Published:Updated:

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

Published:Updated:

பாரதி பாஸ்கர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
நீநதி போல ஓடிக் கொண்டிரு !
நீநதி போல ஓடிக் கொண்டிரு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

பகுதி 2

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

சமீபத்திய சாமியார் சர்ச்சை, ஸ்பெஷல் காட்சிகள், செய்தித் தொகுப்புகள், சமாதி நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்ட சமாதானங்கள், பேரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்தப் பிரச்னை சில நாட்களில் ஏதாவது ஒரு புள்ளியில் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் பிறகும் ஒன்று மிச்சமிருக்கும். அது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!

அரசியல் சச்சரவோ, ஆன்மிகப் பரபரப்போ... அடிபடுவதும், அலசப்படுவதும், அவமானப்படுவதும் இங்கு எப்போதுமே பெண்தான். சம்பந்தப்பட்ட பெண் செய்தது சரியா, தவறா - அது வேறு விஷயம். ஆனால், குறிவைக்கப்படுவது யாருக்காக இருந்தாலும், அதிகம் பொசுங்கிப் போவது பெண் என்பது சுடும் நிஜம்.

நான் முன்பு குடியிருந்த அடுக்குமாடி வீட்டில், கோபாலன் என்பவர் இருந்தார். கொரியர் கொடுக்கும் பையனுக்கும் அவருக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில், அவன் வேலை செய்த கம்பெனிக்கு தொலைபேசி மூலம் ஒரு புகார் அளித்து விட்டார் கோபாலன். அடுத்த நாளிலிருந்து அவனைக் காணவில்லை.

ஆனால், மூன்று நாள் கழித்து, அவர் வீட்டுக்குப் போகும் மாடிச் சுவரில் பளிச்சென்று நீல நிறப் பெரும் எழுத்துகளில் அவர் மனைவியின் பெயரெழுதி, வக்கிரமான ஆபாச வார்த்தை ஒன்று எழுதப்பட்டிருந்தது. பதறி ஓடி, சுவரில் வெள்ளையடித்து கோபாலன் அதை மறைப்பதற்குள் குடியிருப்புவாசிகள் அனைவரும் அதைப் படித்து விட்டனர். வழக்கம்போலவே, 'தட்டி மாநாடுÕ போட்டு காரண காரியங்களை விவாதித்தனர். எழுத்துக்கூட்டிப் படித்த சிறு குழந்தைகள், ''அப்படினா என்ன?" என்று அம்மாக்களிடம் கேட்டு, ''படிக்கிற வேலையைப் பார்" என்று பதில் பெற்றார்கள்.

சண்டை யாருக்கும் யாருக்கும்? இதில் சம்பந்தமில்லாத கோபலனின் மனைவி எப்படி டார்கெட் ஆனார்? இங்கு மட்டுமா? எப்போதுமே ஒரு ஆணைத் திட்டுவதற்கு, காட்சியிலேயே இல்லாத அவனின் தாயோ, சகோதரியோ, மனைவியோ சம்பந்தப்படுத்தப்படுவது எவ்விதம்? அது சரி... ஆணை அவமானப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டு வார்த்தைகளில், அவன் வீட்டுப் பெண்களை இழிவு செய்யும் வார்த்தைகள் இல்லாத மொழிகள் ஏதாவது உலகில் உண்டா என்ன?

ஓர் அலுவலகத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் புரமோஷன் வந்தது. அது பொறுக்காத சக ஊழியர்களின் ஆணைப் பற்றிய பேச்சு... ''அவனுக்கென்ன காக்கா பிடிச்சே வாங்கிட்டான்!". பெண்ணைப் பற்றிய பேச்சு... 'காக்காய் பிடித்தாள்’ என்று நீங்கள் யூகித்தால் உங்களுக்கு சைபர் மார்க். எதிர்பார்க்கக் கூடிய கமென்ட்... ''இதெல்லாம் எப்படி புரமோஷன் வாங்கிச்சுனு தெரியாதா என்ன..?"

மார்க்கெட்டுகள்தோறும் கொட்டிக் கிடக்கும் காய்கறிகளோடு பெண் உடலைச் சம்பந்தப்படுத்தும் 'கருத்து’ நிறைந்த சினிமாப் பாடல்கள், அலுவலக பாத்ரூம்களில் எழுதப்படும் கதைகள், கார்ட்டூன்கள், பிடிக்காத பெண்ணின் மொபைல் நம்பரை தவறாக வெப்சைட்டில் விளம்பரப்படுத்தும் கயமைகள்... என்று காலந்தோறும் இந்த அவமானங்களுக்கு எத்தனை வடிவங்கள்? இன்று நேற்று நடப்பதா என்ன?

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி - இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால் 'உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால் முத்துலக்ஷ்மியை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்திருக்கிறார்கள். அப்போது டீனாக இருந்த ஒரு ஐரோப்பியர், ''கவனம் கலைகிற மாணவர்கள் வீட்டில் இருக்கட்டும். இந்த ஒரு மாணவி படித்தால் போதும்" என்று சொல்லியிருக்கிறார்.

நீநதி போல ஓடிக் கொண்டிரு !

இந்தச் சம்பவத்தைப் பற்றிப் படித்ததில் இருந்து, என் மனதில் ஒரு காட்சி அடிக்கடி விரியும். நீண்ட தலைப்பு வைத்த புடவையும், எண்ணெய் தடவி அழுந்த வாரிய தலைப் பின்னலுமாக தனியே ஒரு பெண் படித்துக் கொண்டிருக்க, மாணவர்கள் பலர் பார்த்துப் பார்த்து கேலி செய்யும் காட்சி. எளிமையாகவும், பலம் அற்றவளைப் போலும் காட்சி தரும் அந்த பெண், இதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து பறந்து சிகரம் தொடும் காட்சி. ஆம்! அவமானம், கேலி என்று காலில் தைத்த முட்களைப் பற்றிக் கவலையில்லாமல் முத்துலக்ஷ்மி ரெட்டி போன்றவர்கள் அன்று நடந்த நடைதான், பின்னால் வந்த நமக்குப் படிக்கப் பாதை அமைத்தது, இல்லையா?

என்ன பெரிய அவமானம்? அது என்ன தூக்க முடியாத பெரும்பாரமா அல்லது விழுங்க முடியாத களிமண் உருண்டையா? யார் அசுத்தம் செய்தாலும், கழிவுப் பொருட்களைக் கலந்தாலும்கூட நதிகள் அதைத் தாங்கி ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. 'ஐயையோ, அசுத்தம் ஆகி விட்டேனே’ என்று நதி நின்று விட்டால், அது நாற்றம் பிடித்த குட்டையாகி விடும். சுடும் வரை தான் சூரியன் என்பது போல, ஓடும் வரைதான் நதி.

ஒன்றை நினைவு கொண்டால் போதும். விடியாத இரவென்று ஏதுமில்லை. விட்டு விடுதலையாக முடியாத அவமானம் என்று எதுவுமேயில்லை.

இரண்டு நாள் வீட்டுக்குள் அடைந்து, அழுது கொண்டிருந்த கோபாலின் மனைவி கல்பனாவை மூன்றாம் நாள் நானே தேடிப் போய்ப் பார்த்தேன்.

''சுவர்ல எவனோ எழுதினதுக்காகவா வீட்டுக்குள்ளே அடைஞ்சு அழறீங்க?"

''என் விதி. இனிமே நான் எப்படித் தெருவுல தலை காட்ட முடியும்?" - மீண்டும் பெருங்குரலெடுத்து, முகத்தில் அறைந்து அழ ஆரம்பித்தார்.

''உங்களுக்கு 40 வயசா? மொத்த ஆயுசு 80 வருஷம்னு வெச்சுக்கங்களேன். இன்னும் 40 வருஷம் வெளியே போகாம வீட்டுக்குள்ளே அழப் போறீங்களா?"

கல்பனா அதிர்ந்தாற் போலப் பார்த்தார்.

''என்னிக்காவது வெளியே வந்துதானே ஆகணும் கல்பனா. அதை ஏன் இன்னிக்குச் செய்யக் கூடாது? என்ன, உங்க முதுகுக்குப் பின்னாடி, 'இவங்களைப் பத்திதான் சுவர்ல எழுதியிருந்தது’னு எவனாவது பேசுவான். அதுதானே பயம்? 'ஆமாம், என்னைப் பத்திதான் எவனோ கிறுக்கினான்’னு பதில் சொல்லலாம் கல்பனாÕ’ என்றேன். அவரிடமிருந்து பதிலே இல்லை.

இரண்டு நாள் கழித்து வெளியே வந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் உயிர் திரும்பப் பூத்திருந்தது!

ஓவியம் ஷிவராம்

நீநதி போல ஓடிக் கொண்டிரு !
-நதி ஓடும்...
நீநதி போல ஓடிக் கொண்டிரு !
நீநதி போல ஓடிக் கொண்டிரு !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism