Published:Updated:

அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !

அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !

அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !

அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !

Published:Updated:

ராஜம் முரளி
அழகே...ஆரோக்கியாமே...
அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !
அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பளபளப்பாக்கும் 'பழ பேக்'!

பழங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... அழகுக்கும்தான்! பழவகை 'பேக்'களை பயன்படுத்தி சருமத்தையும், உடலையும் அழகாக்கும் வித்தையை இந்த இதழில் பார்ப்போம்.

அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !

நன்றாக தெளிந்த தர்பூசணி ஜூஸ் ஒரு கிளாஸ் எடுங்கள். அதை ஐஸ் கியூப் டிரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். முகம், கை, கால் கண்களில் இந்த ஐஸ்கட்டிகளை ஒற்றி எடுங்கள். சொரசொரப்பு நீங்கி சருமம் மிருதுவாவதுடன், நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

வேலை, அலைச்சலால் சோர்ந்து போகும் கண்களுக்கு, இந்த 'ஃப்ரூட் பேக்'ஒரு 'கண்கட்டு'வித்தை. மஸ்லின் துணியை உள்ளங்கை அளவுக்கு வெட்டி, அவற்றை இணைத்து, இரண்டு சிறுசிறு பைகளாக தைத்துவிடுங்கள். பிறகு, அதை தண்ணீரில் நனைத்து, வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் எல்லாவற்றிலும் தலா ஒரு சிறு துண்டு வீதம் போட்டு, பையின் வாயைத் தைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

தூங்கப் போகும்போது கண்ணுக்கு மேல் இந்த பைகளை ஒரு மணி நேரம் வைத்திருங்கள். சோர்வுற்ற கண்களுக்கு நல்ல ரெஸ்ட் கிடைக்கும். வாழைப்பழம், கருவளையத்தைப் போக்கும். தர்பூசணி கருவிழியை பளபளப்பாக்கும். பப்பாளி வறட்சியில்லாமல் வைத்திருக்கும். உருளைக்கிழங்கு, வெள்ளரி நன்றாக ப்ளீச் செய்து குளிர்ச்சியைக் கொடுக்கும். இமைகளில் முடி உதிர்வதும் நிற்கும்.

புள்ளி, தழும்பு ஆகியவை காரணமாக முகம் பொலிவிழந்து போகலாம். கமலா ஆரஞ்சு பழம் ஒன்றை தண்ணீர் விடாமல் அரைத்து ஜூஸாக்கினால் கால் கப் வரும். மெல்லிய காட்டன் துணியால் ஜூஸைத் தொட்டுத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தழும்புகள் மறைவதுடன், நல்ல கலரையும், பளபளப்பையும் தரும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை வீணாக்காமல், வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரில் வெந்தயத்தூளை சேர்த்து தலையை அலசலாம். பேன், பொடுகு, அரிப்பு இதெல்லாம் மறைந்து கூந்தல் பளபளப்பாகும்.

கொட்டை எடுத்த 2 பேரீச்சம்பழத்தை அரைத்து, தர்ப்பூசணி ஜூஸ் கலந்து முகத்தில் 'பேக்'போடுங்கள். பத்து நிமிடம் கழித்து கழுவினால் 'டல்'லான முகம் பொலிவாக மின்னும்.

'முகம் மட்டுமா... தலையும் வறட்சியாக இருக்கிறதே...' என்று கவலைப்படுபவர்கள், நெல்லிக்காய் ஜூஸ், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் தலா ஒரு கப் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி, ஓசை அடங்கியதும் இறக்கவும். இந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால், தலைக்கு குளிர்ச்சியை தந்து, வறட்சியைப் போக்கி, கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு நரை முடியையும் தடுக்கும்.

அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !
-மிளிரும்...
அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !
அழகே..ஆரோக்கியமே - பளபளப்பாக்கும் 'பழ பேக்' !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism