Published:Updated:

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Published:Updated:

விக்ருதி ஆண்டு பலன்கள்!
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்


மேஷம் முற்போக்குவாதிகளே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

சுக்கிரன் ராசிக்குள்ளேயே நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 28.5.10 முதல் வலுவடைவதால் அது முதல் நிம்மதியடைவீர்கள். 2.5.10 முதல் குரு பகவான் 12-ம் வீட்டில் மறைவதால் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 6-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வ தால் சொத்து வாங்குவீர்கள். மாமனார், மாமியார் மதிப்பார்கள். உங்களின் கனவு இல்லம் இந்த வருடத்தில் நனவாகும். வருடம் முழுக்க கேது சாதகமாக இருப்பதால் வி.ஐ.பி-க்களின் உதவியுடன் சாதிப்பீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். 9-ம் வீட்டில் ராகு தொடர்வதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் அமையும்.

இந்த விக்ருதி ஆண்டு உங்களின் கனவுகளை நிறைவேற்றுவதுடன் நிம்மதியானதாகவும் இருக்கும்.

பரிகாரம் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். ஆதரவற்ற பிள்ளைகள் கல்வி பெற உதவுங்கள்.


 

ரிஷபம் ஓய்வில்லா உழைப்பாளிகளே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள் 2.5.10 முதல் குரு பகவான் 11-ம் வீட்டில் வந்தமர்வதால் புது முயற்சிகள் பலிதமாகும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சாதகமாக முடியும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் சனி நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். இந்த வருடம் முழுவதும் ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் குடும்பத்தில் அவ்வப்போது விரக்தி, ஏமாற்றம் வந்து நீங்கும். 28.11.2010 முதல் 5.1.2011 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் அலைச்சல், டென்ஷன், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். லாபம் பெருகும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும்.

இந்த ஆண்டு உங்களுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுத் தரும்.

பரிகாரம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மாற்றுத்திறனுடையவர்களுக்கு உதவுங்கள்.


மிதுனம் மிதவாதிகளே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

உங்கள் ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது விக்ருதி ஆண்டு பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும் மற்றும் உங்களது 10-வது ராசியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் அன்பாக பேசுவார். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 2.5.10 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் இனந்தெரியாத கவலைகள், உறவினர் பகை, வேலைச்சுமை வந்து நீங்கும். 4-ம் வீட்டில் சனி தொடர்வதால் செலவுகள் துரத்தும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால் முன்கோபம், கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

இந்த ஆண்டு உங்களை வியர்வையால் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.


கடகம் கலாரசிகர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

உங்கள் ராசிநாதன் சந்திரன் 9-ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் சோர்ந்த முகம் மலரும். பணப்பிரச்னை, காரியத்தடைகள் நீங்கும். வீட்டில் சந்தோஷம் பொங்கும். கணவருக்கு வருமானம் உயரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். உங்கள் யோகாதிபதி குரு பகவான் மே 2.5.10 முதல் ராசிக்கு 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. உடல் உபாதையில் இருந்து விடுபடுவீர்கள். 3-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் தடைபட்ட அரசு காரியங்கள் முடியும். வீடு மாறுவீர்கள். ராகு 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் சொத்து வாங்குவீர்கள். என்றாலும், 12-ல் கேது நிற்பதால் சில நேரங்களில் அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். இரும்பு, உணவு, கெமிக்கல் வகைகள் மூலம் லாபம் வரும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயரும்.

விக்ருதி ஆண்டு உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

பரிகாரம் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்துக்குச் சென்று வணங்குங்கள். வாழ்விழந்த பெண்ணின் மறுமணத்துக்கு உதவுங்கள்.


சிம்மம் முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

குரு பகவான் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். கணவரின் அனுசரணை அதிகரிக்கும். கேது லாப வீட்டில் தொடர்வதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். 2.5.10 முதல் உங்கள் யோகாதிபதி குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். என்றாலும், குரு சொந்த வீட்டில் அமர்வதால் அந்நிய நபர்கள் மூலம் ஆதாயமுண்டு. மகளுக்கு நல்ல வரன் அமைவார். 5-ல் ராகு நிற்பதால் பூர்விக சொத்தில் பிரச்னை வரலாம். பாதச்சனி தொடர்வதால், மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் அநாவசியமாக நுழையாதீர்கள். உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் கடையை நவீனமாக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புரோக்கரேஜ், உணவு வகைகளால் பணம் வரும். உத்யோகத்தில் பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விக்ருதி ஆண்டு ‘தன் கையே தனக்கு உதவி’ என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.

பரிகாரம் அருகிலுள்ள சித்தர் பீடத்துக்குச் சென்று வாருங்கள். உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுங்கள்.


கன்னி ஈர மனசு உள்ளவர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

உங்கள் ராசிநாதன் புதனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிலும் மிளிர்வீர்கள். விரக்தி, வேதனையிலிருந்து விடுபடுவீர்கள். 2.5.10 முதல் குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும். கணவர் பொறுப்பாக நடந்து கொள்வார். அவருக்கு புது வேலை கிடைக்கும். சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுப்பீர்கள். உடல் நலக் கோளாறு ஏற்படக்கூடும். 4-ம் வீட்டில் ராகு நிற்பதால் வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவதற்கு முன் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். உணவு, ஸ்டேஷனரி, கட்டுமான பொருட்கள், ஏற்றுமதி, இறக்கு மதி வகைகளால் வருவாய் கூடும். உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பளம் உயரும்.

புதிதாகப் பிறக்கும் விக்ருதி ஆண்டு வருத்தத்திலிருந்த உங்களை மகிழ வைப்பதுடன், வசதியையும் தரும்.

பரிகாரம் அருகிலுள்ள துர்க்கையம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள்.


துலாம் பிறர் மனம் புண்படாதபடி பேசுபவர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு பலமாக நிற்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் துணிச்ச லாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். கணவர் மனம் விட்டுப் பேசுவார். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்க்கும்போது இந்த வருடம் பிறப்பதால் வருமானம் ஓரளவு உயரும். வீட்டுக்குத் தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர் கள். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உங்களுக்கு 6-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பழைய கடனை பைசல் செய்தாலும், புது கடனும் வாங்க வேண்டி வரும். ஏழரைச்சனி தொடர்வதால் விரக்தி, ஏமாற்றம் வந்து போகும். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையறியாது உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 2.5.10 முதல் குரு பகவான் 6-வது வீட்டில் மறைவதால் வீண் பழி, திடீர் பயணங்கள் வரும். 9-ம் வீட்டில் கேது நிற்ப தால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு வரலாம். வியாபாரத்தில் கூட்டு வேண்டாம். கமிஷன், உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் இடமாற்றம் இருக்கும். வேலைச்சுமை உண்டு. அதிகாரிகள் உதவுவார்கள்.

விக்ருதி ஆண்டு சின்னச் சின்ன சிக்கல்களைத் தந்தாலும், இறுதியில் வெற்றி தரும்.

பரிகாரம் அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள். ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்துக்கு உதவுங்கள்.


விருச்சிகம் தன்மானமுள்ளவர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

சனி பகவான் லாப வீட்டில் நிற்கும் வேளையில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலவும். மாமனார், மாமியார் உதவுவார்கள். வாகனம் வாங்குவீர்கள். 4-ல் அமர்ந்து கொண்டு உங்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் குரு பகவான் 2.5.10 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் இனி நிம்மதியடைவீர்கள். பயம், முன்கோபம் விலகும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் படிக்க இடம் கிடைக்கும். பூர்விக சொத்துப் பிரச்னைகள் சாதகமாக முடியும். என்றாலும், ராகு-கேது சரியில்லாததால் உங்களுக்கும், கணவருக்குமிடையே சிலர் சண்டை மூட்டிவிட வாய்ப்பு உண்டு. தூக்கம் குறையும். வியாபாரத்தில், லாபம் கணிசமாக உயரும். ஸ்டேஷனரி, மருந்து, துணி வகைகளால் பணம் வரும். உத்யோகத்தில் அவமானங்களிலிருந்து விடுபடுவீர்கள். பதவி உயரும். சம்பளம் கூடும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

இந்த ஆண்டு உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன் வளமான வாழ்க்கையையும் அமைத்துத் தரும்.

பரிகாரம் அருகிலுள்ள ஸ்ரீமுருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். கூலி வேலை செய்யும் பெண்களுக்கு உதவுங்கள்.


தனுசு எதிர்நீச்சல் போடுபவர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

உங்களின் சுக வீடான 4-ம் ராசியில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பணவரவு திருப்தி தரும். கணவர் அவ்வப்போது கோபப்பட்டாலும், அன்பு குறையாது. வீடு வாங்க லோன் கிடைக்கும். பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்துத் தகராறு தீரும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதனான குரு 2.5.10 முதல் 4-ம் வீட்டில் நுழைவதால் சுபச் செலவுகள், எதிர்பாராத பயணங்கள் உண்டு. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனம் அவ்வப்போது தொந்தரவு தரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் முன்கோபம், கணவருடன் வாக்குவாதம், சோர்வு வந்து நீங்கும். வருடம் முழுக்க ராசிக்கு 10-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

இந்த ஆண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும் முடிவில் முன்னேற வைக்கும்.

பரிகாரம் அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை வணங்குங்கள். பார்வையிழந்தவர் களுக்கு உதவுங்கள்.


மகரம் நியாயவாதிகளே!
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

தன வீடான 2-ம் வீட்டில் குருவும், 4-ம் வீட்டில் சுக்கிரனும், புதனும் அமர்ந்திருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மேலும் உங்கள் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத் தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவர் நேசிப்பார். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மகளுக்கு நல்ல வரன் அமையும். 9-ம் வீட்டில் சனி தொடர்வதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். ஷேர் லாபம் தரும். ராகு 12-ல் மறைந்ததால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 2.5.10 முதல் 3-ல் குரு அமர்வதால் மன உளைச்சல், மறைமுக அவமானம், வீண் செலவுகள். உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பழைய வாடிக்கையாளர், பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும்.

இந்த விக்ருதி ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்களை உருவாக்கும்.

பரிகாரம் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்லுங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.


கும்பம் கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் புத்துணர்ச்சி பெருகும். கணவர் பாசமாகப் பேசுவார். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 2.5.10 முதல் குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை குறையும். உடல் நிலை சீராகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். உங்கள் ராசிநாதனான சனி பகவான் 8-வது வீட்டில் மறைந்து அஷ்டமத்துச் சனியாக இந்த வருடம் முழுக்க நீடிப்பதால் தயக்கம், தடுமாற்றம், விரக்தி, தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். ஆனால், உங்கள் ராசிநாதனை 2.5.10 முதல் குரு பகவான் பார்த்துக் கொண்டே இருப்பதால் கெடுபலன்கள் குறையும். வருடம் பிறக்கும்போது கேது பகவான் 5-ம் வீட்டில் இருப்பதால் மனக்குழப்பம், வீண் விரயம், தூக்கமின்மை வந்து போகும். ராகு பகவான் லாப வீட்டில் தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

விக்ருதி ஆண்டு ஓரமாக ஒதுங்கியிருந்த உங்களை முதல் வரிசையில் உட்கார வைக்கும்.

பரிகாரம் அருகிலிருக்கும் மாரியம்மனை வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.


மீனம் மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பவர்களே!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதாலும், 2.5.10 முதல் உங்கள் ராசிநாதனான குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்து அமர்வதாலும் தாழ்வுமனப்பான்மையும், எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும். ராசிக்கு 7-ம் வீட்டில் இந்த ஆண்டு முழுக்க சனி தொடர்வதால் கணவருடன் ஈகோ பிரச்னை வரக்கூடும். நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் உங்கள் வார்த்தையை மதிப்பார்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். கேது 4-ம் வீட்டில் இந்த வருடம் முழுக்க தொடர்வ தால் தொலை தூர புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராகு 10-ல் நிற்பதால் அமைதியாக இருந்து பெரிய விஷயங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யப்பாருங்கள். உத்யோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். அதிகாரிகள் உங்களைக் குறை கூறினாலும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

விக்ருதி ஆண்டு உங்கள் பலம் மற்றும் பலவீனம் இரன்டையுமே உணர வைக்கும்.

பரிகாரம் பிரதோஷ தினத்தன்று அருகிலிருக்கும் சிவாலயத்துக்கு சென்று வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

14-4-2010, புதன்கிழமை காலை மணி 6.55-க்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி,ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில், நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்ப ராசியில், புதன் ஹோரையில் வைதிருதி நாமயோகம், நாகவம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற, பஞ்சபட்சியில் மயில் துயில் கொள்ளும் நேரத்தில் புதன் தசை, ராகு புத்தியில் விக்ருதி ஆண்டு பிறக்கிறது.
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
 
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism