Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

நமக்குள்ளே...


நமக்குள்ளே ....

''சொர்க்கத்தில் சந்தோஷமாக தன் நாட்களைக் கழித்து வந்த அந்த அரசரிடம், 'இங்கே உங்களுக்கான நாட்கள் முடிவடைந்து விட்டன. மீண்டும் பூவுலகில் பிறந்து நற்காரியங்கள் செய்து, மீண்டும் சொர்க்கத்துக்கு வாருங்கள்' என்று புறப்படச் சொன்னார்கள் தேவ தூதர்கள்.

அவருக்கோ... பூவுலகில் மறுபடியும் பிறப்பதில் துளியும் ஆர்வம் இல்லை. அதைப் புரிந்துகொண்ட தேவ தூதர்கள், 'உங்களின் நற்காரியத்தால் பயனடைந்த யாரேனும் ஒருவரை பூமியில் காண்பித்தால், விதிவிலக்கு அளிக்கப்பட்டு தொடர்ந்து இங்கே இருக்க அனுமதிக்கப்படுவீர்கள்' என்றனர்.

உடனே தனது தேசத்துக்கு வந்து, தன்னால் பயனடைந்தவர்களில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தார் அரசர். சில நூறு ஆண்டுகள் ஆகிப் போயிருந்ததால், எவருமே இல்லை. வயதான பெரியவர் ஒருவரை அணுகி, தன்னைப் பற்றிக் கேட்டார். 'எனக்குத் தெரியவில்லை. அந்த அரசமரத்திலிருக்கும் வயதான ஆந்தையைக் கேளுங்கள்' என்று கைநீட்டினார் பெரியவர்.

ஆந்தையோ... 'அந்தக் குளத்தில் வசிக்கும் ஆமையிடம் கேளுங்கள்' என்றது.

எடுத்த எடுப்பிலேயே, 'உங்களை நன்றாகத் தெரியுமே' என்று ஆமை சொல்ல... முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது அரசருக்கு!

'இந்தக் குளம் உங்கள் காலத்தில் உருவானதை மறந்துவிட்டீர்களா?' என்று ஆமை கேட்கவே, 'இப்படி ஒரு குளம் வெட்டிய ஞாபகமே இல்லையே' என்று தலையைச் சொறிந்தார்.

'உங்கள் ஆட்சியின்போது ஏராளமான பசுக்களை மக்களுக்கு தானமாக வழங்கினீர்கள். அந்தப் பசுக்கள், இங்கே இருந்த புல்வெளியில்தான் மேய்ந்தன. அவற்றின் கால் குளம்புகளால் மிதிபட்டு உருவான இடம்தான், மழைநீர் தேங்கி இப்படிக் குளமாக மாறிவிட்டது' என்றது ஆமை!

நாம் செய்யும் நல்ல காரியங்கள், நமக்கே தெரியாமல் எங்கோ... யாருக்கோ பயன்படுகிறது என்று தெரியும்போது கிடைக்கும் ஆனந்தத்தின் அளவுக்கு எல்லையே இல்லை!

அப்படியிருக்க... தெரிந்தே செய்யும் நல்ல காரியங்களுக்கு...?

ஆம்... வேலை வாய்ப்புக்கு ஒரு பாதை, தொழில்முனைவோர்களின் வெற்றி ரகசியம், சுகப்பிரசவத்துக்கு பாரம்பரிய வழிமுறைகள், மன பாரத்துக்கு மருந்து, வாசகிகளின் எண்ண அலைகளின் பதிவுகள்' என்று கடந்த இதழில் நீங்கள் விதைத்திருப்பதெல்லாமே... நாளைய நல் விருட்சங்களே!''

- இது திருச்சியைச் சேர்ந்த தோழி இந்திரா எழுதி அனுப்பியிருக்கும் கடிதம். இதேபோல அஞ்சல், இ-மெயில், தொலைபேசி என்று தோழிகளின் வாழ்த்துகளும் விசாரிப்புகளும் தொடர்கின்றன.

'தாய்மை உணர்வோடு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறோம்' என்று கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது... 'ஈன்றபொழுதினும் இன்பமாக இனிக்கிறது'!

உரிமையுடன் உங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே ....


ஆசிரியர்

நமக்குள்ளே ....
 
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism