Published:Updated:

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

Published:Updated:

சி.ஆர்.எஸ்.
ஃபீலிங்..ஹீலிங் !
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுஜா..நிஷா...பின்னே சுயநலம் !
ஃபீலிங்.. ஹீலிங்...!

'சுயநலவாதிகள்' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் சந்தோஷத்துக்கு, தன் வெற்றிக்கு, தன் ரசனைக்கு என தனக்காக மட்டுமே இயங்குபவர்கள் இவர்கள். இவர்களின் நட்பு, காதல், உறவு, உதவி என்று எதுவுமே உண்மை இல்லாததாகத்தான் இருக்கும்.

பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகளான சுஜாவும் நிஷாவும் (பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன)பள்ளிப் பருவத்தில்இருந்தே உயிர்த்தோழிகள். அதற்கான எல்லா இலக்கணங்களும் நிறைந்து வளர்ந்தவர்கள். அவர்களின் கல்லூரி வகுப்புக்கு இரண்டாம் ஆண்டில் 'லேட்டரல் என்ட்ரி'யாக வந்து சேர்ந்தான் கோகுல்.

'இந்தக் கதையில் இப்போது இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ அவன் மேல் காதலில் விழவேண்டுமே...' என்று நீங்கள் யூகித்திருந்தால், குட்! சுஜா, கோகுலை காதலிக்கத் தொடங்கினாள். கோகுலும் சுஜாவின் காதலை ஏற்றான். சுஜாவுக்கு பிடித்ததையெல்லாம் செய்தான் கோகுல். அதை ரசித்தாள் சுஜா.

இடையே, சுஜாவும் நிஷாவும் சேர்ந்து ருசிக்கும் கேன்டீன் காபி, வீக் எண்ட் அவுட்டிங், பிரவுஸிங் சென்டர் சர்ஃபிங் என்று இருவருக் கும் இடையேயான நட்பு தருணங்களை ஆக்கிரமித்தது கோகுலின் காதல். எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்தாள் சுஜா. ''இன்னிக்கு ஈவினிங் இந்த சுடிதார் ஸ்டிட்ச் பண்ணக் கொடுக்க டெய்லர் ஷாப் போவோமா..?'' என்ற நிஷாவுக்கு, ''இல்லப்பா. லைப்ரரிக்கு வர சொல்லியிருக்கான் கோகுல்!'' என்பது சுஜாவின் பதில். இதுபோன்ற பதில்கள் அவர்களுக்கு இடையில் பெருகின.

'அப்போ சுஜா மேல பொஸஸிவ் ஆகி, அவகிட்ட இருந்து கோகுலை கட் பண்ண ட்ரை பண்ணியிருப்பாளே நிஷா?' என்று இப்போதும் நீங்கள் சரியாக யூகித்திருந்தால், குட் குட்!

நிஷா, கிளாஸ் ரெப்ரஸன்டேட்டிவாக இருந்ததால், வருகைப் பதிவேட்டில் கோகுலுக்கு சிக்கல் ஏற்படும்படி அவளால் எளிதாக 'திருத்தம்' செய்ய முடிந்தது. அசைன்மென்ட், புராஜெக்ட்களில் அவன் தவறும்போது, அதை லெக்சரர்களிடம் போட்டுக் கொடுக்க முடிந்தது. 'அவன் கேமரா மொபைல்ல கிளாஸ் கேர்ள்ஸை கேவலமா போட்டோ எடுக்கறான்' என்று ஒரு பொய் குற்றச்சாட்டை ரகசியமாக ஹெச்.ஓ.டி-யிடம் பதிவு செய்ய முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனை 'சஸ்பெண்ட்' செய்யும் அளவுக்கு சீக்ரெட்டாக அவளால் காய் நகர்த்த முடிந்தது. இப்படி கோகுலுக்கு டார்ச்சர் கொடுக்க முடிந்தாலும், அவன் காதலுக்கு நிஷாவால் எந்த விஷத்தையும் பாய்ச்ச முடியவில்லை.

மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில், சுஜாவுக்கு திடுதிப்பென மாப்பிள்ளை பார்த்தார்கள். விஷயத்தை நிஷாவிடம் சொன்ன சுஜா, ''நான் கோகுல்கிட்ட பேசணும். நீயும் வா...'' என்று அவளையும் அவன் வீட்டுக்கு இழுத்துச் சென்றாள்.

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஆனால், கோகுலின் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தது என்னவோ நிஷாவும் கோகுலும்தான். தனக்கு அத்தனை தீமையும் செய்தவள் இவள்தான் என்று அறியாத கோகுல், சுஜாவின் ஆருயிர்த் தோழியாதலால், அதற்குரிய மரியாதையுடன் தன் காதல் எத்தனை உத்தமமானது என்பதை நிஷாவிடம் சொல்ல, இளக்காரச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் நிஷா. இந்த 'மீட்டிங்'கின் க்ளைமாக்ஸ், சுஜா வீட்டுக்கு வந்த பிறகுதான் புரிந்தது நிஷாவுக்கு! ஸாரி, அதை நீங்கள் யூகித்திருக்கவே முடியாது!

அதாவது, கோகுலுக்கு சுஜா எழுதிய கடிதங்கள், தந்த பரிசுகள் என அத்தனையையும் ஒன்றுவிடாமல் அவன் வீட்டில் இருந்து எடுத்துவரத்தான், நிஷாவை அழைத்துச் சென்று, அவளை கோகுலுடன் பேசவிட்டு, அந்த அவகாசத்துக்குள் 'வேலை'யை முடித்திருக்கிறாள் சுஜா. ''அப்பா பார்த்திருக்கற மாப்பிள்ளை ஒரு டாக்டர். ரொம்ப நல்ல குடும்பமாம். அப்பா, அம்மாவை மீறி நான் கோகுலை கல்யாணம் பண்ணிக்க விரும்பல. அதான்...'' என்று சுஜா சொன்னபோது, உயிர் உலுக்க அதிர்ந்துவிட்டாள் நிஷா!

'எத்தனை சுயநலக்காரி இவள். இவளின் பொழுதுபோக்குக்கு கோகுலை பலியாக்கியது மட்டுமல்லாமல், வசதியான மாப்பிள்ளை வந்தவுடன் அவனை கை கழுவியது மட்டுமல்லாமல், தன் காரியத்தை சாதிக்க, எனக்குத் தெரியாமலேயே உயிர்த்தோழியான என்னைப் பயன்படுத்திக் கொண்டதோடு இப்போது என்னிடமே பொய் நியாயம் பேசுகிறாள். ச்சீ' என்றிருந்தது நிஷாவுக்கு!

இந்த ஆறு மாதங்களில் சுஜாவுக்கு திருமணம் முடிந்திருந்தது. காதல் தோல்வியில் 'குடி' பழகி, காலேஜில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அப்பாவின் பிஸினஸை கவனிக்கப் போய்விட்டான் கோகுல். நிஷா... மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். உயிர்த் தோழியின் சுயநலமும், தான் கோகுலுக்குச் செய்த துரோகங்களும் அவளை விரட்டிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் தானாகவே என்னிடம் வந்து கவுன்சிலிங் பெற்றுப்போனாள்.

நட்பாக இருங்கள், அன்பாக இருங்கள், உயிராக இருங்கள்... அதற்குத் தகுதியுள்ளவர்களிடம்!

ஃபீலிங்.. ஹீலிங்...!
- ஃபீல் பண்ணுவோம்...
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism