Published:Updated:

அவள் blogspot.com

அவள் blogspot.com

அவள் blogspot.com

அவள் blogspot.com

Published:Updated:

அவள்.blogspot.com
வாசகிகள் பக்கம்
அவள் blogspot.com
அவள் blogspot.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150

மரண பய(ண)ம்!

அவள் blogspot.com

சென்ற வாரத்தில் ஒரு நாள், மாலை நேரம்... சென்னை, அண்ணாசாலையிலிருந்து 11-ஜி பஸ்ஸில் ஏறினேன். கடைசி ஸீட்டில் உள்ள வரிசையில் ஒரு குழந்தையுடன் உட்கார்ந்திருந்த பெண்மணியை, தள்ளி உட்காரச் சொன்னபோது, 'இதுக்குமேல தள்ள முடியாதும்மா... இங்க பாருங்க ஸீட்டே இல்ல. அதுக்கு பதிலா ஓட்டைதான் இருக்கு. அப்புறம் ரோட்டுக்குத்தான் போகணும்'' என்று அவர் காட்டிய இடத்தை எட்டிப் பார்த்தால்... தார் ரோடு முகத்தில் அறைந்தது. 'இதைக் கவனிக்காம, என் குழந்தையை உட்கார வெச்சிருந்தா... இந்நேரம் அவ்வளவுதான்" என்று வருத்தப்பட்டார்.

அருகிலிருந்த ஒரு முதியவர், ''இது சாதாரண பஸ். டிக்கெட் விலை கம்மி, அதனாலதான் இப்படியெல்லாம் ஓட்டை, உடைசலா ஓட்டுறாங்க. சொகுசு பஸ்ஸ§னா இப்படி இருக்காது" என்றார் என்னுடைய ஃப்ளாஷ்பேக் தெரியாமல்!

ஏற்கெனவே ஒரு நாள், சொகுசு 11-ஜி பஸ்ஸில் ஏறி, ஜன்னலோர ஸீட்டில் உட்கார்ந்தேன். தி.நகர், துரைசாமி சப்வே தாண்டி, தம்பையா ரோடு திரும்பிய சமயம், மேலிருந்து கண்ணாடி ஜன்னல் 'படீர்' என்ற சத்தத்துடன் என் கை மீது விழ, உயிர் போகும் வலி. அந்த சொகுசு பேருந்தில் கண்ணாடியை மேலே ஏற்றி இறக்குவதற்காக இருக்கும் 'லாக்' காணாமல் போயிருந்தது.

ரத்தம் கட்டிக் கொண்டு, இரண்டு நாள் வேலைக்குப் போக முடியாமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. என் இடத்தில் ஒரு குழந்தையோ, வயதானவரோ இருந்திருந்தால்...?!

டீலக்ஸ், சொகுசு, ஏ.சி. என்று பல பெயர்களில் காசு வாங்கும் மாநகரப் பேருந்து நிர்வாகம், இதையெல்லாம் கவனித்தால்தான் என்ன?

எம்.பிரேமலதா, சென்னை

தாய் தந்த சீதனம்!

அவள் blogspot.com

சில நேரங்களில் எங்கேயோ நாம் கேட்ட கதைகள், சம்பவங்கள், விஷயங்களைப் படிக்கும்போது 'ச்சே... இதை முன்கூட்டியே படிச்சிருந்தா, என் விஷயத்துல கொஞ்சம் நிதானமா நடந்திருப்பேனே' என்று நினைக்கத் தோன்றும். அப்படி நம்மை நாமே செதுக்கும் உளியாக சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இது.

ஜூலி-சாலமன் இருவரின் திருமணத்தன்று, புதிதாகத் தொடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீட்டிய ஜூலியின் அம்மா, ''நீ சந்தோஷமா இருக்கிறப்பல்லாம் உன்னால எவ்வளவு பணம் போட முடியுமோ போட்டு வை. அப்படியே என்ன காரணத்துக்காக பணம் போட்டியோ... அதை, பாஸ்புக்குல இருக்கற ரிமார்க்ஸ் ஏரியாவுல எழுதி வை" என்று சொன்னார். மகளின் திருமண சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 2,000 ரூபாயையும் அதில் டெபாஸிட் செய்திருந்தார்.

''நல்ல ஐடியாவா இருக்கே... நாம ரெண்டு பேருமே இந்த அக்கவுன்ட்டில் பணம் போடலாம்" என்று தானும் உற்சாகமாகிவிட்டார் சாலமன்.

'ஜனவரி 800 ரூபாய் - ஜூலியின் பிறந்த நாள். பிப்ரவரி 1,000 ரூபாய் - சாலமனுக்கு புரமோஷன். மார்ச் 400 ரூபாய் - கொடைக்கானல் ஜாலி ட்ரிப் போன சந்தோஷம். ஏப்ரல் 1,000 ரூபாய் - சாலமனுக்கு பிறந்த நாள். மே 3,000 ரூபாய் - நான் அப்பாவாகப் போற இரட்டிப்பு சந்தோஷம்'

- இப்படி நான்கு ஆண்டுகள் சந்தோஷமாகக் கரைந்து கொண்டிருந்த சூழலில், திடீர் சூறாவளி! காரணம் இல்லாமலே அடிக்கடி சண்டைகள் வெடிக்க, ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு போன் செய்த ஜூலி, ''இனியும் இவரோட குடும்பம் நடத்த முடியாது. இவரைப் போய் எப்படிம்மா எனக்குக் கட்டி வெச்சீங்க" என்று புலம்பினாள்.

ஆயிரம் சமாதானங்களும் எடுபடாத நிலையில்... ''ஓ.கே... நீ விரும்பின மாதிரி உனக்கு டைவர்ஸ் வாங்கித் தந்துடறேன். அதுக்கு முன்ன நீ ஒண்ணு செய்யணும். உனக்கு கல்யாணத்தன்னிக்கு நான் கொடுத்த பாஸ் புக்குல போட்ட பணத்தை எல்லாம் முதல்ல பேங்க்ல இருந்து எடுத்துடு. உன் கல்யாணச் சுவடா எதுவுமே இருக்கக் கூடாது" என்றாள் அம்மா.

வங்கி க்யூவில் நின்றபடியே மெதுவாக பாஸ் புக்கை புரட்டிய ஜூலி, ஒவ்வொரு டெபாஸிட் பற்றியும் எழுதப்பட்டிருந்த அந்த சந்தோஷ நினைவுகளைப் படித்துக் கொண்டே போக, இமை மீறியது கண்ணீர்! 'எனக்கு இத்தனை சந்தோஷங்களைத் தந்திருக்கிறாரா சாலமன்!' என்று நினைத்தவள், சட்டென்று வங்கியைவிட்டு கிளம்பி ஓடினாள். ''இந்த பாஸ்புக்ல இருக்கிற பணத்தை செலவழிச்ச பிறகு நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்" என்று சாலமனிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள்.

மறுநாள்... கையில் பாஸ்புக்குடன் வாசலில் நின்றான் சாலமன். ஓடி வந்து அதை வாங்கி பார்த்தவள், அப்படியே அவனை இறுகக் கட்டிக் கொண் டாள்.

பாஸ்புக்கில் இருந்தது - 'டிசம்பர் மாதம் 5,000 ரூபாய்- மனைவியுடனான மோதல் முற்றுப்புள்ளிக்கு வந்த நாள்.

என்ன தோழி களே... நல்ல ஐடியாவா இருக்குல்ல..!

- கே.ஜெகநேத்ரா, தேனி

யாரைத்தான் நோவதோ?!

அவள் blogspot.com

சென்ற வாரம் விடியற்காலையில் வீட்டு வாசலில் கிடந்த பேப்பரை எடுக்க கதவைத் திறந்தேன். எதிர்வீட்டு எல்.கே.ஜி. சிறுமியிடம் அவளுடைய அப்பா ஏதோ கோபமாகச் சொல்லிக் கொண்டிருக்க... ஒரு நிமிடம் கவனித்தேன். உடனே, ஒரு சட்டையை சிறிய பையில் போட்டுக்கொண்டு வந்த சிறுமி, ''ப்போ... ந்நா ஊருக்குப் போயேன்" என்று மழலை மாறாமல் சொன்னபடியே செருப்பை மாட்டிக் கொண்டிருந்தது.

குறும்புதான் என்றாலும், 'வீட்டைவிட்டு போக வேண்டும்' என்ற எண்ணம் அந்த பிஞ்சு மனதில் எப்படி முளைத்தது? என்ற யோசனையுடேனேயே அன்றைய பேப்பரைப் பிரித்தால்... 'ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தீக்குளித்து தற்கொலை' என்ற செய்தி இடியாகத் தாக்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஆதிதிராவிடர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 11 வயது அஸ்வினியை, லேட்டாக வந்ததற்காக ஆசிரியர் திட்டியதோடு, பிரம்பால் அடித்ததுதான் காரணம்.

இந்த விஷயத்தில் யாரைக் குறை சொல்ல?

மழலைகளை, பொம்மைகளாக ஆட்டிவைக்கும் சில ஆசிரியர்களையா? பள்ளி முடிந்து வரும் மழலைகளிடம் மனம் விட்டுப் பேசாத பெற்றோர்களையா? மழலைகளையும் அதிமேதாவி போல் சித்திரித்து, சகல விஷயங்களையும் அலசும் மீடியாக்களையா?

- ப்ரியாலட்சுமி, கோவில்பட்டி

உங்களின் ஆச்சர்யங்கள், ஆயாசங்கள், ரசனைகள், கவிதைகள், வெற்றிகள், வெதும்பல்கள், கொதிப்புகள், கொண்டாட்டங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் அந்த உணர்ச்சி 1% கூட குறையாமல் நீங்கள் பதிவு செய்யத்தான்... 'அவள். blogspot.com'. ஒரே ஒரு கண்டிஷன்... அத்தனையும் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாடமாகவோ, படிப்பினையாகவோ, பயனுள்ளதாகவோ, ரசிக்கும்படியோ இருக்க வேண்டும் - அவ்வளவுதான்!

அத்தனையையும் கடிதம் (அவள்.blogspot.com', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2), ஃபேக்ஸ் (044-28512929), இ-மெயில் (aval@vikatan.com) மற்றும் உங்கள் குரலிலேயே பதிவுசெய்தல் (044--42890002) என எந்த வழியில் வேண்டுமானாலும் அனுப்பி வையுங்கள்.

இதழில் பதிவாகும் ஒவ்வொன்றுக்கும் பரிசு (ரூ.150) காத்திருக்கிறது!

அவள் blogspot.com
 
அவள் blogspot.com
அவள் blogspot.com
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism