Published:Updated:

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

Published:Updated:

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...
ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...
ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலன் யாருக்கு ?

ம.பிரியதர்ஷினி

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

"ஃபாரின்ல ஹையர் ஸ்டடீஸ் பண்ணலாம்னு இருக்கேன்..." - இன்றைய யுவன் மற்றும் யுவதிகளின் மேற்படிப்பு பற்றிய பரவலான ஆர்வம் இது!

"எதுக்கு ஃபாரின்..? அதான் ஃபாரின் யுனிவர்சிட்டீஸ் எல்லாம் நம்ம நாட்டுக்கு வரப்போகுதே..." - இது நம் இளைஞர்களின் லேட்டஸ்ட் உற்சாக உரையாடல்!

ஆம்! வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான மசோதாவுக்கு (The Foreign Educational Institution Bill), நம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, இன்னும் பல படிகள் தாண்டிதான் நடைமுறைக்கு வரும் என்றாலும்... இதற்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் கலந்துகட்டி புறப்பட்டு விட்டது.

ஆதரிப்போர் வரிசையில் நின்று பேசுகிறார் பிரபல கல்வியாளர் நெடுஞ்செழியன்... "இந்தியாவில் இப்போது பல கல்வி நிறுவனங்களும், 'நாங்க ஃபாரின் யுனிவர்ஸிட்டிஸோட டை-அப் வச்சிருக்கோம்' என்று அறிவிக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இன்னொருபுறம், 'ஃபாரின் யுனிவர்ஸிட்டி' என்ற ஆசையில் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகிறவர்கள், 'அங்க யுனிவர்ஸிட்டியில முறையான சர்டிஃபிகேட் பெறமுடியல', 'அவங்க விளம்பரப்படுத்தின மாதிரி அங்க அந்தக் கோர்ஸே இல்ல' என்பது போன்ற ஏமாற்றங்களுடன் திரும்பி வருவதையும் பார்க்கிறோம். ஆகவேதான், நம் நாட்டில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று பலராலும் நம்பப்படுகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கான கடுமையான விதிகளையும் நம் அரசாங்கம் இந்த மசோதாவில் வகுத்துள்ளது. எனவே, தவறுகள் நடக்க வாய்ப்பில்லை."

எதிர்ப்போர் வரிசையில் நிற்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என். முருகன் (இவர், வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின், மும்பை மற்றும் டெல்லியிலுள்ள சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறார்).

''அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்கள்தான் முன்பெல்லாம் கல்விப்பணியில் இருந்தார்கள். அதன் விளைவாக தரமான கல்வி நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், சமீப வருடங்களில், நினைத்தவர்கள் எல்லாம் 'கல்வி வள்ளல்' என்று கிளம்பிவரவே... கல்வியின் தரம் பாதாளத்துக்குப் போய்விட்டது. இன்றைக்கு 44 தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அனுமதியை ரத்து செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.

தற்போது அரசு விதித்திருப்பதாகச் சொல்லப்படும் நிபந்தனைகளையெல்லாம் ஏற்று வெளிநாட்டிலிருக்கும் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு, ஸ்டான்ஃபோர்டு போன்ற கல்வி நிறுவனங்கள் நிச்சயமாக நம் நாட்டுக்கு வரவே மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் அங்குள்ள இரண்டாம் தர கல்வி நிலையங்கள் மட்டுமே இங்கே கால் பதிக்கும். அப்படியிருக்க தரமான கல்வி எங்கிருந்து வரும்?

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...

'யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) ஒப்புதலுடன் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்' என்றொரு நிபந்தனை கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதே யு.ஜி.சி-யின் ஆயிரத்தெட்டு விதிமுறைகள் இருந்தும்கூடத்தான், இங்குள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இஷ்டம்போல செயல்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை மீறாது என்று யார் சொல்லமுடியும்? அவர்களும் இஷ்டம்போலத்தான் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். 'வெளிநாடு' என்றதுமே நம்முடைய மக்களும் யோசிக்காமல் சொத்தை விற்று, கடன்களை வாங்கிக் கொட்டிக் கொடுப்பார்கள். இப்படி சுருட்டும் பணத்தை வைத்து, அதிக சம்பளம் கொடுத்து நம்மூர் பேராசிரியர்களைத் தங்கள் கல்லூரிக்கு இழுப்பார்கள்.

அடுத்ததாக 'இடஒதுக்கீடு இங்கே இருக்காது' என்கிறார்கள். இதுவும்கூட ஒரு வகையில் சாமான்ய மக்களின் எதிர்காலத்தில் கை வைக்கப் பார்க்கும் விஷயம்தான்.

'வெளிநாடு' என்றாலே உடனே உயர்த்திப் பிடிக்கிறார்கள். உண்மையில் நாம் ஒன்று கல்வியில் குறைந்தவர்கள் இல்லை. இந்தியாவில் உள்ள ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., எய்ம்ஸ் போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை வேலைக்கு எடுக்க வெளிநாட்டுக் கம்பெனிகள் பலவும் போட்டி போடுகின்றன. ஐ.ஏ.எஸ். முடித்த பிறகு, சொந்த செலவில் வெளிநாட்டுக்குப் போய் எம்.பி.ஏ. படித்தவன்தான் நான். அங்கே பலநாட்டு மாணவர்களுக்கு நடுவே... நான் முதல் மாணவனாக படித்தது... அங்கிருந்த பேராசிரியர்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்தியக் கல்வியின் தரம் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசினார்கள். இதுதான் உண்மை.

எனவே, இங்கே இருக்கும் தரமான பேராசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பது, நேரத்துக்கு வேலைக்கு வருவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினாலே... நம்முடைய கல்வியை மேலும் செழுமையாக்க முடியும்."

ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...
 
ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...
ஃபாரின் பல்கலைக் கழகங்கள் பராக்...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism