அரங்குளநாதர் எங்க ஊர் பெண்ணை கருணையோட ஏத்துக்கிட்டதால, நாங்களும் அதே நம்பிக்கையோட, பக்தியோட, உரிமையோட அவர்கிட்ட எங்க பிரார்த்தனைகளை எல்லாம் சொல்லி, அவரோட அருளை வாங்கிக்கறோம்!" என்று இறைவனின் பால் தங்களுக்கிருக்கும் பக்தியை விளக்கினார் ராஜகுமாரி!
கிழக்கு பார்த்திருக்கும் கோயிலின் ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நம்மை வரவேற்கிறார் அரங்குளநாதர். சுயம்புவாக தோன்றிய இவருக்கு கோயில் கட்டியவன் துவாபர யுகத்தில் வாழ்ந்த சோழமன்னன் கல்மாஷபாதன். அதற்கும் ஒரு புராணக் கதை இருக்கிறது.
மன்னனுக்குக் குழந்தை இல்லாத குறை நீங்க, இங்கிருக்கும் இந்த லிங்கத்தை கண்டுபிடித்து வழிபடுமாறு சொன்னார் அகத்தியர். இங்கு வந்து சேர்ந்த மன்னன், பல இடங்களிலும் தேடியும் சிவலிங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது வழியில் ஒரு பொன்பனையைப் பார்த்த மன்னன், அதன் அழகில் மயங்கி அங்கேயே தங்கி ‘வல்லம்' என்ற ஒரு நகரையும் நிர்மாணித்துக் கொண்டான். அவனுக்குரிய உணவுப் பொருட்களை பல்வேறு இடங்களிலும் இருந்தும் சேகரித்து அனுப்பினார்கள் மந்திரி பிரதானிகள். வழியில் ஓரிடத்தில் மட்டும் அந்த உணவுப் பொருட்கள் ஒரு கல் மீது கொட்டிவிடுவது அன்றாட வாடிக்கையானது. ஆத்திரப்பட்ட மன்னன், வாளால் அந்தக் கல்லை வெட்டினான். காயம்பட்ட கல்லில் இருந்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்தது. அதற்குப் பிறகுதான்தான் வெகுநாட்களாக தான் தேடிவந்த லிங்கம் அதுவே என்பதை உணர்ந்தான் மன்னன். இறைவனின் தரிசனத்தில் மகிழ்ந்த மன்னன், கட்டியதுதான் இந்தக் கோயில்.
சாமி தரிசனம் செய்துவிட்டு முன்மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள் அறந்தாங்கி, மறமடக்கி கிராமத்தில் இருந்து வந்திருந்த தனஸ்ரீ- வெங்கடாசலம் தம்பதி. "பிள்ளைங்க பிறந்த நேரம் சரியில்லைனா பல தோஷங்கள் உருவாகும்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட தோஷங்கள் நீங்கவும், நோய்நொடிகள் எதுவும் புள்ளைகள அண்டாம இருக்கவும், இங்க வந்து குழந்தைய பெரியநாயகிகிட்ட |