Published:Updated:

உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !
 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடைத்து போட்ட விதி...உயர வைத்த பாசம் !
தாமரை ஜோதி

சமான்ய பெண்களின் சாதனை கதைகள்

வாழைநார் கொடுத்த வாழ்க்கை

"வாழ்க்கை நமக்கு வலிமையைக் கொடுக்கறதுக் காகவே சில வலிகளைக் கொடுக்கும். என் வாழ்க்கை யில நான் அனுபவிச்சிட்டிருக்கற வலிதான், வெற்றிகளை நோக்கி என்னை நடக்க வெச்சுக்கிட்டே இருக்குது"

- தீர்க்கமாக ஆரம்பிக்கிறார் ஆண்டாள்!

பிறந்த வீட்டில் செல்லம், திருமணம், தாய்மை என்று ஒரு பெண்ணுக்கான சராசரி சந்தோஷங்களுடன் நகர்ந்த ஆண்டாளின் வாழ்க்கை, 'மஞ்சள்காமாலை உங்க குழந்தையை முடக்கிடுச்சு. இனி, உங்க குழந்தை வாழ்க்கை முழுக்க படுத்த படுக்கையாதான் இருக்கணும்' என மருத்துவம் சொன்னபோது, உயிர்ப்பு இழந்தது. பதறினார், துடித்தார், கதறினார்... ஒருகட்டத்தில், எழுந்தார்.

 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

விதியின் விளையாட்டால் தன் வாழ்வில் இடியாக இறங்கிய அந்தச் சோகத்தினூடே முட்டி மோதி ஜெயித்து வந்திருக்கிறார். திருச்சி மாவட்டம், குழுமணி கிராமத்திலிருந்து முளைத்து வந்திருக்கும் ஆண்டாளின் வெற்றி வித்தை, சாமானிய பெண்களையும் சாதனைப் பெண்களாக மாற்றும் தன்னம்பிக்கை டானிக்.

"என் சொந்த ஊர் சிதம்பரம். ஊட்டியிலதான் டிகிரி படிச்சேன். அதை முடிச்ச கையோட, கல்யாணம் ஆயிடுச்சு. கணவருக்கு திருச்சி, அறநிலையத்துறையில வேலை. அதனால அவரோடயே வந்துட்டேன். கல்யாணமான அடுத்த வருஷமே அழகான ஆண் குழந்தை பிறந்தது. என் சந்தோஷத்துக்கு அளவேயில்ல. சாமிக்கு மனசுருகி நன்றி சொன்னேன்" என்பவருக்கு, அந்த சந்தோஷத்தை அற்ப ஆயுளாக்கியிருக்கிறது விதி.

"குழந்தை பிறந்து இருபத்தி எட்டாவது நாள் உடம்பு சரியில்லாமப் போக, உடனே பதறியடிச்சு ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஒடினோம். 'குழந்தைக்கு மஞ்சாள்காமாலை. பெட்ல அட்மிட் பண்ணணும்'னு சொன்னாங்க. கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிச்சு, குழந்தை தெளிஞ்சாப்ல இருக்கவும், வீட்டுக்கு தூக்கிட்டு வந்தோம். என் குழந்தை படுத்த படுக்கையாத்தான் இருந்தான். சிரிக்கல, அழல. ஏன் இப்படியிருக்கான்னு திரும்பவும் செக் பண்ண போனப்பதான், மஞ்சள்காமாலைக்கு கொடுத்த மருந்து ஒவர் டோஸ் ஆகி, குழந்தையோட மூளையை சுத்தமா பாதிச்சுடுச்சுனு சொன்னாங்க.

பிறந்ததுலயிருந்து எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்காத என்னை, ஒட்டுமொத்தமா அடித்து துவைச்சுட்டார் கடவுள். முடங்கிக் கிடக்கற குழந்தையைப் பார்த்து தினம் அழுது அழுது கண்ணீரும் வத்திப் போய், அழுகறதுக்கும் திராணியில்லாம போச்சு" என்பவரின் குழந்தை இந்த 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறான். அதேசமயம், தன் தாய் இன்று ஒரு தொழில் முனைவோராவதற்கும் அவனே திரியாகியிருக்கிறான்!

"சமாளிக்க முடியாத அளவுக்கு மீறின அவனோட மருத்துவச் செலவுகளுக்காக, நானும் ஒரு வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் வந்தது. ஆனா, பெட்ல கிடக்கற புள்ளைய விட்டுட்டு எப்படி வேலைக்குப் போறதுனு தயங்கினேன். நிலைமையை புரிஞ்சுட்ட என் அப்பா, எங்க வீட்டுல தங்கிஇருந்து, அந்த வயசான காலத்திலயும் என் குழந்தையை கண்ணுங் கருத்துமா பார்த்துக்கிட்டார்.

இயல்பா இருக்கற குழந்தைங்கள விட்டுட்டு வேலைக்குப் போற அம்மாக்களுக்கே, 'சாப்பிட்டுச்சா, தூங்குச்சா...'னு மனசு துடிக் கும். அப்படியிருக்கும்போது, என்னோட நிலைமை இன்னும் மோசம்தானே? வேல செய்யற இடத்துல என் மனசு தவியா தவிக்கும். இருந்தாலும், நிக்காம ஓடினேன். இதுக்கு நடுவுல பெண் குழந்தை வேற பொறந்துச்சு. இன்னொரு தாயா இருந்து எங்கப்பா கவனிச்சுக்கிட்டது... என்னோட ஓட்டத்துக்கு துணையா இருந்துச்சு" என்றவருக்கு அதற்குப்பின் கிடைத்திருக்கிறது அடுத்த இடி.

"எங்கப்பா திடீர்னு இறந்துபோக, அவரோட இழப்பும், என் குழந்தையோட நிலையும் என்னை நொறுக்கிப்போட, இன்னும் உடைஞ்சுட்டேன். அப்போதான் நான் வீட்டோட இருந்து குழந்தைய பார்த்துக்கற நெருக்கடி வந்தது. அந்த நெருக்கடிதான் இன்னிக்கு என்னை ஒரு தொழில் முனைவோரா ஜெயிக்க வச்சுருக்கு" என்றவர், கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்தபடி தொடர்ந்தார்...

"இனி வேலைக்கு போக முடியாது, வீட்டோட இருந்து ஏதாவது பிஸினஸ் பண்ணினாத்தான் குழந்தையையும் பார்த்துக்க முடியும்னு தோணுச்சு. ஆனா, என்ன பிஸினஸ் செய்யறதுனு தெரியல. அந்த நேரத்துலதான் வாழைநார்ல தயாராகும் பொருட்களைப் பத்தி பேப்பர்ல படிச்சேன். இந்தியாவுலயே வாழை உற்பத்தியில முதல் அஞ்சு இடங்களுக்குள்ள திருச்சியும் இருக்குனு படிச்சப்போ, மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வந்துச்சு. உடனே அதைப் பத்தின செய்திகளை இன்னும் தீவிரமா விசாரிச்சேன்.

 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !

அப்பதான் வாழைநார் பொருட்களுக்கு இருக்கற பெரும் தேவையைத் தெரிஞ்சுக்கிட்டேன். சுற்றுச்சூழல் மாசு பிரச்னைகளால பிளாஸ்டிக் விஷயத்துல உலகம் முழுக்கவே ஒரு எதிர்ப்பு இருக்கு. அதனால, அதுக்குப் பதிலா வாழைநார் பொருட்களுக்கு நல்ல டிமாண்ட்டும் இருக்கு. ஜப்பான் நாட்டு கரன்சியே வாழைநார்லயிருந்துதான் தயாரிக்கப்படுது. ஐரோப்பிய நாடுகள்ல வாழைநார்லயிருந்து தயாரிச்ச டிஷ்யூ பேப்பரைத்தான் பயன்படுத்தறாங்க. பேப்பர், சட்டை, அலுவலக ஃபைல், காலணிகள், அழகுப் பொருட்கள்னு பல்வேறு பொருட்கள வாழைநார்ல உருவாக்கலாம். காதி கிராஃப்ட், பூம்புகார், மேப் இண்டியா போன்ற பல நிறுவனகள்லயும் வாழை நார் அலங்காரப் பொருட்களுக்குத்தான் இப்போ மவுசு. இந்திய அரசாங்கம்கூட வாழைநார்ல பொருட்கள் தயாரிக்கறதை ஊக்குவிக்கறதுக்காக நிறைய மானியங்கள வழங்குது!

இவ்வளவையும் தெரிஞ்சுக்கிட்டப்போ, 'நாம ஏன் வாழை நார் பொருட்கள் தயாரிக்கக் கூடாது?'னு மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை வந்துச்சு" என்பவருக்கு அந்தப் புள்ளியில்தான் அவர் வாழ்வுக்கான வெளிச்சம் புரிந்திருக்கிறது.

அதன்பின் அதற்கான தன் தேடலை, முயற்சியை, உழைப்பை, தன்னம்பிக்கையை தீவிரப்படுத்திய ஆண்டாள்... இன்று மாதத்துக்கு பல ஆயிரங்களை ஈட்டும் ஒரு தொழில் முனைவோர்; பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு முதலாளி என்று வடிவெடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் எப்படி சாதித்தார்..?

மாதத்துக்கு லட்சங்களில் வருமானம் ஈட்டவல்ல இந்த வாழைநார் தொழில் பற்றிய ஏ டு இஸட் தொழில்நுட்பங்கள் என்னென்ன?

இந்தத் தொழிலில் குதிக்கத் தேவையான மாதிரி திட்ட மதிப்பீடு விவரங்கள்; அதற்கு சாதகமான வங்கிக்கடன் மற்றும் மானியங்கள்; மார்கெட்டிங் டிப்ஸ்கள் எப்படி?

இதையெல்லாம் அடுத்த இதழில் பார்ப்போம்

 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !
- சாதனைகள் தொடரும்...
 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !
 உடைத்து போட்ட்ட விதி உயர வைத்த பாசம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism