Published:Updated:

பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'

காலேஜ் கேம்பஸ்
பூஞ்சோலை பக்கங்கள் !
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலேஜ் ஸ்டார் !

"எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்டா இருக்கணும், அதுலயும் பெஸ்டா இருக்கணும்!" - ஈரோடு, பி.கே.ஆர். காலேஜுல ஃபைனல் இயர் பி.எஸ்சி., ஐ.டி. படிக்கிற கலைவாணிக்கு மோட்டிவேட்டிங் லைன் இதுதான்!

"காலேஜ் ‘ஸ்போர்ட்ஸ் டே’ அன்னிக்கு, கலைவாணிதான் காலேஜோட ஹீரோயின்! வாலிபால், ஹேண்ட்பால், த்ரோபால்னு எல்லா கேம்ஸ்லயும் ஆல்ரவுண்டர் அட்டாக் அவ! கூடவே, படிப்புலயும் ஃபர்ஸ்ட்!" - ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இப்படி உற்சாகமாக பல்லவி பாட, நிதானமா அனுபல்லவியை ஆரம்பிச்சாங்க கலைவாணி!

பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'

"திருவண்ணாமலையில ஆறாவது படிக்கும்போதே நான் ஸ்போர்ட்ஸ் டீம்ல சேர்ந்துட்டேன். ஸ்கூல்ல கொடுக்கற டிரெயினிங் கூடவே, தினமும் நானே மலையை சுத்தி வந்து பயிற்சி எடுப்பேன். ஜோனல், டிஸ்ட்ரிக்ட், டிவிஷனல், ஸ்டேட்னு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஒன்பதாவது படிக்கும்போதே நேஷனல் அளவிலான போட்டிகள்ல விளையாட ஆரம்பிச்சுட்டேன். தர்மராஜ், தமிழ்செல்வி, நேருனு பி.இ.டி-யா வந்தவங்க கொடுத்த ஊக்கம்தான், கலெக்டர் கையால அத்தனை பரிசுகள் வாங்கற அளவுக்கு என்னை உயர்த்தியிருக்கு!"னு நன்றி சொன்ன கலைவாணி, காலேஜ் எபிஸோடுக்கு வந்தாங்க!

"இந்த ஸ்போர்ட்ஸ் புரொஃபைல்தான், பி.கே.ஆர். காலேஜுல ஃப்ரீ ஸீட் வாங்கிக் கொடுத்துச்சு. காலேஜுல சேர்ந்த பிறகு, இதுவரைக்கும் ஸ்டேட் லெவல்ல அம்பது, நேஷனல் லெவல்ல ஏழுனு வாலிபால் போட்டிகள்ல வின் பண்ணியிருக்கேன். ரூரல், நேஷனல், பைக்கான்னு (நேஷனல் லெவல் போட்டி மாதிரியே இதுவும் ஒரு போட்டி) இந்தியாவுல எல்லா மாநிலங்கள்லயும் விளையாடப் போயிருக்கேன். தேசிய அளவுல மூன்று முறை தங்கப் பதக்கம் வாங்கியிருக்கேன்'’னு பிரைஸ் லிஸ்ட் சொல்ற கலைவாணி, 86% மார்க் வச்சிருக்கற கிளாஸ் ஃபர்ஸ்ட் கில்லி.

இவரோட விளையாட்டு திறமைக்காகவே பல கம்பெனிகள் இப்போ இவரை வாலன்ட்டரியா வேலைக்கு கூப்பிட, ‘எம்.எஸ்.ஸி. முடிச்சுக்கறேனே’னு அவகாசம் கேட்கற கலைவாணியோட லட்சியம்...

"இந்தியா லிப்ரோ மேட்ச்ல கலந்துக்கணும். இது ஜெயிச்சவங்கதான் ஒலிம்பிக் போக முடியும்!"

ஆல் த பெஸ்ட் கலை!

- யா.நபீசா, படங்கள் பா.கந்தகுமார்

பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
 
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism