள் இவங்க உயரத்தை இன்னும் அதிகமா காட்டும்கறதால, 'குறுக்குக் கோடுகள்' டிஸைன் கொண்ட டிரெஸ்களா தேர்ந்தெடுக்கலாம். இவங்க |