Published:Updated:

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

Published:Updated:

டியர் டாக்டர்
தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?
தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா?"


தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

''என் தம்பிக்கு பதின்மூன்று வயதாகிறது. சமீபநாட்களாக தூக்கத்தில் அதிகமாக புலம்புகிறான். இதுவரை அவனுக்கு இந்தப் பழக்கம் இல்லை. இது, கவலைக்குரிய மனநலப் பிரச்னையா? அப்படியெனில் தீர்வு என்ன?"

டாக்டர் ரவீந்திரநாத், மனநல மருத்து வர், மதுரை

''பொதுவாக, நம் எல்லோருக்குமே தினம் தினம் நம்மை பாதித்த விஷயங்கள் நம் கனவில் பிரதிபலிக்கும். சிலருக்கு நீண்ட நாட்களுக்கு முன் நடந்த முக்கிய சம்பவங்களும், சிலருக்கு அவர்களின் நிறைவேறாத ஆசைகளும், சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய நிகழ்வுகளும் என, அவரவரின்

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

மனநிலை, கனவில் பிரதிபலிக்கும். அப்படி தங்களுக்கு தோன்றும் கனவில் முழுமையாக 'இன்வால்வ்' ஆகிறவர்கள், அந்தக் கனவினை தூக்க நிலையிலேயே புலம்பல்களாக வெளிப்படுத்துவார்கள். இந்த 'ஸ்லீப் டாக்கிங்'தான் இப்போது உங்கள் தம்பிக்கும் ஏற்பட்டிருக்கும் பழக்கம்.

இது கவலைக்குரிய பிரச்னை அல்ல. டீன் வயதில் நுழைந்திருக்கும் உங்கள் பதின்மூன்று வயது தம்பிக்கு, இப்போது அவன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமுமே சுவாரஸ்யம், குழப்பம், ஆர்வம் என்று உணர்சிகளின் கொப்பளிப்பாகத்தான் இருக்கும். அவையெல்லாம் அவன் 'சப்கான்ஷியஸ் மைண்ட்'டில் பதி வாகி, அது அவன் கனவில் எதிரொலித்து, புலம்பல்களாக வெளிப்படும். இது இயல்பானதுதான்.

இருந்தாலும், அப்படி அவன் கனவில் புலம்புபவை அதீத பயம், மிகுந்த மன வருத்தம் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தால், அவனிடம் இதமாகப் பேசி அவன் உலகத்தில் உள்ள பிரச்னையை கேட்டறிந்து, அவனுக்கு ஆதரவாக இருங்கள்.

இந்த 'ஸ்லீப் டாக்கிங்' ஒரு கட்டத்துக்கு மேல் தானாக மறைந்துவிடும். ஒருவேளை வருடக்கணக்கில் அவனுக்கு இந்தப் பிரச்னை தொடர்ந்தால், மனநல மருத்துவரை அணுகுவது நலம். சில ஆழ்மனப் பயிற்சிகள், தூங்கச் செல்வதற்கு முன் செய்யக்கூடிய சில பயிற்சிகளின் மூலமாக இந்தப் பழக்கத்தை எளிதாக சரிசெய்துவிடலாம்."


"எப்போது பார்த்தாலும் சாமி கும்பிட சொல்கிறது மனது...காரணம் என்ன?"

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?

''எனக்கு வயது முப்பத்தி இரண்டு. சமையல் செய்யும்போது, துணி துவைக்கும்போது, டி.வி. பார்க்கும்போது என எந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும், என் மனம் மட்டும் 'சாமி கும்பிடணும்... சாமி கும்பிடணும்...' என்று அரற்றிக்கொண்டே இருக்கிறது. 'ஏதேனும் மனநல பாதிப்போ?' என பயமாக இருக்கிறது. விடுபட வழி சொல்லுங்களேன்..."

டாக்டர் ஜி.குமணன், மருத்துவக்கல்லூரி மனநலத்துறைத் தலைவர், தேனி

''அதிகமாக ஒன்றின் மீது பற்று வைப்பது, அல்லது மீண்டும் மீண்டும் ஒரேவிதமான சிந்தனைகளிலேயே மனம் சிக்கிக்கொள்வது போன்ற பிரச்னைகளுக்கு 'எண்ண சுழற்சி நோய்' (Obsessive compulsive disorder) என்று பெயர். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருப்பது, பீரோ லாக்கரை அடிக்கடி திறந்து பார்த்துக்கொள்வது, வீட்டிலிருக்கும் 'கேட்'டின் கம்பிகளை எப்போது பார்த்தாலும் எண்ணிக் கொண்டே இருப்பது என... இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக வெளிப்படும். உங்களுக்கு 'சாமி கும்பிடணும்' என்ற எண்ணமாக!

கவலை வேண்டாம். பிரச்னையின் நிலையைப் பொறுத்து, கவுன்சிலிங், 'நடத்தை மாற்று சிகிச்சை' (Behaviour therapy), மனநலம் சீர்படுத்தும் மருந்துகள் என இவற்றின் மூலம் பரிபூரண குணம் பெறலாம். உடனடியாக மன நல மருத்துவரை அணுகி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!"


"கர்ப்பப்பை கட்டி ஆபரேஷன், கருத்தரிப்பை பாதிக்குமா?"

"எனக்கு கர்ப்பபையில் சிறுசிறு கட்டிகள் இருந்ததால் (பாலி சிஸ்டிக் ஓவரி), ஒருமுறை அறுவை சிகிச்சை மூலமும், ஒருமுறை லேப்ராஸ்கோபிக் சர்ஜரி மூலமாகவும் அதை நீக்கினார்கள். அதற்குப் பின் இந்த இரண்டு வருடங்களாக எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை. இந்த அறுவை சிகிச்சைகளால் என் கருத்தரிப்பு பாதிக்கப்பட்டிருக்குமா... தெளிவுபடுத்துங்களேன்...''

டாக்டர் ராஜேந்திரன், லேஸர் சர்ஜன், மதுரை

"அறுவை சிகிச்சையோ, லேஸர் சிகிச்சையோ ஒருவரின் கருத்தரிக்கும் இயல்பை எவ்விதத்திலும் பாதிக்காது. அதேசமயம், உங்களின் 'பாலி சிஸ்டிக் ஓவரி' பிரச்னைக்கு அறுவை, லேஸர் சிகிச்சைகள் செய்துகொண்டுள்ள நீங்கள், அந்தப் பிரச்னையில் இருந்து முழு நிவாரணம் பெற்றுவிட்டீர்களா என்பதைக் குறிப்பிடவில்லை. அந்தப் பிரச்னை பூரண குணமாகாத பட்சத்தில் அதுவே உங்களின் கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கலாம். இன்னும் வேறேனும் மருத்துவக் காரணங்களும் இருக்கலாம்.

எனவே, ஒரு மகப்பேறு சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் கீழ் உங்களின் கர்ப்பம் தடைபடுவதற்கான பிரச்னையைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுங்கள்.''

தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?
 
தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?
தூக்கத்தில் புலம்புவது மனநல பிரச்னையா ?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism