Published:Updated:

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

Published:Updated:

சுபி
படம் ஆ.முத்துக்குமார்
'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!
'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!


லக அளவில் பதினான்கு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட 'இன்டர்நேஷனல் விசிட்டர்ஸ் லீடர்ஷிப் புரோகிராம்' அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இரு பெண்களில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமதியும் ஒருவர்.

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

அங்கே 'பெண்கள் மற்றும் நீதி' என்ற தலைப்பில் பேசச் சென்றிருந்தவர், பெற்று வந்திருப்பவை ஏராளமான அனுபவங்கள்.

"அமெரிக்காவில், 'சின்சினாட்டி யூனியன் பெத்தல்' என்று ஒரு அமைப்பு உள்ளது. பாலியியல் தொழில் செய்பவர்களை அதிலிருந்து மீட்கும் வேலையில் இறங்கியுள்ள இவர்கள், அந்தப் பெண்களுக்குத் தேவையான உதவியையும் பாதுகாப்பையும் அளிப்பதுடன், வேண்டிய நிதி, பயிற்சிகள் அளித்து அவர்களை தொழில் முனைவோராகவும் உருவாக்குகின்றனர்.

அப்படி அவர்களால் பயன் பெற்ற ஒரு பெண், பாலியியல் தொழில் செய்யும்போது தான் பட்ட கஷ்டங்களையும், இந்த அமைப்பில் சேர்ந்த பிறகு தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் அந்த அமைப்பின் டாக்குமென்ட்ரி படம் ஒன்றில் வெளிப்படையாக பேசியதுடன், தான் இப்போது ஒரு சுயதொழில் முனைவோராகி இருப்பதை... கண்களில் நீர் வழியக் கூறினாள். அதேபோல தொழிலில் இருந்து வெளியே வந்த ஒரு பெண், விற்பனை பிரதிநிதியாக 'ஸ்டார்' நிலையை அடைந்திருந்ததும் ஆச்சர்யமாக இருந்தது'' என்ற சுமதி,

"பாலியல் தொழிலாளிகள் பற்றிய இன்னொரு கருத்தரங்கிலோ, 'பாலியியல் தொழிலை ஒழிக்க முடியாது. அதேசமயம் அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கினால் அந்தத் தொழிலில் உள்ள முறைகேடுகளைத் தவிர்க்க முடியும்' என்று ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.

'ஒரு குழந்தையிடம், 'உன் அம்மா என்ன தொழில் செய்கிறாள்?' என்று கேட்டால், 'என் அம்மா உரிமம் பெற்ற பாலியியல் தொழிலாளி' என்று அந்தக் குழந்தையால் சொல்ல முடியுமா? எனவே, நடைமுறைகளை மாற்றுவதைவிட, அந்தப் பெண்களை நல்வழிப்படுத்துவதுதான் தீர்வு' என்று என் கருத்தை முன் வைத்தேன். 'இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா?' என்று கேட்டார்கள். நம் நாட்டின் 'தேவதாசி' விஷயத்தை சுட்டிக் காட்டினேன்.

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!

'முன்பு, எங்கள் நாட்டில், 'தேவதாசி' என்ற பெய ரில் பெண்களை கோயிலுக்கு நேர்ந்துவிடுவதும், ஆண் கள் பலரும் அந்தப் பெண்களைத் தவறாகப் பயன்படுத்து வதும் நடைமுறையில் இருந்தது. பெரும் முயற்சி களுக்குப் பிறகு 'தேவதாசி' முறையே ஒழிக்கப்பட்டு விட்டது' என்ற என் கருத்தை முன் வைத்த நான், 'தொட்டில் குழந்தைத் திட்டம்', 'குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்', 'மகளிர் சுய உதவிக்குழுக்கள்' பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னேன். ஆச்சர்யத்தோடு குறித்துக்கொண்டார்கள்'' என்ற சுமதி, அங்கு வழக்கிலிருக்கும் சட்ட விஷயங்களையும் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.

" 'கார்னல் சட்டப் பள்ளி'க்கு சென்றது, என்னை வியப்பிலாழ்த்திய அனுபவம். நம் நாட்டில் சட்டப்படிப்பை முடித்தவர்கள் முறையாக பார்கவுன்சிலில் பதிவு செய்த பிறகே கோர்ட்டில் 'பிராக்டீஸ்' செய்ய முடியும். ஆனால், அங்கே துடிப்பு நிறைந்த மாணவர்களுக்கு, கோர்ட்டில் கேஸ் நடத்த வாய்ப்புத் தருகிறார்கள். இங்கே சட்டப்படிப்பை முடித்து, முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் கேஸ் நடத்த குறைந்தது 15 வருடங்களாவது தேவைப்படும். ஆனால், அங்கே திறமைக்கே முதலிடம்'' என்றவர்,

"அங்கு 'மிட்டவுன் கம்யூனிட்டி' என்று ஒரு நீதிமன்றம் இருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர் கூண்டில் நிறுத்தப்படும்போது, 'நீ வழக்கைச் சந்திக்கிறாயா, இல்லை சமுதாய சேவை செய்கிறாயா?' என்று கேட்கிறார்கள். குற்றவாளி சேவை செய்வதாக சொன்னால், அவருக்கு 'மிட்டவுன்' என்று எழுதப்பட்ட சீருடை வழங்கப்படுகிறது. தெரு கூட்டுதல், பெயின்ட் அடித்தல் போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சிறப்பாக பணியாற்றும் பட்சத்தில் அந்த நபர் மீதான 'எஃப்.ஐ.ஆர்.' பைலை நீதிமன்றம் 'குளோஸ்' செய்துவிடுகிறது. மக்களும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி நண்பராக ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு குற்றவாளியை திருத்த தண்டனையைவிட, இந்தச் சீர்திருத்தம் நல்ல முறையென்று எனக்குப் பட்டது!'' என்று சிலாகித்துப் பேசிய சுமதி,

"அங்கே பெற்ற அனுபவங்களை, நம் நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கப் போகிறேன். விரைவில் நம் நாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சமூக பிரச்னைகளை களைவதற்கான தீர்வுகள் நோக்கிப் பயணப்படவிருக்கிறேன்!'' என்றவருக்கு வாழ்த்துகள் தந்து விடைபெற்றோம்!

'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!
 
'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!
'தேவதாசி' ஒழிப்பும்...அமெரிக்க ஆச்சர்யமும்..!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism