Published:Updated:

ஃப்ளாஷ்பேக்!

ஃப்ளாஷ்பேக்!

ஃப்ளாஷ்பேக்!

ஃப்ளாஷ்பேக்!

Published:Updated:

 
ஒவ்வொன்றுக்கும் பரிசு 150
ஃப்ளாஷ்பேக்!
ஃப்ளாஷ்பேக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்ளாஷ்பேக் !


கோபத் தக்காளி... வெட்கத் தக்காளி!

ஃப்ளாஷ்பேக்!

பத்து வருடங்களுக்கு முன் நான் திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, படு ஸ்டைலாக இருக்கும் எங்கள் பிரின்ஸி மேம் மேல் எங்களுக்குஎல்லாம் ஒரு கிரேஸ். ஒருநாள் என் தோழி ஒருத்தி, பிரின்ஸியை போலவே ஸ்டைலாக நடந்து இமிட்டேட் செய்துகொண்டிருக்க, அந்த வழியாக வந்த பிரின்ஸி கவனித்துவிட்டார். விஷயம் அவருக்குப் புரிந்துபோக, அந்த அழகான சிவந்த முகம், கோபத் தக்காளியாக பழுக்க, எங்களுக்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது! சட்டென்று சுதாரித்த நான், "இல்ல மேம்.. 'ஃபேர்வெல்'-க்கு ஒரு ராஜா, ராணி நாடகம் போடறோம். அதுக்கு ராணியோட மேனரிஸத்துக்கு பிரின்ஸி மேம் மாதிரி இமிட்டேட் செஞ்சா நல்லா இருக்குமேனு அவ டிரை பண்ணிட்டு இருந்தா" என்று ஒரு 'பிட்'டைப் போட, உடனே அவர் முகம் வெட்கத் தக்காளி ஆனது! "கேரி ஆன்" என்றுசொல்லி விட்டுச் சென்றார்.

தோழிகளிடமிருந்து ஒரே பாராட்டு மழைதான் எனக்கு!

- எஸ்.கவிதா பாண்டே, சென்னை-33

'என் சிலம்பில் இருப்பது முறுக்கு!'

ஃப்ளாஷ்பேக்!

கல்லூரி கலை விழாவில் நாங்கள் கோவலன் - கண்ணகி நாடகம் போட்டோம். கண்ணகி காற்சிலம்பை உடைத்துக் காட்டும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும், சிலம்பு நன்றாக உடைந்து சிதற வேண்டும் என்பதற்காக அரிசி முறுக்கு வாங்கி வந்து, அதை உள்ளே வைத்து, மெல்லிய ஈர்க்குச்சிகளை வளைத்து, நூலால் கட்டியிருந்தோம்.

மேடையில் தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு, ஆவேசமாக வசனம் பேசி, கையில் வைத்திருந்த சிலம்பை (!) நான் உடைத்தபோது அது நன்றாக உடைந்ததுடன், மேடையை தாண்டியும் சிதறியது. ஒரே கிளாப்ஸ். மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த நடுவர், முதல்வர், சிறப்பு விருந்தினர் மூவரும் எழுந்து நின்று, வாயை மென்று கொண்டே, "நாடகத்தைவிட உங்க முறுக்கு சூப்பர்!" என்றார்களே பார்க்கலாம்... அனைவரும் 'கொல்'லென்று சிரித்து விட்டோம்!

25 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்ச்சியை, தற்போது கல்லூரியில் படிக்கும் என் பிள்ளைகளிடம் இப்போதும் சொல்லி சொல்லிச் சிரிக்கிறேன்!

- இந்திராணி தங்கவேலு, மும்பை

 

'பயனற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!'

முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்த போது, எங்களுக்கு இலக்கண வகுப்பெடுத்த ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழையும்போதே, தூக்க தேவதையையும் அழைத்துக் கொண்டுதான் வருவார். அந்தளவுக்கு அவர் வகுப்பில் அரை சயனத்தில்தன் இருப்போம் நாங்கள். அன்று அவர் இலக்கணம் நடத்திக் கொண்டிருக்க, வழக்கம்போல் என் கண்கள் செருகி இருக்க, திடீரென என்னை எழுப்பிய அவர், '' 'பயனற்ற'ங்கற வார்த்தையை உபயோகிச்சு ஒரு வாக்கியம்

ஃப்ளாஷ்பேக்!

சொல்லு' என்று கேட்டார். எனக்கோ சொர்க்கத்தில் இருந்து என்னைத் தரதரவென்று இழுத்து வந்து வகுப்பறைக்குள் நிறுத்தியது போன்ற மயக்கநிலை. அவரோ, "ம்... சொல்லு..." என்று அதட்ட, "பயனற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் சார்" என்றேன் அவசரமாக.

வகுப்பறை முழுவதும் ஒரே சிரிப்பு மழை. " 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ சொல்றது புதுமொழியா இருக்கே..." என்று ஆசிரியரும் சிரிக்க, பிறகு தான் தூக்கத்தில் நான் உளறிய அழகு எனக்கே புரிந்தது!

- ஆர்.ரமாதேவி, பட்டுக்கோட்டை

இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி அனுபவங்களையும் எழுதி அனுப்பலாம்.

முகவரி 'ஃப்ளாஷ்பேக்'
அவள் விகடன், 757, அண்ணாசாலை சென்னை-600 02

ஃப்ளாஷ்பேக்!
 
ஃப்ளாஷ்பேக்!
ஃப்ளாஷ்பேக்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism